சில Emoji-களை சமூக வலைத்தளத்தில் உபயோகித்ததால் 12 வயதான சிறுமி மீது சட்ட நடவடிக்கை

சமூக வலைத்தளம் ஒன்றில் Emoji சிலவற்றை உபயோகித்தமையினால் 12 வயதான சிறுமி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது என்று கூறினால் உங்களது முகத்தில் வரும் Emoji எப்படி இருக்கும்?

ஆம் நண்பர்களே.. இன்ஸ்டக்ரம் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்ட சில Emoji களை உபயோகித்ததால் Fairfax, Virginia-வை சேர்ந்த 12 வயதான பாடசாலை சிறுமி மீது சட்ட நடவடிக்கை மேட்கொள்ளப்பட்டுள்ளது.


குறித்த சிறுமி, தனது இன்ஸ்டக்ரம் கணக்கில் கீழே படத்தில் காட்டியுள்ளவாறன வாசகத்தை சில Emoji-களை பயன்படுத்தி பதிந்துள்ளார்.


அதாவது அந்த பதிவிலே தான் கல்வி கற்கும் குறிப்பிட்ட பாடசாலையை எதிர்க்கும் விதாமான Emoji-களை பயன்படுத்தி தனது பதிவை அப்டேட் செய்து இருக்கிறார்.

இதை அவதானித்த போலீஸ் அதிகாரிகள், குறித்த மாணவியின் மீது பாடசாலையை அவமதித்த குற்றம் மற்றும் கணணியை தவறாக உபயோகித்த குற்றம் என்ற பிழைகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் குறிப்பிட்ட பாடசாலைக்கு இது குறித்து தெரிவித்து இதை பதிவு செய்தவர் யார் என்ற விசாரணையை ஆரம்பித்து இருக்கிறார்கள்.
விசாரணையின் முடிவில் குறித்த மாணவி பொய்யான ஒரு இன்ஸ்டக்ரம் கணக்கில் இருந்து வேறு ஒரு மாணவியின் பெயரை பயன்படுத்தியே இந்த பதிவை அப்டேட் செய்து இருந்தது தெரிய வந்தது. அதன் பின்னர், குறித்த பதிவு அப்டேட் செய்யப்பட்ட IP முகவரியை ட்ரேஸ் செய்து குறித்த மாணவியை கண்டு பிடித்து இருக்கிறார்கள்.

விசாரணையின் போது குறித்த மாணவி, தான் செய்த குற்றத்தை ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து மாணவியின் தாய் மேலும் கருத்து தெரிவிக்கையில் பாடசாலையில் தனது மகளுக்கு செய்யப்பட்ட கேலி நடவடிக்கைகளின் காரணமாகே அவர் இவ்வாறன பதிவொன்றை அப்டேட் செய்து இருந்ததாக தெரிவித்து இருந்தார்.

குறித்த தகவலை அமெரிக்காவின் பிரபல்ய தளமான Washington Post
வெளியிட்டுள்ளது.