நம்பலாமா வேண்டாமா? என்று அனைவரையுமே தனக்கு தானே கேள்வி கேட்டுக்கொள்ளும் அளவுக்கு அனைவரையுமே ஆச்சிரியப்படுத்தியுள்ள விடயம் தான் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் 251 ரூபாய் ஸ்மார்ட் போன்.
ப்ரீடம் ஸ்மார்ட் போன் பல்வேறு நேர் மற்றும் எதிர்மறையான கருத்துக்களை தன்னுள் வாங்கிக்கொண்டு இன்று சந்தையில் முன்பதிவுகளை ஆரம்பித்துள்ளது.
இன்று சமூக வலைத்தளம் மற்றும் இணையத்தை திறந்தாலே ப்ரீடம் ஸ்மார்ட் போன் பற்றிய பல்வேறு ஆதரவான மற்றும் எதிர்ப்பான கருத்துக்களை காணக்கூடியதாய் உள்ளது.
எமது தளத்திலும் ஏற்கனவே இது குறித்த எதிர்மறையான இரண்டு பதிவுகள் எழுதப்பட்டன. அது முற்று முழுதாக இந்த ஸ்மார்ட் போன் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே தெளிவு படுத்துவதட்கேயாகும்.
அந்த பதிவுகளை நீங்கள் வாசித்து பார்த்தால் உங்களுக்கே புரியும்.
எந்த ஒரு விடயத்திலும் தீமை இருப்பது போல் நன்மைகளும் இருக்கின்றன. நன்மை இருப்பது போல் தீமைகளும் இருக்கின்றன. ஆகவே இந்த ப்ரீடம் 251 ஸ்மார்ட் போனின் எதிர்மறையான பக்கத்தை ஏற்கனவே எமது தளம் ஆராய்ந்து விட்டது. ஆகவே இந்த பதிவில் ப்ரீடம் ஸ்மார்ட் போன் தயாரிப்பு நோக்கம் ஏன் இப்படியானதாக இருக்க கூடாது என்று பார்ப்போம்.
இந்த ஸ்மார்ட் போன் அறிமுகமானது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த மிக முக்கியமாக அமைந்தது அதன் அதிகுறைந்த விலையே.
சாதாரணமாக ஸ்மார்ட் போன்களுக்கு என்று ஒரு குறிப்பிட்ட விலை காணப்படுகின்றது. அதில் இருந்து 99% ஆனா விலை குறைக்கப்பட்டு ஒரு ஸ்மார்ட் போன் சந்தையில் அறிமுகமாகிறது என்றால், அது கட்டாயமாக பல்வேறு தரப்பினர் மத்தியில் ஆச்சிரியத்தையும் குழப்பத்தையும் உண்டாக்கும்.
மக்களிடையே அந்த ஆச்சிரியத்தையும் குழப்பத்தையும் மிகச் சரியாக உண்டாக்கி உள்ளது இந்த ப்ரீடம் ஸ்மார்ட் போன்.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முதற்படியாக இந்த 251 ரூபாய் ஸ்மார்ட் போன் அறிமுகமாகி மக்களிடையே ஆச்சிரயத்தை ஏற்படுத்தி உள்ள போதிலும், 4 மாதங்களின் பின்னரே குறிப்பிட்ட ஸ்மார்ட் போன் எமது கைகளில் வந்து சேரும் என்ற விடயம் மக்களிடையே இந்த தயாரிப்பு மீதான சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அது மட்டும் இல்லாமல் குறிப்பிட்ட நிறுவனம் பற்றிய ஆன்லைன் கருத்துக்கள் எதிர்மறையாக இருப்பதும் இந்த பயத்துக்கான ஒரு காரணமாக உள்ளது.
ஆனால் இந்த ஸ்மார்ட் போனை தயாரித்த குறிப்பிட்ட நிறுவனத்தின் நோக்கம் என்னவென்று பார்த்தால், விவசாயி முதல் அம்பானி வரை தொழினுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பதே ஆகும்.
ஒரு சாதாரண விவசாயி ஒரு ஸ்மார்ட் போனை பயன்படுத்த வேண்டும் என்றால், கட்டாயமாக அதன் விலை மிக மிக குறைவானதாகவே இருக்க வேண்டும். அந்த வகையில் பார்த்தால் இந்த 251 ரூபாய் விலையானது நியாயமானதாகே தெரிபடுகின்றது.
இந்த திட்டத்தை இந்திய அரசாங்கம் ஆரம்பித்து இருந்தால், கட்டாயமாக அனைவராலும் எந்த வித கருத்து வேறுபாடும் இன்றி ஏற்றுக்கொள்ள கூடியதாய் இருந்து இருக்கும். ஆனால் இந்த திட்டத்தை ஒரு தனியார் நிறுவனம் செயட்படுத்துவதால் அனைவரின் சந்தேகப்பார்வையையும் தன் பக்கம் திருப்பி உள்ளது. ஏனென்றால், 251 ரூபாய் செலவில் ஒரு ஸ்மார்ட் போனை தயாரித்து முடிப்பது என்பது கேள்விக்குறியான விடயம்.
ஆகவே எந்த வித இலாப நோக்கமும் இல்லாமல் ஒரு தனியார் நிறுவனம் ஏன் இப்படியான ஒரு முயற்ச்சியில் இறங்க வேண்டும் என்பதே அனைவரினதும் கேள்வி.
இதே விடயத்தை மறுமுனையில் பார்த்தால், நம்முடைய நாட்டிலேயே 1000 -2000 ரூபாய்க்கு சீனா நாட்டில் தயாரிப்பான ஸ்மார்ட் போன்கள் கிடைக்கின்றன. அதுவும் குறிப்பிட்ட ஒரு நிறுவனம் சீனா நாட்டு தயாரிப்புக்களை இறக்குமதி செய்து தங்களுக்கென பெரிய இலாபம் ஒன்றையும் வைத்து கொண்டு மிகச்சிறிய விலையில் எமக்கு சீனா ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்கின்றது.
இப்படியான ஒரு நிலை இருக்கும் போது, எம்முடைய நாட்டு தயாரிப்பான இந்த ப்ரீடம்-251 ஸ்மார்ட் போன் வெறும் 251 ரூபாய்க்கு கிடைப்பதில் பெரிய ஆச்சிரியம் இல்லை என்றே தோன்றுகிறது.
இந்த தயாரிப்பு, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வெற்றிகரமான முதல் படியாக இருக்க வேண்டும் என்று நாமும் பிரார்த்தித்து கொள்வோம்.
Tech in Tamil
Tech News
சைனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்மார்ட் போன்கள் ₹1000-க்கு கிடைக்கும் போது, உள்நாட்டு தயாரிப்பான ப்ரீடம் போன் ₹251-க்கு கிடைப்பதில் என்ன ஆச்சிரியம்?
