எமது தளத்தில் ஏற்கனவே அன்றொஇட் ஸ்மார்ட் போனை ரூட் செய்வது எப்படி என்றும் ரூட் செய்வதன் நன்மை தீமைகள் என்ன என்றும் பதிவுகள் எழுதப்பட்டன.
குறிப்பிட்ட சில சிறப்பு செயலிகளின் உதவியுடன் உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனை மிக இலகுவாக ரூட் செய்து கொள்ள முடியும். அன்றொஇட் போனை ரூட் செய்து கொள்ள உதவும் மிகச்சிறந்த செயலிகளை எமது முன்னைய இரண்டு பதிவுகளில் பரிந்துரைத்து இருந்தேன். அந்த பதிவுகளை நீங்கள் தவற விட்டு இருந்தால், கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தெரிந்து கொள்ள முடியும்.
அன்றொஇட் போனை ரூட் செய்வதற்கான 12 சிறந்த செயலிகள்
மிகவும் இலகுவான முறையில் வெறும் ஐந்தே நிமிடத்தில் உங்களது அன்றொஇட் போனை ரூட் செய்து கொள்ள வேண்டுமென்றால், கீழே வழங்கப்பட்டிருக்கும் பதிவை வாசித்து பாருங்கள்.
அன்றொஇட் போனை 5 நிமிடத்திற்குள் ரூட் செய்வது எப்படி?
ஆனால் உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனை ரூட் செய்து கொள்ள முன்னர், ரூட் செய்வதன் நன்மை தீமைகளை தெரிந்து கொள்ள வேண்டும். அன்றொஇட் ரூட் செய்வதன் நன்மை தீமைகளை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தெரிந்து கொள்ள முடியும்.
அன்றொஇட் போனை ரூட் செய்வதன் நன்மை தீமைகள் என்ன?
சரி.. எப்படி உங்களது ரூட் செய்யப்பட்ட அன்றொஇட் போனை மிக இலகுவான முறையில் அன்-ரூட் செய்து கொள்வது என்று பார்ப்போம்.
இந்த வேலையை மிக இலகுவாக ஒரு சில கிளிக் -களில் செய்து முடிக்க உதவுகிறது அன்றொஇட் அன்-ரூட் செய்வதற்கான கீழ்வரும் சிறப்பு செயலி.
இந்த செயலியை தரவிறக்கி உங்களது அன்றொஇட் போனில் நிறுவி கொள்ளுங்கள்.
அடுத்து ரூட் செய்யப்பட்ட உங்கள் அன்றொஇட் போனில் இந்த செயலியை ஆரம்பித்து கீழே காட்டியுள்ளவாறு செட்டிங்க்ஸ் பகுதிக்கு செல்லுங்கள்.
அதிலே Full Unroot என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து தோன்றும் திரையில் Continue என்பதை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான். இப்போது உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போன் அன்-ரூட் ஆக தயாராகி விட்டது.
அன்றொஇட் போனை அன்-ரூட் செய்வதற்கான செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ள முடியும்.
அன்றொஇட் அன்-ரூட் சிறப்பு செயலி
சிறிது நேரம் பொறுத்திருந்து, அன்-ரூட் செயன்முறை முடிவடைந்த பின்னர், உங்களது அன்றொஇட் போனை ஒரு முறை Restart செய்து விட்டு மறுபடியும் உபயோகிக்க தொடங்குங்கள்.


