கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்-க்கு தேவையான சரியான டிரைவர்ஸ்-களை தேடிக்கொள்வது எப்படி?

விண்டோஸ் கணணிகளை உபயோகிக்கும் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சினை தான், தங்களுடைய கணனியில் உள்ள மென்பொருட்களுக்கான  சரியான டிரைவர்ஸ்-ஐ தேடிக்கொள்வது.

எமது கணணியை வைரஸ் தாக்கியோ அல்லது வேறு ஏதேனும் ஒரு காரனத்திற்காக போர்மட் செய்ய நேர்ந்தால் நாம் எதிர்கொள்ளும் அடுத்த பிரச்சினை,எமது கணனிக்கான சரியான டிரைவர்ஸ்.

எமது கணனிக்கான சரியான டிரைவர்ஸ்-களை நாம் நிறுவாத சந்தர்ப்பத்தில் எமது கணணி சரியாக தொழிற்பட மறுக்கும்.

ஆகவே எமது கணணியை நாம் போர்மட் செய்தாலோ அல்லது ஏதேனும் புதிதாக மென்பொருள் அல்லது ஹர்ட்வேர் நிறுவினால் கட்டாயமாக சரியான டிரைவர்ஸ்-ஐ இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.


ஆனால் சரியான டிரைவர்ஸ்-ஐ தேடிப்பெற்றுக் கொள்வது பெரும்பாலானோருக்கு சிரமமான காரியமாகவே உள்ளது. ஆகவே இன்றைய பதிவில் எமது கணணியை போர்மட் செய்தாலோ அல்லது எமது கணனியில் நிறுவிய ஒரு மென்பொருளுக்கான சரியான டிரைவர்ஸ்-களை எப்படி பெற்றுக்கொள்வது என்று கூறுகிறேன்.

எமது கணனியில் நாம் நிறுவப்போகும் டிரைவர்ஸ் ஆனது, புதிய பதிப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் எமது கணணி எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் இயங்கும்.

பரிந்துரைக்கப்படும் பதிவு



சரி.. எமது கணனிக்கு தேவையான புதிய பதிப்பு டிரைவர்ஸ்-களை எங்கே இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று பார்ப்போம்.

கணனிக்கு தேவையான ஒவ்வொரு டிரைவர்ஸ்-இனதும் புதிய பதிப்பை இணையத்தில் தேடுவது என்பது மிகவும் சிரமமான காரியம். ஆகவே இந்த வேலையை இலகு படுத்தவே ஆன்லைன் டிரைவர்ஸ் தளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தளங்களின் உதவியோடு எமது கணனிக்கு தேவையான சரியான டிரைவர்ஸ்-களை மிக இலகுவாக தேடிக்கொள்ளலாம்.
ஆன்லைன் மூலம் டிரைவர்ஸ்-களை பெற்றுக்கொள்வதட்கு சிறந்த தளங்களாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தளங்கள் காணப்படுகிறது.

Driver Pack Solution
Driver Identifier

இதிலே Driver Pack Solution எனும் ஆன்லைன் தளத்தின் மென்பொருளை உபயோகித்து எமது கணனிக்கான சரியான டிரைவர்ஸ்-களை எப்படி பெற்றுக்கொள்வது என்று கூறுகிறேன்.

இந்த தளத்திற்கு சென்று அவர்களுடைய ஆன்லைன் டிரைவர்ஸ் மென்பொருளை உங்களது கணனிக்கு தரவிறக்கி கொள்ளுங்கள்.


அடுத்து தரவிறக்கிய மென்பொருளை உங்களது கணனியில் ரன் செய்யுங்கள்.

இப்போது இந்த மென்பொருளானது உங்களது கணனிக்கு தேவையான அனைத்து டிரைவர்-களையும் ஸ்கேன் செய்து பட்டியலிட்டு காட்டும்.


காட்டப்படும் பட்டியலில் இருந்து உங்களுக்கு தேவையான டிரைவர்ஸ்-களை தெரிவு செய்து உங்களது கணனியில் நிறுவிக்கொள்ளலாம்.

குறிப்பு

ஆன்லைன் மூலம் உங்களது கணனிக்கான டிரைவர்ஸ்-களை நிறுவிக்கொள்ள வேண்டும் என்றால், உங்களது கணனியில் இணைய இணைப்பு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.