ஸ்மார்ட் பாவனையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ்அப்
பற்றிய மற்றுமொரு சுவாரஸ்யமான பதவி இன்று உங்களுக்கு தருகிறேன்.
ஏற்கனவே முன்னைய பதிவொன்றில் வாட்ஸ்அப்-இல் குறிப்பிட்ட ஒரு போட்டோவை இன்னொரு போடோவினுள் மறைத்து எப்படி உங்களது நண்பர்களுக்கு அனுப்புவது என்று கூறி இருந்தேன். அந்த பதிவின் சுருக்கத்தை கீழே தருகிறேன்.
பொதுவாக நாம் வாட்ஸ்அப் மூலம் எமது போட்டோகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது வழக்கம். ஆகவே நாம் போட்டோ ஒன்றை எம்முடைய நண்பர் ஒருவருக்கு அனுப்பியதும், குறிப்பிட்ட போட்டோ ஆனது நண்பருடைய வாட்ஸ்அப்-ல் தரவிறக்கப்பட முன், போட்டோவினது தோற்றமானது மங்கலாக காட்டபடும்.
இவ்வாறு மங்கலாக காட்டப்படும் போட்டோ மூலம் ஒரு சிறிய கண்கட்டி வித்தையை செய்ய முடியும். அதாவது நீங்கள் அனுப்பிய போட்டோ உங்களுடைய நண்பரின் வாட்ஸ்அப்-ல் தரவிறக்கப்பட முன் ஒரு தோற்றமும், தரவிறக்கப்பட்ட பின் வேறொரு தோற்றத்தையும் காட்டும் படி செய்யலாம்.
இந்த வேலையை மிக இலகுவாக செய்து முடிக்க உதவுகிறது கீழே வழங்கப்பட்டிருக்கும் அன்றொஇட்-க்கான சிறப்பு செயலிகள்.
இந்த பதிவின் தொடர்ச்சியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வாட்ஸ்அப்-ல் ஒரு போட்டோக்குள் இன்னுமொரு போட்டோவை மறைத்து அனுப்புவது எப்படி?
ஆகவே இன்றைய பதிவில் உங்களது வாட்ஸ்அப் மூலம் எப்படி பொய்யான ஒரு வாட்ஸ்அப் உரையாடலை உருவாக்குவது என்று பார்ப்போம்.
இவ்வாறு உருவாக்கும் பொய்யான வாட்ஸ்அப் உரையாடலை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு அவர்களை குழப்பமடைய செய்யலாம்.
வாட்ஸ்அப்-க்கான பொய்யான உரையாடல்களை எமது அன்றொஇட் அல்லது ஐபோனில் இருந்து உருவாக்கி கொள்ள கீழே குறிப்பிட்டுள்ள சிறப்பு செயலிகள் எமக்கு உதவுகின்றது.
ஐ போன்
அன்றொஇட்
அன்றொஇட்-க்கான செயலி மூலம் வாட்ஸ்அப் மட்டுமில்லாது பேஸ்புக், அன்றொஇட் குறும் செய்தி என்று பல்வேறுபட்ட பொய்யான உரையாடல்களை உருவாக்கி கொள்ள முடியும்.
உங்களது அன்றொஇட் அல்லது ஐபோனிற்கு குறிப்பிட்ட செயலியை தரவிறக்கி கொள்ளுங்கள்.
தரவிறக்கிய செயலியை உங்களது ஸ்மார்ட் போனில் நிறுவுங்கள்.
அடுத்து இந்த செயலியை ஆரம்பித்து உங்களது தேவைக்கேற்றவாறு பொய்யான வாட்ஸ்அப் உரையாடல்களை உருவாக்கி அதை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
