ஸ்மார்ட் போன்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமாக காணப்படும் அன்றொஇட் போனுக்கான பல உபாயங்கள் பற்றி எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்டு உள்ளன.
அவைகளிலே நான் கடந்த நாட்களில் அன்றொஇட் போனில் இருந்து தவறுதலாக அழிந்து போன போடோஸ் மற்றும் வீடியோகளை எவ்வாறு மிக இலகுவாக மீட்டெடுத்து கொள்வது என்று பதிவொன்றை எழுதி இருந்தேன்.
அந்த பதிவை நீங்கள் தவறவிட்டு இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனில் இருந்து அழிந்து போன அனைத்து கோப்புக்களையும் எப்படி மீட்டெடுப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
அன்றொஇட் போனில் அழிந்த பைல்-களை பாதுகாப்பாக மீட்டெடுப்பது செய்வது?
ஆனால், வருமுன் காப்பது என்றுமே சிறந்தது என்று கூறுவதற்கு அமைய இன்றைய பதிவில் உங்களது அன்றொஇட் போனில் இருக்கும் பைல்கள் தவறுதால அழிந்து விட்டால் அதை போனில் இருக்கும் 'ரீசைக்கிள் பின்'-ஐ பயன்படுத்தி எப்படி மிக இலகுவாக அடுத்த நொடியே மீட்டெடுத்து கொள்வது என்று பார்ப்போம்.
ஆகவே விண்டோஸ் கணனிகளில் காணப்படும் ரீசைக்கிள் பின்-ஐ போலவே
இந்த உபாயமும் உங்களது அன்றொஇட் போனில் தொழிற்படும். எம் அனைவருக்குமே தெரிந்தது போல், நாம் எமது கணனியில் இருந்து ஏதாவது குறிப்பிட்ட ஒரு பைல்-ஐ அழித்து விட்டால், அது ரீசைக்கிள் பின்-இல் தற்காலிகமாக தங்கி இருக்கும். குறிப்பிட்ட அந்த பைல் எமக்கு தேவையென்றால் ரீசைக்கிள் பின்-இல் சென்று மறுபடியும் மீட்டெடுத்து கொள்ள முடியும்.
அதே உபாயத்தை தான், இன்று நாம் எமது அன்றொஇட் போனிலும் செயற்படுத்த போகிறோம்.
இந்த வேலையை மிக இலகுவாக செய்து முடிக்க உதவுகிறது கீழ்வரும் அன்றொஇட் போனுக்கான சிறப்பு செயலி.
இந்த செயலியை தரவிறக்கி உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனில் நிறுவி கொள்ளுங்கள்.
உங்களது போனில் இருந்து அழிக்கப்படும் எந்த வகையான பைல்-கள் இந்த செயலியில் தங்க வேண்டும் என்பதை செட்டிங்க்ஸ்-இற்கு சென்று தெரிவு செய்து கொள்ள முடியும்.
அத்தோடு நீங்கள் உங்களது போனில் இருந்து அழிக்கும் பைல்-கள் எவ்வளவு காலம் இந்த செயலில் தங்கி இருக்க வேண்டும் என்பதை கூட தெரிவு செய்து கொள்ள முடியும்.
இந்த பயனுள்ள செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ள முடியும்.
அன்றொஇட் சிறப்பு செயலி
ஆகவே இந்த அருமையான செயலியை உங்களது அன்றொஇட் போனில் நிறுவிக்கொள்வதன் மூலம், உங்களது போனில் இருந்து தவறுதலாகவோ அல்லது தேவையில்லை என்றோ நீங்கள் அழித்த அனைத்து கோப்புகளையும் மிக இலகுவாக மீட்டெடுத்து கொள்ள முடியும்.
Tech in Tamil
Android
Tips and Tricks
உங்கள் அன்றொஇட் போனில் ரீசைக்கில் பின் வசதியை ஏற்படுத்தி கொள்வது எப்படி?


