இணையத்தை உபயோகிக்கும் போது அல்லது பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை உபயோகிக்கும் போது குறிப்பிட்ட சில லிங்க்களை கிளிக் செய்து வேறு ஒரு தளத்திற்கோ அல்லது ஏதேனும் வீடியோ ஒன்றையோ நாம் பார்வையிடுவது வழக்கம்.
இந்த முறையை குறி வைத்தே பெரும்பாலும் வைரஸ்கள் பரப்பப்படுகின்றன. குறிப்பிட்ட லின்க்கில் சென்று நாம் ஏதேனும் ஒரு செயலியை அல்லது மென்பொருளை எமது கணனிக்கு அல்லது ஸ்மார்ட் போனிட்கோ நிறுவும் போது, குறிப்பிட்ட வைரஸ் எமது கணணியை அல்லது ஸ்மார்ட் போனை தொற்றிக்கொள்கிறது.
ஆனால் இந்த புதிய வைரஸ் இதற்கு எல்லாம் ஒரு படி மேலே சென்று குறிப்பிட்ட தளத்தை திறந்தாலே எமது கணணியையோ அல்லது ஸ்மார்ட் போனையோ முழுவதுமாக செயலிழக்க செய்து விடுகின்றது.
நீங்கள் இணையத்தை கணனியில் இருந்து அல்லது ஸ்மார்ட் போனில் இருந்து உபயோகிக்கும் போது கீழ்வரும் தளங்களை எந்த காரனத்திட்காகவும் திறந்து விட வேண்டாம்.
crashsafari.comஅதையும் மீறி நீங்கள் மேலே குறிப்பிட்ட தளங்களை திறந்தால் மறுநொடியே உங்களுடைய ஸ்மார்ட் போன் அல்லது கணணி செயலிழந்து போய்விடும்.
crashandroid.com
இந்த தளங்கள் எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது என்றால், குறிப்பிட்ட இந்த தளங்களை உங்களது கணனியில் அல்லது ஸ்மார்ட் போனில் இருக்கும் உலாவின் மூலம் திறந்தால், மறுநொடியே, பல ஆயிரக்கணக்கான டேப்-களில் இந்த தளங்கள் தானாக திறக்கும் வகையில் அமைத்து இருக்கின்றனர்.
ஆகவே எமது உலாவியில் இருந்து ஒரே நிமிடத்தில் பல்லாயிரக்கணக்கான ரிக்வஸ்ட் செல்லும் போது, அதை சரிவர கையாள முடியாமல் எமது ஸ்மார்ட் போன் அல்லது கணணி செயலிழக்கிறது.
கீழே காட்டப்பட்டிருக்கும் 'உலாவியின் வரலாறு'-ஐ பார்த்தால் உங்களுக்கே புரியும். குறிப்பிட்ட ஒரே நிமிடத்தல் பல ஆயிரக்கணக்கான ரிக்வஸ்ட் உலாவில் இருந்து சென்று இருக்கிறது.
ஆகவே மேலே குறிப்பிட்டுள்ள தளத்தின் லின்க்கை யாரேனும் உங்களுடன் பகிர்ந்து கொண்டால், குறிப்பிட்ட லின்க்கை கிளிக் செய்ய வேண்டாம்.
இதை நான் எனது கணனியில் முயச்சி செய்து பார்த்த மறுநொடியே எனது கணணி செயலிழந்து போனது.
குறிப்பு
கணணி அல்லது ஸ்மார்ட் போன் பற்றிய தெளிவான அறிவு இல்லையென்றால் மேலே குறிப்பிட்டுள்ள தளங்களை பரீட்ச்சித்து பார்ப்பதற்கு கூட திறந்திட வேண்டாம்.

