கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் பிரபல்யமாக பேசப்பட்ட ஒரு விடயம் தான் ப்ரீடம் 251 ஸ்மார்ட் போன். உலகின் முதலாவது அதிகுறைந்த விலையில் அறிமாகும் ஸ்மார்ட் போன் என்ற பெருமையுடன் இந்திய சந்தையில் தனது அறிமுகத்தை பதிந்த ப்ரீடம் 251 ஸ்மார்ட் போன் இந்திய மக்களிடையே பல்வேறுபட்ட நேர் மற்றும் எதிர்மறையான கருத்துக்களை தனுள்ளே வாங்கி இருந்தது நாம் யாவரும் அறிந்த விடயமே.
எமது தளத்திலும் கூட இந்த ஸ்மார்ட் போன் குறித்தான நேர் மற்றும் எதிர்மறையான பதிவுகள் வெளிவந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த பதிவுகளை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
இந்தியாவில் 251 ரூபாய்க்கு அறிமுகமாகும் ஸ்மார்ட் போன்.. இது மற்றுமொரு ஆன்லைன் ஏமாற்று வேலையா?
251 ரூபாய் ரிங்கிங் பெல் ஸ்மார்ட் போன். உண்மையிலே இந்த ஸ்மார்ட் போன் ரிங் ஆகுமா?
சைனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்மார்ட் போன்கள் ₹1000-க்கு கிடைக்கும் போது, உள்நாட்டு தயாரிப்பான ப்ரீடம் போன் ₹251-க்கு கிடைப்பதில் என்ன ஆச்சிரியம்?
சரி.. இப்போது எதற்கு முடிந்து போன விடயத்தை பேசுகிறேன் என்று பார்க்கிறீர்களா? ப்ரீடம் 251 ஸ்மார்ட் போன் குறித்தான சில முக்கிய தகவல்கள் இப்போது இணையத்தில் வெளி வந்துள்ளன.
இந்த ஸ்மார்ட் போன் முற்றுமுழுதாக ஒரு ஏமாற்று வேலை, 4 மாதங்களின் பின்னர் குறிப்பிட்ட நிறுவனம் ஸ்மார்ட் போன்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யாது என்ற கருத்து பெரும்பாலான மக்களிடையே இருந்து வந்தது.
ஆகவே இவ்வாறான கேள்விகளுக்கு விடையளிக்கும் முகமாக ரிங்கிங் பெல் நிறுவனத்தின் உரிமையாளர் சில அதிரடி முடிவுகளை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அதாவது ப்ரீடம் 251 ஸ்மார்ட் போனை பெற்றுக் கொள்வதட்காக இதுவரை 30,000 வாடிக்கையாளர்கள் தமது கிரெடிட், மற்றும் டெபிட் கார்டு மூலமாக பணம் செலுத்தி முன்பதிவு செய்து இருப்பதாகவும், இந்த பணத்தை மறுபடியும் வாடிக்கையாளர்களுக்கே திருப்பி கொடுத்து விட்டு, குறித்த ஸ்மார்ட் போனை டெலிவரி செய்யும் போது பணத்தை பெற்றுக்கொள்ளும் முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்திருக்கிறது ரிங்கிங் பெல் நிறுவனம்.
அதுமட்டுமல்லாது, 7 மில்லியன் வாடிக்கையாளர்கள் ப்ரீடம் 251 ஸ்மார்ட் போனை முற்பதிவு செய்திருப்பதாகவும், அவர்களில் 30,000 வாடிக்கையாளர்கள் மட்டுமே பணம் செலுத்துவதற்கான லின்க்கை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொடிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு ரிங்கிங் பெல் ஸ்மார்ட் போன் நிறுவனம் தற்போது பணம் செலுத்தி முற்பதிவு செய்த அனைத்து வாடிக்கையாளர்களின் பணத்தையும் திரும்ப வழங்க முடிவெடுத்துள்ளது.
ஆகவே ப்ரீடம் 251 ஸ்மார்ட் போனை பெற்றுக் கொள்வதற்கான பணப்பரிமாற்றம், போனை வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்யும் போது தான் நடைபெறும் என தெரிவித்துள்ளது.
மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த ரிங்கிங் பெல் நிறுவனம், குறித்த ப்ரீடம் 251 ஸ்மார்ட் போன் ஒன்றை விற்றால், தமது நிறுவனத்திற்கு $0.45 (டாலர்) இலாபம் இருப்பதாகவும் கூறியுள்ளது.
Tech in Tamil
Tech News
ப்ரீடம் 251 ஸ்மார்ட் போனை முற்பதிவு செய்த வாடிக்கையாளர்களின் பணத்தை திருப்பி கொடுக்கிறது ரிங்கிங் பெல் நிறுவனம்.
