ஐ-போனில் காட்டப்படும் சிம் நிறுவனத்துடைய பெயரை மறைத்து எமக்கு பிடித்த லோகோகளை தெரிய வைப்பது எப்படி?

ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானது அன்றொஇட் மற்றும் ஐபோன் ஆகும். எம்முடைய தளத்தில் அன்றொஇட் ஸ்மார்ட் போன் சம்மந்தமான பல பதிவுகள் காணப்படுகின்ற போதிலும்
ஐபோன் சம்மந்தமான பதிவுகள் குறைவாகவே காணப்படுகிறது.

ஆகவே இன்றைய பதிவில் ஐபோன் பாவனையாளர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான தகவலை கூறலாம் என்று நினைக்கின்றேன்.

நீங்கள் ஏதேனும் ஒரு மாடல் ஐபோன்-இற்கு சொந்தக்காரர் எனில் இந்த பதிவு உங்களுக்கானது. அதாவது உங்களுடைய ஐபோனில் நீங்கள் சிம் ஒன்றை உபயோகிக்கும் போது, குறிப்பிட்ட சிம் நிறுவனத்துடைய பெயர் உங்களது போனில் மேலே இடது மூலையில் காட்டப்படும்.

பரிந்துரைக்கப்படும் பதிவு


அப்படி காட்டப்படும் குறிப்பிட்ட சிம் நிறுவனத்துடைய பெயரை மறைத்து எமக்கு குறிப்பிட்ட சில பிரபல்யமான லோகோ-களை அந்த இடத்தில் 
எப்படி தெரிய வைப்பது என்று பார்ப்போம்.

இந்த வேலையை மிக இலகுவாக எம்முடைய ஐபோன்களில் செய்து முடிக்க உதவுகிறது கீழ்வரும் ஐபோனுக்கான சிறப்பு செயலி. 

ஆனால் இந்த செயலியை உங்களது ஐபோனில் நிறுவ வேண்டும் என்றால் உங்களது ஐபோன் ஆனது ஜெயில் ப்ரேக் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்படி ஜெயில் ப்ரேக் செய்யப்பட்ட ஐபோன்களில் மாத்திரமே இந்த செயலியை நிறுவிக்கொள்ள முடியும்.

ஐபோனை எப்படி ஜெயில் ப்ரேக் செய்து கொள்வது, அதன் நன்மை தீமைகள் என்ன என்பதையெல்லாம் பற்றி ஏற்கனவே எம்முடைய தளத்தில் பதிவுகளை எழுதி இருந்தேன். அந்த சிறப்பு பதிவுகளை நீங்கள் தவற விட்டு இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று ஐபோன் ஜெயில் ப்ரேக் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.



சரி.. எப்படி சிம் நெட்வொர்க் உடைய பெயரை மாற்றி எமக்கு பிடித்த லோகோகளை அந்த இடத்தில் தெரிய வைப்பது என்று பார்ப்போம்.

ஜெயில் ப்ரேக் செய்யப்பட்ட ஐபோனில் காணப்படும் "சைடியா" எனப்படும் செயலியை திறவுங்கள்.
அதிலே Search என்று இருக்கும் இடத்தில் Zeppelin என்று டைப் செய்து தேடுங்கள்.

தேடல் முடிவில் காட்டப்படும் முதலாவது செயலியை உங்களது ஐ போனில் நிறுவுங்கள்.


செயலியை நிறுவிய பின்னர், உங்களது ஐபோன் செட்டிங்க்ஸ்-இற்கு செல்லுங்கள்.

அங்கே Zeppelin எனப்படும் செயலி நிறுவப்பட்டிருப்பதை காணலாம்.

அதை திறவுங்கள். 

அங்கே Theme என்று இருப்பதில் கிளிக் செய்யுங்கள்.


அதிலே சென்று பார்த்தால், பிரபல்யமான லோகோ-களை காண முடியும்.

அவற்றில் உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு லோகோவை தெரிவு செய்வதன் மூலம் உங்களது ஐபோனில் காட்டப்படும் சிம் நிறுவனத்துடைய பெயரை மறைத்து குறிப்பிட்ட லோகோவை தெரிய வைக்கலாம்.