அன்றொஇட் மற்றும் ஐபோனில் VPN-ஐ செயற்படுத்தி டேட்டா பாவனையை கட்டுப்படுத்துவது எப்படி?

இன்று சந்தைக்கு வரும் ஸ்மார்ட் போன்கள் பல்வேறுபட்ட பயனுள்ள வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஸ்மார்ட் போன்களை உபயோகிக்கும் அனைவருமே தினம் தோறும் உபயோகிக்கும் ஒரு சேவை தான் இந்த இணையம்.

ஸ்மார்ட் போன்களில் நாம் உபயோகிக்கும் பெரும்பாலான சேவைகள் இணையம் சம்மந்தப்பட்டதாகவே உள்ளது. ஆகவே ஸ்மார்ட் போன்களை உபயோகிக்கும் அனைவருமே இணையத்தை உபயோகிக்க தவறுவதில்லை.

இப்படி ஸ்மார்ட் போனின் அனைத்து சேவைகளையுமே தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருக்கும் இணையத்தை பற்றியது தான் இன்றைய பதிவு.

ஸ்மார்ட் போன்கள் மூலம் இணையத்தை தொடர்பு கொள்ள இருப்பது இரண்டு வழிகள் தான். அவையாவன,

1. வை-பை மூலம் இணையத்தை அணுகுவது
2. போன் டேட்டா மூலம் இணையத்தை அணுகுவது


வைபை மூலம் இணையத்தை உபயோகிக்கும் போது டேட்டா முடிவடைவது பற்றி பெரிதாக எந்த பிரச்சினையும் இருக்காது. ஆனால் நீங்கள் இணையத்தை உங்களது போன் டேட்டா மூலம் உபயோகிக்கிறீர்கள் என்றால் கட்டாயமாக டேட்டா-வின் அருமை பற்றி கட்டாயமாக தெரிந்து வைத்து இருப்பீர்கள்.

ஆகவே நீங்கள் இணையத்தை போன் டேட்டா மூலம் உபயோகிக்கிறீர்கள் என்றால், எப்படி போன் டேட்டாவை முடிந்தவரை சேமித்து கொள்வது என்று பார்ப்போம்.

இந்த வேலையை மிக இலகுவாக செய்து முடிக்க உதவுகிறது அன்றொஇட் மற்றும் ஐபோனுக்கான கீழ் வரும் சிறப்பு செயலி.

அன்றொஇட் செயலி
ஐபோன் செயலி

இந்த செயலியை தரவிறக்கி உங்களது ஸ்மார்ட் போனில் நிறுவி கொள்ளுங்கள்.
நிறுவிய செயலியை உங்களது ஸ்மார்ட் போனில் ஆரம்பியுங்கள்.

அடுத்து இந்த செயலியில் காணப்படும் Start Saving என்பதை கிளிக் செய்யுங்கள்.


இப்போது உங்களது போனில் VPN செயற்பட ஆரம்பித்து விடும்.

அவ்வளவு தான். இப்போதிலிருந்து உங்களது போன் டேட்டா மூலம் நீங்கள் இணையத்தை உபயோகிக்கும் போது இந்த செயலியின் உதவியுடன் டேட்டா பாவனையானது கட்டுப்படுத்தப்படும்.

உங்களது ஸ்மார்ட் போனில் இணைய பயன்பாடு முடிவடைந்த பின்னர் மறுபடியும் இந்த செயலியை ஆரம்பித்து பார்த்தால், எவ்வளவு டேட்டா சேமிக்கப்பட்டு உள்ளது என்ற விபரங்களை பார்த்து கொள்ள முடியும்.