அதாவது வாட்ஸ்அப் குழுவில் 256 வரையான நண்பர்களை இணைத்து கொள்ளும் வசதி. ஏற்கனவே வாட்ஸ்அப்-இல் குழு வசதி அறிமுகப்படுத்தி இருந்த போதிலும் அதிலே 100 நண்பர்களையே இணைத்து கொள்ள கூடியதாய் இருந்தது. ஆனால் இப்போது இந்த வசதியானது 256 நண்பர்கள் வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
ஆகவே இன்றைய பதிவில் வாட்ஸ்அப்-இல் நீங்கள் கட்டாயம் தெரிந்து வைத்து இருக்க வேண்டிய முக்கியமான சில விடயங்களை கூறுகிறேன்.
வாட்ஸ்அப்-இல் Last Seen-ஐ மறைப்பது எப்படி?
உங்களது வாட்ஸ்அப் கணக்கை திறவுங்கள்.அதிலே கீழே குறிப்பிட்டுள்ள இடத்தை சென்றடையுங்கள்.
Settings > Account > Privacy
அங்கே Last Seen என்று இருப்பதில் Nobody என்று வழங்கி சேமித்து கொள்ளுங்கள்.
வாட்ஸ்அப்-இல் வந்த மெசேஜ்-ஐ அனுப்பியவர் அறியாதவாறு படிப்பது எப்படி?
உங்களது வாட்ஸ்அப் கணக்கை திறவுங்கள்.அதிலே கீழே குறிப்பிட்டுள்ள இடத்தை சென்றடையுங்கள்.
Settings > Account > Privacy
அங்கே Read receipts என்று இருப்பதில் போடப்பட்டிருக்கும் டிக்கை நீக்கி விடுங்கள்.
குறிப்பு
இந்த செட்டிங்க்ஸ்-ஐ செயட்படுத்துவதால் நீங்கள் யாரேனும் ஒருவருக்கு அனுப்பிய மெசேஜ்-ஐ குறிப்பிட்ட நபர் படித்து விட்டாரா என்று தெரிந்து கொள்ள முடியாது.
நண்பருடைய வாட்ஸ்அப் கணக்கை அவரது ஸ்மார்ட் போன் மூலமாகவே ஹேக் செய்வது எப்படி?
இதற்கான பதிவை ஏற்கனவே எமது தளத்தில் எழுதி இருந்தேன். அந்த பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.உங்கள் நண்பரின் WhatsApp Chat History-ஐ அவருக்கு தெரியாமல் பார்ப்பது எப்படி?
வாட்ஸ்அப் வாய்ஸ் அழைப்புக்களை மேற்கொள்ளும் போது டேட்டா அதிகளவில் வீணடிக்கப்படுவதை தடுப்பது எப்படி?
உங்களது வாட்ஸ்அப் கணக்கை திறவுங்கள்.அதிலே கீழே குறிப்பிட்டுள்ள இடத்தை சென்றடையுங்கள்.
Settings > Chat and Calls
அங்கே Low data usage என்று இருப்பதில் டிக்கை வழங்குங்கள்.
வாட்ஸ்அப் மெசேஜ்-இல் வரும் போட்டோ வீடியோ கள் தானாக Gallery-க்கு டவுன்லோட் ஆக்குவதை தடுப்பது எப்படி?
வாட்ஸ்அப் மெசேஜ்-களில் வரும் போட்டோ மற்றும் வீடியோகளை Gallery-இக்கு தானாக டவுன்லோட் ஆக்குவதை எம்மால் தடுக்க முடியும். இதை செய்து கொள்ளும் முறை பற்றி ஏற்கனவே எமது தளத்தில் பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை கீழே உள்ள லின்க்கில் சென்ன்று தெரிந்து கொள்ளலாம்.வாட்ஸ்அப்-ல் வரும் போட்டோ வீடியோகள் எமது ஸ்மார்ட் போனிற்கு தானாக டவுன்லோட் ஆகுவதை தடுப்பது எப்படி?
வாட்ஸ்அப் சிறப்பு பதிவுகள்
உங்களை வாட்ஸ்அப் சக்கரவர்த்தி ஆக்கும் சிறப்பு வாட்ஸ்அப் பதிவுகளை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வாட்ஸ்அப் மெசேஜ்-களை ஆன்லைன் செல்லாமல் வாசிக்கவும் வாசித்த பின் தோறும் நீல நிற டிக்கை மறைக்கவும் ஒரு ட்ரிக்
வாட்ஸ்அப்-ல் ஒரு போட்டோக்குள் இன்னுமொரு போட்டோவை மறைத்து அனுப்புவது எப்படி?
வாட்ஸ்அப்-ஐ கணனியில் இருந்து உபயோகிப்பது எப்படி?
மேலே குறிப்பிடப்பட்டுள்ள நண்பரின் வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்ய பயன்படுத்தப்படும் அதே முறை தான், வாட்ஸ்அப்-ஐ கணனியில் பயன்படுத்தவும் பாவிக்கப்படுகிறது.பரிந்துரைக்கப்படும் பதிவு
Android மற்றும் iPhone-க்கான சிறப்பு WhatsApp ஸ்மைலி பேக் 2016
WhatsApp-ல் வித்தியாசமான எழுத்துக்களை பயன்படுத்தி ஸ்டைலான Message-களை அனுப்புவது எப்படி?
கூகுள் Chrome மூலம் வாட்ஸ்அப் வெப்-இல் உங்களது வாட்ஸ்அப் கணக்கை கணனியில் இருந்தோ அல்லது மடிக்கணணியில் இருந்தோ உபயோகித்து கொள்ளலாம்.



