ஸ்மார்ட் போன் மூலம் இன்டர்நெட் உபயோகிக்கும் அனைவருக்குமே மிகவும் பிடித்த ஒரு விடயம் தான் வை-பை. நீங்கள் உங்களது ஸ்மார்ட் போனில் இருந்து இணையத்தை உபயோகிக்க வை-பை இணைப்புக்களை உபயோகிப்பதால் பல நன்மைகள் உண்டு.
இதிலே குறிப்பிட்ட சில நன்மைகளாக, எமது ஸ்மார்ட் போனில் பேட்டரி சார்ஜ் வீணடிக்கப்படாமல் இருப்பது, அதே போல் கட்டுப்பாடற்ற இணைய உபயோகம் போன்றவைகளை கூறலாம்.
ஆகவே இன்றைய பதிவில் வை-பை சம்மந்தமான ஒரு தகவலை பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.
நாம் எம்முடைய நண்பர்களின் அல்லது எம்முடைய அலுவலக வை-பை இணைப்புக்களில் இணையும் போது, பெரும்பாலும் குறிப்பிட்ட நபர் எங்களுக்கு வை-பை கடவுச்சொல்லை கூறாமல் அவரே வைபை
கடவுச்சொல்லை நமது ஸ்மார்ட் போனில் டைப் செய்து வை-பை நெட்வொர்க் உடன் இணைத்து தருவார்.
இப்படியான சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட எமது ஸ்மார்ட் போன் மூலமாக மட்டுமே எமக்கு வை-பை நெட்வொர்க்-ஐ உபயோகிக்க முடியும்.
ஆகவே இப்படியான சந்தர்ப்பமொன்றில் குறிப்பிட்ட வை-பை நெட்வொர்க்-கினுடைய கடவுச்சொல்லை எமது ஸ்மார்ட் போனில் இருந்தபடியே எப்படி தெரிந்து கொள்வது என்று பார்ப்போம்.
இவ்வாறு வை-பை நெட்வொர்க்-கினுடைய கடவுச்சொல்லை தெரிந்து கொள்ளும் பட்ச்சத்தில் எம்மால் எம்முடைய மற்றைய ஸ்மார்ட் போனிலோ, அல்லது மடிக்கனணியிலோ வை-பை இணைப்பை உபயோகிக்க முடியும்.
ஏற்கனவே முன்னைய பதிவொன்றில் வை-பை கடவுச்சொல் இல்லாமல் QR Code மூலம் எப்படி வை-பை நெட்வொர்க் உடன் இணைவது என்று கூறி இருந்தேன். அந்த பதிவை தவற விட்டு இருந்தால் கீழே உள்ள லின்க்கில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
WiFi Password இல்லாமல் QR Code மூலம் ஒரு Phone-ஐ உங்கள் WiFi Network உடன் இணைப்பது எப்படி?
சரி.. நீங்கள் இணைந்துள்ள வை-பை நெட்வொர்க்-இன் கடவுச்சொல்லை ஸ்மார்ட் போனில் இருந்தபடியே எப்படி தெரிந்து கொள்வது என்று பார்ப்போம்.
இந்த வேலையை இலகுவாக செய்து முடிக்க கீழே குறிப்பிட்டுள்ள அன்றொஇட் ஸ்மார்ட் போனுக்கான சிறப்பு செயலிகள் உதவுகின்றது.
வை-பை பாஸ்வேட்
வை-பை பாஸ்வேட் ரிகவரி
வை-பை பாஸ்வேட் வீவர்
இந்த செயலிகளை மேலே உள்ள லின்க்கின் மூலமாகவோ அல்லது உங்களுடைய ஸ்மார்ட் போனில் இருக்கும் Play Store-இல் இருந்தோ தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.
மேலே குறிப்பிட்டுள்ள ஒரு சில செயலிகளை உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனில் உபயோகிக்க வேண்டுமென்றால் உங்களது அன்றொஇட் போன் ரூட் செய்யப்பட்டிருக்க வேண்டும். உங்களது அன்றொஇட் போன் ரூட் செய்வது எப்படி அதன் நன்மை தீமைகள் என்ன என்று கீழே உள்ள லின்க்கில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
அன்றொஇட் ரூட் செய்வது எப்படி? அதன் நன்மை தீமைகள் என்ன?
இப்போது நிறுவிய செயலியை உங்களது ஸ்மார்ட் போனில் ஆரம்பியுங்கள். அடுத்த நொடியே, நீங்கள் இணைந்து இருக்கும் வை-பை நெட்வொர்க் உடைய கடவுச்சொல், அதே போல் இதற்கு முன்னர் இணைந்து இருந்த வை-பை நெட்வொர்க் உடைய கடவுச்சொல் போன்றவைகளைகளை தெரிந்து கொள்ளலாம்.
இப்போது உங்களுக்குக்கு தேவையான வை-பை நெட்வொர்க் உடைய கடவுச்சொல்லை குறித்து வைத்துக்கொண்டு உங்களுடைய மற்றைய ஸ்மார்ட் போனில் இருந்தோ அல்லது உங்களுடைய மடிக்கணணியில் இருந்தே குறிப்பிட்ட வை-பை நெட்வொர்க் உடன் இணைய முடியும்.
இந்த முறையை உபயோகித்து நம்முடைய வை-பை நெட்வொர்க்-ஐ வேறு யாரேனும் ஹேக் செய்து எம்முடைய வை-பை இணைப்பில் இருந்து இணையத்தை உபயோகிக்கிறார்களா என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இதற்கான பதிவை சில நாட்களுக்கு முன்னர், எமது தளத்தில் எழுதி இருந்தேன். அந்த பதிவை கீழே உள்ள லின்க்கில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் WiFi நெட்வொர்க் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்று தெரிந்து கொள்வது எப்படி?
இந்த பதிவு பயனுள்ளது என்று நினைத்தால், உங்களுடைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

