ஐ-போனை ஜெயில் ப்ரேக் செய்வது எப்படி? அனைத்து ஐபோன் மாடல்-களுக்கும் பொருந்தும்

இந்த பதிவில் உங்களது ஐபோனை எப்படி வெற்றிகரமாக ஜெயில் ப்ரேக் செய்து கொள்வது என்று கூறுகிறேன். ஆனால் அதற்கு முன்னர் ஐபோன் ஜெயில் ப்ரேக் என்றால் என்ன? அதன் நன்மை தீமைகள் என்ன என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஐபோன் ஜெயில் ப்ரேக் செய்வதன் நன்மை தீமை பற்றி முன்னைய பதிவில் கூறி இருந்தேன்.

உங்களது ஐபோனை ஜெயில் ப்ரேக் செய்ய முன்னர் கட்டாயமாக இதன் நன்மை தீமைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஐபோன் ஜெயில் ப்ரேக் செய்வதன் நன்மை தீமைகளை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

ஐபோன் ஜெயில் ப்ரேக் செய்வதன் நன்மை தீமைகள் என்ன?

சரி இப்போது உங்களது ஐ போனை எப்படி ஜெயில் ப்ரேக் செய்வது என்று பார்ப்போம்.


ஐபோனை ஜெயில் ப்ரேக் செய்ய முன்னர், உங்களது ஐபோனின் சாப்ட்வேர் வெர்சன் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஏனென்றால் உங்களது ஐபோன் சாப்ட்வேர் வெர்சன் ஆனது மிகவும் புதிய பதிப்பு என்றால், இதை ஜெயில் பிரேக் செய்வதற்கான மென்பொருள் வரும் வரை காத்திருக்க வேண்டும். சாதாரணமாக ஆப்பிள்  நிறுவனம் தங்களுடைய புதிய வெர்சன்-ஐ வெளியிட்ட சில நாட்களிலேயே அதை ஜெயில் ப்ரேக் செய்வதற்கான மென்பொருட்கள் வெளியிடப்படும்.

இந்த பதிவை எழுதும் போது ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய சாப்ட்வேர் வெர்சன் ஆனது 9.2.1. இந்த வெர்சன் OS-ஐ ஜெயில் ப்ரேக் செய்வதற்கான மென்பொருள் இன்னும் வெளிவரவில்லை.

ஆகவே இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட ஆப்பிள் OS 9.0.2 வெர்சன்-ஐ எப்படி ஜெயில் ப்ரேக் செய்வது என்று உங்களுக்கு காட்டுகிறேன்.

உங்களது ஐபோனை ஜெயில் ப்ரேக் செய்ய மிகவும் சிறந்த மென்பொருட்களாக இரு மென்பொருட்களை கூறலாம்.

1 PanGu
2 TaiG

மேலே வழங்கப்பட்டிருக்கும் மென்பொருட்களின் இணையத்தளத்திட்கு சென்றால், இந்த மென்பொருட்களை பயன்படுத்தி எந்த எந்த ஆப்பிள் OS வெர்சன்-களை ஜெயில் ப்ரேக் செய்து கொள்ள முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.


உதாரணமாக PanGu ஜெயில் ப்ரேக் மென்பொருளை பயன்படுத்தி எப்படி உங்களது ஐபோனை ஜெயில் ப்ரேக் செய்யலாம் என்று காட்டுகிறேன்.

ஆகவே உங்களது ஐபோன் OS வெர்சன்-ஐ தெரிந்து கொண்டு அதை ஜெயில் ப்ரேக் செய்யக்கூடிய PanGu மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.
முதாவது உங்களது போனில் இருக்கும் பைல்-களை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். (ஜெயில் ப்ரேக் செய்யும் போது எந்த விதமான பைல்-களும் அழியாது. இருந்த போதிலும் முன்னெச்சரிக்கையாக Backup எடுப்பது நல்லது.)

அடுத்து உங்களது ஐபோனில் போடப்பட்டிருக்கும் Security Code-ஐ (Off) நீக்குங்கள்.

அடுத்து Find My iPhone என்று இருக்கும் வசதியையும் Off செய்யுங்கள்.

இப்போது உங்களது ஐபோனை USB கேபிள் மூலம் கணனியுடன் இணையுங்கள்.

அடுத்து தரவிறக்கிய ஜெயில் ப்ரேக் மென்பொருளை உங்களது கணனியில் ஆரம்பியுங்கள்.


அடுத்து Start என்பதை கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவு தான். இப்போது உங்களது ஐபோன் ஜெயில் ப்ரேக் ஆக தயாராகிவிட்டது. ஜெயில் ப்ரேக் நடைமுறையின் போது உங்களது போன் சில முறை Restart ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயில் பிரேக் முடிந்த பின்னர் உங்களது ஐ போனில் Cydia எனப்படும் புதிய செயலி ஒன்று காணப்படும். இதில் சென்று ஆப்பிள் ஆப்ஸ் ஸ்டோரில் செயலிகளை தரவிறக்குவது போன்றே அனைத்து செயலிகளையும் தரவிறக்கி நிறுவிக்கொள்ள முடியும்.