DNS என்றால் என்ன அதை எப்படி எமது கணனியில் உபயோகிப்பது என்று ஏற்கனவே எமது தளத்தில் பதிவொன்றை எழுதி இருந்தேன். அதன் பிரதியை கீழே உங்களுக்கு தருகிறேன். ஆகவே கீழ் குறிப்பிட்டுள்ள முறையை பயன்படுத்தி உங்களது கணனியின் இணைய வேகத்தை இலவசமாக அதிகரித்து கொள்ளுங்கள்.
உங்களது கணணி குறிப்பிட்ட ஒரு இணைய இணைப்பு ஒன்றுடன் இணைந்து இருக்கும் போது சாதாரண DNS-கு பதிலாக மிக வேகமாக இயங்க கூடிய பப்ளிக் DNS-ஐ உபயோகிக்கும் பட்ச்சத்தில் உங்களது இணைய வேகமானது எந்த வித மென்பொருளும் இன்றி இன்னும் அதிகரிக்கப்படும்.
நீங்கள் குறிப்பிட்ட ஒரு இன்டர்நெட் நெட்வொர்க் உடன் இணையும் போது, உங்களது கணணி ஆனது, அந்த குறிப்பிட்ட நெட்வொர்க் உடைய DNS-ஐயே பெற்றுக்கொள்ளும். அனால் இதை நீங்கள் மாற்றி, அதிவேக DNS-ஐ உபயோகிக்கும் போது உங்கள் இணைய வேகமானது இருந்ததிலும் பார்க்க வேகமாக்கப்படும்.
ஆகவே உங்களது இணைய வேகத்தை இலவசமாக அதிகரித்து கொள்ள உதவும் சிறந்த 10 பப்ளிக் DNS முகவரிகளை கீழே பட்டியலிட்டுள்ளேன்.
சரி.. இந்த முகவரிகளை எமது கணனியில் எப்படி உபயோகிப்பது என்று பார்ப்போம். இதை உங்களுக்கு செய்து காட்ட, நான் கூகுளின் பப்ளிக் DNS முகவரியை எடுத்து கொள்கிறேன்.
இப்போது கணனியின் இணைய வேகத்தை எப்படி கூகுள் DNS மூலம் இலவசமாக அதிகரித்து கொள்வது என்று பார்ப்போம்.
உங்கள் கணனியில் Start-ஐ கிளிக் செய்யுங்கள்.
பின் Control Panel, அங்கே Network and Sharing Center என்பதில் கிளிக் செய்யுங்கள்.
அடுத்து Local Area Connection என்பதை கிளிக் செய்யுங்கள்.
என்னுடைய கணனியில் மேலே காட்டியிருக்கும் படத்தில் Connection 2 என்று காணப்படுகிறது. இது நான் எனது ஸ்மார்ட் போன் மூலம் கணணிக்கான இணைய இணைப்பை வழங்கி உள்ளதாலேயே இப்படி காட்டுகிறது.
நீங்கள் கணணியில் இணையத்தை Router மூலமாக பெற்றுக்கொள்ளும் பட்ச்சத்தில் Connection 2 என்று காட்டப்படமாட்டது என்பதை கருத்திட்கொள்ளுங்கள்.
அடுத்து Properties என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து கீழே காட்டியிருப்பது போல் IPv4 என்பதை Double Click செய்யுங்கள்.
அடுத்ததாக Use Following DNS என்பதை தெரிவு செய்து நான் கீழே படத்தில் காட்டியுள்ளவாறு
8.8.8.8
8.8.4.4 என்று வழங்கி OK என்பதை கிளிக் செய்யுங்கள்.
இதே முறையை பயன்படுத்தி நான் ஏற்கனவே மேலே வழங்கியுள்ள சிறந்த 10 பப்ளிக் DNS முகவரிகளில் ஏதேனும் ஒன்றை உங்கள் கணனியில் உபயோகித்து கொள்ள முடியும்.
நான் வழங்கியிருக்கும் பட்டியலில், உங்களது இணைய இணைப்புடன் மிகவும் வேகமாக செயல்படக்கூடிய DNS-ஐ பரீட்ச்சித்து பார்த்து, குறிப்பிட்ட அந்த முகவரியை உபயோகியுங்கள்.





