மறைவான இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராகளை அன்றொஇட் போன் மூலம் கண்டு பிடிப்பது எப்படி?

தொழிநுட்ப வளர்ச்சியானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்று கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் அனைத்துமே கணணிமயமாக்கப்பட்டு விட்டது. இவ்வாறு நாளுக்கு நாள் இமாலய வளர்ச்சி கண்டு வரும் இந்த தொழினுட்பத்தால், எமக்கு நன்மையையும் உண்டு. அதே போல் தீமைகளும் உண்டு.

ஆகவே இன்றைய எமது பதிவில் இந்த தொழிநுட்ப வளர்ச்சியால் எமது சமூகத்தில் ஏற்பட்டு உள்ள ஒரு தீமையான விடயத்தை பகிர்ந்து கொள்ள போகிறேன்.

தொழிநுட்ப வளர்ச்சியின் மிக முக்கிய அங்கமாக வளர்த்து இருப்பது தான் இந்த மொபைல் போன். எமது  ஸ்மார்ட் போன்களை நாம் பல்வேறு தேவைகளுக்காக உபயோகித்து கொண்டு இருக்கிறோம்.

அதிலே மிக முக்கியமான ஒரு வசதி தான் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது. புகைப்படம் மற்றும் வீடியோகளை எடுக்கும் வசதி ஸ்மார்ட் போன்களில் இருந்து மெல்ல மெல்ல முன்னேறி பல்வேறு வகையான டிவைஸ்-களின் மூலம் பெற்றுக்கொள்ள கூடிய ஒரு வசதி ஆக அறிமுகமாகி உள்ளது. இப்போது நாம் பார்த்தால் எழுதுபேனா, மின்குமிழ் போன்ற வடிவிலான மிகச்சிறய அளவில் கிடைக்க கூடிய கேமரா-களை காணக்கூடியதாய் இருக்கிறது.


இந்த தொழிநுட்ப வளர்ச்சியானது பல்வேறு பயனுள்ள விடயங்களுக்கு பயன்படுகின்ற போதிலும் இதை தவறான முறையில் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வகையில் அறிமுகமாகி இருக்கும் இந்த சிறிய அளவிலான எமது அன்றாட தேவை பொருள் போல் காட்சியளிக்கும் கேமராகள் பல்வேறு முறைகேடான செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

அதிலும் இந்த சிறிய வகை கேமராகள் பெண்களை குறி வைத்து செயற்படுகின்றன. உதாரணமாக ஆடை விற்பனை நிலையங்களில் பெண்கள் அறையில் இந்த சிறிய வகை கேமராகள் பொருத்தப்படுவது, அதே போல் பொது மலசல கூடங்களில் பொருத்தப்படுவது என்று பெண்களை குறி வைத்து இந்த சிறிய வகை கேமராகள் சமூக விரோதிகளால் செயட்படுத்தப்படுகிறது.

ஆகவே இவ்வாறான சிறிய வகை கேமராகள் நீங்கள் இருக்கும் அறையிலே அல்லது உங்களுக்கு அருகாமையிலோ எங்காவது பொருத்தப்பட்டிருந்தால் உங்களது ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி இந்த கேமராகளை இனம் கண்டு கொள்ள முடியும்.
இவ்வாறு யாருக்கும் தெரியாதவாறு பொருத்தப்பட்டிருக்கும் மறைவான கேமராகளை மிக எளிதாக இனம் கண்டு கொள்ள உதவுகிறது கீழ் வரும் அன்றொஇட் போனுக்கான சிறப்பு செயலிகள்.

அன்றொஇட் செயலி 1
அன்றொஇட் செயலி 2
அன்றொஇட் செயலி 3


பரிந்துரைக்கப்படும் பதிவு

தயவு செய்து இந்த செயலியை தவறான காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டாம்.

இந்த செயலிகள் உங்களது ஸ்மார்ட் போனில் காணப்படும் சென்சர்-இன் மூலம் செயற்பட்டு நீங்கள் இருக்கும் குறிப்பிட்ட இடத்தில் ஏதேனும் மறைந்த கேமராகள் செயற்படுகின்றனவா என்று கண்டறிந்து கொள்ள உதவுகின்றது. இந்த செயலிகளை உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனில் நிறுவிய பின்னர், குறிப்பிட்ட ஒரு இடத்தில் மறைந்த கேமரா ஒன்று தொழிட்பட்டுக்கொண்டு இருக்கிறது என்ற சந்தேகம் வருமேயானால் இந்த செயலிகளை பயன்படுத்தி ஸ்கேன் செய்து கொள்ள முடியும்.

அப்படி நீங்கள் சந்தேகப்பட்டது சரி என்றால், குறிப்பிட்ட இடத்தில் கேமரா ஒன்று செயற்பட்டு கொண்டு இருக்கும் பட்சத்தில் இந்த செயலிகள் உங்களை குறிப்பிட்ட ஒரு அலெர்ட் மூலம் எச்சரிக்கும்.

தொழிநுட்ப வளர்ச்சியை சமூகத்தில் இருக்கும் ஒரு சிலர் தவறாக பயன்படுத்தி கொண்டு இருக்கும் இந்த கால கட்டத்தில் மேலே குறிப்பிட்ட செயலிகள் எமது ஸ்மார்ட் போனில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு தேவையாகவே கருதப்படுகிறது.