வாட்ஸ்அப் செயலிகளை நிறுவாத ஸ்மார்ட் போன்களே இல்லை என்று கூறும் அளவுக்கு வாட்ஸ்அப் மெசெஞ்சர் செயலியானது அனைத்து ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியிலும் பிரபல்யமாக உள்ளது.
ஆகவே இன்றைய பதிவில் அன்றொஇட் ஸ்மார்ட் போன் உபயோகிப்பவர்களுக்காக வாட்ஸ்அப் செயலியுடன் சம்மந்தப்பட்ட மற்றுமொரு பதிவை தருகிறேன். வாட்ஸ்அப்-இல் எமது நண்பர்கள் எம்முடன் பகிர்ந்து கொள்ளும் போட்டோ மற்றும் வீடியோகள் எமது கேலரி-க்கு (Gallery) தானாக டவுன்லோட் ஆக்குவதை அவதானித்து இருப்பீர்கள். ஆனால் இதை சில செட்டிங் மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் தடுத்து கொள்ள முடியும்.
இவ்வாறு குறிப்பிட்ட சில செட்டிங்க்ஸ் மாற்றங்களை செய்து கொள்வதால் போட்டோ மற்றும் வீடியோகள் போன் கேலரி-க்கு தானாக டவுன்லோட் ஆகுவதை மட்டுமே தடுக்க முடியும்.
அப்படியில்லாமல் நாம் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு வாட்ஸ்அப் போட்டோவை பார்க்க வேண்டும் என்று எமது வாட்ஸ்அப்-இல் கிளிக் செய்தால் அந்த குறிப்பிட்ட போட்டோ கேலரி-க்கு டவுன்லோட் ஆகுவதை தடுக்க முடியாது.
அன்றொஇட் ஸ்மார்ட் போன்களை வைத்து இருக்கும் பெரும்பாலானோர் இந்த பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். ஆகவே இன்றைய பதிவில் இவ்வாறு எமது வாட்ஸ்அப்-இல் வரும் போட்டோ வீடியோகள் தானாக போன் கேலரி-க்கு டவுன்லோட் ஆகுவதை தடுப்பது எப்படி என்றும் அதை தடுத்த பின், நாம் மனுஅல் ஆக கிளிக் செய்து பார்க்கும் வாட்ஸ்அப் போட்டோகள் எமது கேலரி-யில் தோன்றுவதை எப்படி தடுப்பது என்றும் பார்ப்போம்.
வாட்ஸ்அப் இல் வரும் போட்டோ மற்றும் வீடியோகள் எமது போன் கேலரி-க்கு தானாக டவுன்லோட் ஆகுவதை தடுப்பது எப்படி என்ற சிறப்பு பதிவை ஏற்கனவே எமது தளத்தில் எழுதி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் தவற விட்டு இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தெரிந்து கொள்ள முடியும்.
வாட்ஸ்அப்-இல் வரும் போட்டோ வீடியோகள் எமது ஸ்மார்ட் போனிற்கு தானாக டவுன்லோட் ஆகுவதை தடுப்பது எப்படி?
ஆகவே மேலே குறிப்பிட்டுள்ள முறையை பயன்படுத்தி வாட்ஸ்அப் பைல்-கள் தானாக எமது கேலரி-க்கு டவுன்லோட் ஆக்குவதை தடுப்பது எப்படி என்று தெரிந்து கொண்டீர்கள்.
அடுத்து நாம் ஏதேனும் ஒரு வாட்ஸ்அப் போட்டோவை பார்க்க வேண்டும் என்று எமது வாட்ஸ்அப்-இல் இருக்கும் குறித்த போடோவின் மீது கிளிக் செய்தால் அந்த குறிப்பிட்ட போட்டோ கேலரி-யில் தோன்றுவதை தடுப்பது எப்படி என்று பார்ப்போம்.
முதலாவதாக உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனில் My Files அல்லது File Manager என்று இருக்கும் மெனு-இற்கு செல்லுங்கள்.
அங்கே Device Storage என்பதை கிளிக் செய்யுங்கள்.
அங்கே வாட்ஸ்அப் என்று காணப்படும் போல்டர்-ஐ தேடிப்பிடுயுங்கள்.
அதை கிளிக் செய்து, அங்கே Media என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து WhatsApp Images என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து மேலே வலது மூலையில் செட்டிங்க்ஸ்-ஐ கிளிக் செய்து Create Folder என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது குறிப்பிட்ட போல்டர்-ஐ .nomedia என்ற பெயருடன் உருவாக்குங்கள்.
கீழே படத்தில் காட்டியுள்ளது போல் போல்டர்-இன் பெயருக்கு முன்னால் புள்ளி (.) ஒன்றை வைக்க மறக்க வேண்டாம்.
ஆகவே நீங்கள் உருவாக்கிய போல்டர் கீழ் காட்டியிருக்குமாறு காணப்படும்.
அவ்வளவு தான். இப்போது நீங்கள் வாட்ஸ்அப்-இல் கிளிக் செய்து டவுன்லோட் செய்து பார்க்கும் எந்த ஒரு போடவும் உங்களது போன் கேலரி-யில் தோன்றாது.
பரிந்துரைக்கப்படும் பதிவு
டவுன்லோட் செய்த குறிப்பிட்ட போட்டோகளை மறுபடியும் பார்க்க வேண்டுமென்றால் My Files-இனுள் வாட்ஸ்அப் போல்டர்-இல் வாட்ஸ்அப் இமேஜ் என்று இருக்கும் போல்டர்-இல் சென்று பார்த்து கொள்ள முடியும்.
Tech in Tamil
Android
Tips and Tricks
WhatsApp
வாட்ஸ்அப்-இல் வரும் போட்டோ வீடியோகள் போன் Gellary-யில் தோன்றுவதை மறைப்பது எப்படி?






