அன்றொஇட் போனை 200% ஆல் வேகமாக்கி கொள்ள உதவும் அட்வான்ஸ் செட்டிங்க்ஸ் பற்றி உங்களுக்கு தெரியுமா?

அன்றொஇட் சம்மந்தமான பதிவுகளின் தொடர்ச்சியாக இன்றைய பதிவில் மற்றுமொரு பயனுள்ள தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன். அன்றொஇட் ஸ்மார்ட் போன் வைத்து இருக்கும் அனைவருமே எதிர்கொள்ளும் பொதுவான ஒரு பிரச்சினை தான்,  தங்களுடைய ஸ்மார்ட் போன் அடிக்கடி ஹேன்ங் ஆவதும், மெதுவாக செயல்படுவதும். அன்றொஇட் ஸ்மார்ட் போனை உபயோகிக்கும் பெரும்பாலானோர் இந்த பிரச்சினையை  தினம் தோறும் சந்தித்து கொண்டு இருக்கிறார்கள்.

அன்றொஇட் ஸ்மார்ட் போனை எப்படி வேகமாக இயங்க வைப்பது என்ற தலைப்பில் நாம் தேடிப்பார்த்தால் பல்வேறுபட்ட அன்றொஇட்  போனை வேகமாக்கும் வழிமுறைகள் எமக்கு விடையாக கிடைக்கும். இவற்றில் பல செயலிகளின் மூலமாகவே செய்து கொள்ள வேண்டியதை இருக்கும்.

ஆனால் என்னை பொறுத்த வரை ப்லே ஸ்டோரில் கிடைக்கும் அனைத்து செயலிகளும் ஒரே மாதியானது அல்ல. சில  வேலை நீங்கள் உங்களது ஸ்மார்ட் போனை வேகமாக்க வேண்டும் என்று நினைத்து நிறுவிய செயலியே உங்களது ஸ்மார்ட் போனை மேலும் மெதுவாக செயற்பட வைக்கலாம்.


ஆகவே இவ்வாறான செயலிகளை உங்களது ஸ்மார்ட் போனில் நிறுவும் போது கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

ஆனால் எமது இன்றைய பதிவில், எந்த விதமான செயலிகளையும் பயன்படுத்தாது எங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனில் இருக்கும் ஒரு சில செட்டிங்க்ஸ்-களை அட்ஜஸ்ட் செய்து கொள்வதன் மூலம் எப்படி அன்றொஇட் ஸ்மார்ட் போன் வேகத்தை இரு மடங்காக்கி கொள்வது என்று பார்ப்போம்.

அன்றொஇட் Developer Mode-ல் குறிப்பிட்ட சில மாற்றங்களை செய்து கொள்வதன் மூலம் மேலே நான் கூறியது போல எமது அன்றொஇட் ஸ்மார்ட் வேகத்தை இரு மடங்காக்கி கொள்ள முடியும்.

முதலாவதாக உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனில் செட்டிங்க்ஸ்-இற்கு செல்லுங்கள்.

அங்கே About Device என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.

அடுத்து Build Number என்று இருப்பதில் 3 தொடக்கம் 7 முறை Tap செய்யுங்கள்.


இவ்வாறு செய்வதன் மூலம் உங்களது அன்றொஇட் போனில் Developer Option எனப்படும் வசதி செயன்முறைக்கு வரும்.
அடுத்து உங்களது அன்றொஇட் போன் Settings-இல் Developer Option என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.


அதிலே Windows animation scale, Transition animation scale மற்றும் Animation duration scale என்று மூன்று செட்டிங்க்ஸ்-கள் காணப்படும்.


இவை ஒவ்வொன்றையும் தெரிவு செய்து .5x என்று கீழே படத்தில் காட்டி இருப்பது போல் செட்டிங்க்ஸ் செய்யுங்கள்.


இப்போது உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனை ஒரு Off முறை செய்து விட்டு மறுபடியும் On செய்து உபயோகித்து பாருங்கள்.

இப்போது உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனை உபயோகிக்கும் போது முன்னரிலும் பார்க்க வேகமாக செயற்படுவதை உணர்ந்து கொள்ள கூடியதாய் இருக்கும்.

ஏற்கனவே எமது முன்னைய பதிவொன்றில் அன்றொஇட் ஸ்மார்ட் போனில் System Dump Mode-ல் சில மாற்றங்களை செய்து கொள்வதன் மூலம் எப்படி அன்றொஇட் ஸ்மார்ட் போனை வேகமாக இயங்க வைப்பது என்று கூறி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் தவறவிட்டு இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

System Dump Mode-ஐ மாற்றுவதன் மூலம் Android போனை வேகமாக்குவது எப்படி?

எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது நண்பர்களுடன் சமூக வலைத்தளங்களின் ஊடாக பகிந்து கொள்ளுங்கள்.