இவற்றில் குறிப்பாக சுட்டி காட்ட வேண்டிய ஒரு விடயம் தான் இணையத்தில் இருந்து கணணிகளை தொற்றிக்கொள்ளும் வைரஸ். எமது கணனிகளுக்கு வைரஸ் பல்வேறு முறை மூலம் வர வாய்ப்பு இருக்கின்றது. அவற்றில் இணையத்தை உபயோகிக்கும் போது வைரஸ் தொற்றிக்கொள்ள கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம். இணையத்தை உபயோகிக்கும் நாம் பல்வேறு தளங்களை தினம்தோறும் வளம் வருகிறோம். இணையத்தை உபயோகிக்கும் போது இவ்வாறான ஒரு சூழல் உருவாக்கப்படுவதால், எமக்கு தெரியாமலேயே எமது கணணிகளுக்குள் வைரஸ் பைல்-கள் சென்று விடுகின்றது.
இவ்வாறன வைரஸ்-கள் எமது கணனியின் வேகத்தை குறைப்பதில் இருந்து எமது முக்கியமான கோப்புக்களை அழித்து விடக்கூடிய அளவிற்கு திறமை கொண்டது.
ஆனால் நாளுக்கு நாள் பெருகி வரும் புது விதமான வைரஸ்களை சில வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள் சரியாக கண்டறிய மறுக்கின்றன.
ஆகவே எமது கணனியில் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் நிருவட்டிருக்கின்ர போதிலும் எமது கணணிகளை வைரஸ் தாக்க வாய்ப்பு இருக்கின்றது.
ஆகவே எமது கணனியில் நிறுவப்பட்டிருக்கும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளானது சரியாக செயற்படுகிறதா என்று தெரிந்து கொள்வதன் மூலம் எமது கணணியை புதுவகையான வைரஸ்களில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும்.
சரி.. எப்படி எமது கணனியில் நிறுவப்பட்டிருக்கும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் சரியாக செயற்படுகிறதா என்று தெரிந்து கொள்வது என்று பார்ப்போம்.
பரிந்துரைக்கப்படும் பதிவு
முதலாவதாக உங்களது கணனியில் Notepad ஒன்றை ஆரம்பியுங்கள்.
X5O!P%@AP[4PZX54(P^)7CC)7}$TECHHACKS-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
இப்போது இந்த பைல்-ஐ virus test.com என்ற பெயரில் உங்களது கணனியில் சேமித்து கொள்ளுங்கள்.
சேமித்த பைல்-ஐ உங்களது கணனியில் டபுள் கிளிக் செய்து ஆரம்பியுங்கள்.
உங்களது கணனியில் நிறுவப்பட்டிருக்கும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளானது சரியாக செயற்படுகிறது என்றால், குறிப்பிட்ட இந்த பைல்-ஐ வைரஸ் பைல் ஆக கருதி அழித்து விடும்.
பரிந்துரைக்கப்படும் பதிவு
அப்படி குறிப்பிட்ட இந்த பைல்-ஐ அழிக்கவில்லை என்றால், உங்களது கணனியில் நிறுவப்பட்டிருக்கும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் சரியாக செயற்படவில்லை என்று அர்த்தம். அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் உங்களது வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை அப்டேட் செய்திடுங்கள். அல்லது வேறு ஏதேனும் ஒரு சிறந்த வைரஸ் எதிர்ப்பு மேன்பொருளிட்கு மாறி கொள்ளுங்கள்.
