சமூக வலைத்தளம் என்று கூறினாலே அனைவரினது நினைவுக்கும் முதலில் வருவது பேஸ்புக் சமூக வலைத்தளம். அந்த அளவுக்கு இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக் அனைவர் மத்தியிலும் பிரபல்யமடைந்து காணப்படுகிறது.
எமது தளத்தில் அடிக்கடி இந்த பேஸ்புக் சம்மந்தமான தகவல்கள் சென்ற நாட்களில் பதியப்பட்டது. அதே போல் இன்றும் மற்றுமொரு சுவாரஸ்யமான பேஸ்புக் தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்.
பேஸ்புக்கில் பதிவேற்றப்படும் வீடியோகளில் குறிப்பிட்ட சில வீடியோகளை தவிர மற்றைய வீடியோகளை எம்மால் தரவிறக்கி கொள்ள முடியாது.
ஆகவே இன்றைய பதிவில் பேஸ்புக்கில் காணப்படும் வீடியோகளை எமது கணணிக்கோ அல்லது ஸ்மார்ட் போனிட்கோ எந்த விதமான மென்பொருளையும் பயன்படுத்தாமல் தரவிறக்கி கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
உங்களுக்கு தரவிறக்கி கொள்ள தேவையான பேஸ்புக் வீடியோவை உங்களது உலாவியில் புதிய டேப் ஒன்றை பயன்படுத்தி திறந்து கொள்ளுங்கள்.
அடுத்து குறித்த வீடியோ-வின் URL-இல் காணப்படும் https என்பதில் s-ஐ நீக்குங்கள். அதன் பின், www. என்பதற்கு பிறகு down என்று டைப் செய்து Enter பட்டன்-ஐ அழுத்துங்கள்.
இப்போது உங்களது உலாவியில் புதிய திரை ஒன்று பேஸ்புக் வீடியோவை தரவிறக்க கூடிய வசதியுடன் தோன்றும்.
அங்கே காணப்படும் டவுன்லோட் என்ற பட்டன்-ஐ அழுத்துவதன் மூலம் குறிப்பிட்ட பேஸ்புக் வீடியோவை தரவிறக்கி கொள்ள முடியும்.
அன்றொஇட் மற்றும் ஐபோனிற்கு பேஸ்புக் வீடியோ களை தரவிறக்குவது எப்படி?
மேலே குறிப்பிட்ட அதே முறையை பயன்படுத்தி பேஸ்புக் வீடியோகளை உங்களது அன்றொஇட் மற்றும் ஐபோனிற்கு தரவிறக்கி கொள்ள முடியும்.
ஆனால் வீடியோகளை தரவிறக்கி கொள்ள வேண்டுமென்றால் உங்களது ஸ்மார்ட் போனில் இருந்து பேஸ்புக் தளத்திற்கு கூகுள் க்ரோம் அல்லது வேறு ஏதேனும் உலாவின் மூலமே லொகின் செய்ய வேண்டும்.
அப்போது தான் உங்களால் பேஸ்புக் வீடியோகளை மேலே குறிப்பிட்ட முறையை பயன்படுத்தி தரவிறக்கி கொள்ள முடியும்.
அப்படியல்லாமல் உங்களது ஸ்மார்ட் போனில் காணப்படும் பேஸ்புக் செயலி மூலம் வீடியோகளை பார்க்கும் பட்ச்சத்தில் மேலே குறிப்பிட்ட முறையை பயன்படுத்தி வீடியோகளை தரவிறக்கி கொள்ள முடியாது என்பதை கருத்திட்கொள்ளுங்கள்.
Tech in Tamil
Facebook
Tips and Tricks
எந்தவித சாப்ட்வேர்-ஐயும் பயன்படுத்தாமல் பேஸ்புக் வீடியோகளை கணணி, அன்றொஇட், ஐபோனிற்கு தரவிறக்கி கொள்வது எப்படி?


