போட்டோ ஒன்றில் இருக்கும் பின்புலத்தை எந்த விதமான மென்பொருளையும் பயன்படுத்தாமல் நீக்குவது எப்படி?

இன்றைய பதிவில் போட்டோ எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளும் ஆர்வம் கொண்ட நண்பர்களை மகிழ்விக்க கூடியவாறான விடயமொன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன்.

இன்று சமூக வலைத்தளங்களை உபயோகிக்கும் பெரும்பாலானோர் இந்த போட்டோ எடிட்டிங் விடயத்தில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரு சில நாட்களுக்கு முன்னர், எமது தளத்தில் கூகுள் வழங்கும் 149 அமெரிக்க டாலர் பெறுமதியான நிக் போட்டோ எடிட்டிங் மென்பொருளை எப்படி இலவசமாக தரவிறக்கி கொள்வது என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

கூகுள் நிறுவனத்தின் 149 டாலர் பெறுமதியான கூகுள் நிக் போட்டோ எடிட்டிங் மென்பொருளை இலவசமாக பெற்றிடுங்கள்.


ஆகவே இன்றைய பதிவிலும் போட்டோ எடிட்டிங் சம்மந்தமான ஒரு விடயம் பற்றி பார்ப்போம். சாதாரணமாக குறித்த ஒரு போட்டோவை நாம் எடிட் செய்ய வேண்டும் என்றால், பெரும்பாலும் குறித்த போட்டோவின் பின்புலத்தை நீக்க வேண்டியதாய் இருக்கும்.

பின்புலத்தை நீக்கிய பின்னரே உங்களது தேவைக்கு ஏற்ற போல அழகிய வடிவில் போட்டோவை எடிட் செய்து கொள்ள முடியும்.

இந்த வேலையை எமக்கு செய்து தர பல மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும், இன்று நாம் குறித்த போட்டோ ஒன்றில் பின்புலத்தை எதுவிதமான மென்பொருளும் இன்றி எப்படி நீக்கி கொள்வது என்று பார்ப்போம்.

ஆகவே மிக இலகுவாக குறித்த போட்டோ ஒன்றின் பின்புலத்தை நீக்கும் வேலையை கீழ்வரும் ஆன்லைன் போட்டோ எடிட்டிங் தளம் மூலம் செய்து கொள்ள முடியும்.
இந்த ஆன்லைன் தளத்திற்கு குறித்த போட்டோவை அப்லோட் செய்யுங்கள்.


இப்போது உங்களது போட்டோவில் இருக்கும் பின்புல காட்சி நீக்கப்படும் தானாக வேலை நடைபெறும்.

போட்டோவில் இருக்கும் பின்புல காட்சி தானாக நீக்கப்பட்ட பின்னர், கீழ்வருமாறு காணப்படும்.



அங்கே காணப்படும் Touch up என்பதை கிளிக் செய்து உங்களது தேவைக்கு ஏற்ற போல, சிறு சிறு புள்ளிகளாக மிச்சமிருக்கும் பின்புல காட்சிகளை நீக்கி கொள்ள முடியும்.



ஆகவே மிக இலகுவாக குறித்த போட்டோ ஒன்றில் இருக்கும் பின்புல காட்சிகளை நீக்கி கொள்ள உதவும் இந்த அருமையான தளத்திற்கு கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கை கிளிக் செய்து செல்லுங்கள்.

போட்டோ பின்புலத்தை நீக்கும் தளம்

குறிப்பு

இந்த தளத்தில் உங்களது போட்டோ பின்புலத்தை நீக்குவது முற்றிலும் இலவசம். ஆனால் நீங்கள் குறித்த போட்டோவை உங்களது கணனிக்கு தரவிறக்கி கொள்ள வேண்டும் என்றால், இந்த தளத்தில் இலவச கணக்கொன்றை ஆரம்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பிரபல மொபைல் நெட்வொர்க் ஒன்றிடமிருந்து 75GB அளவான 4G இன்டர்நெட் டேட்டா + 4500 நிமிட டாக் டைம் வெறும் 200 ரூபாக்கு..

இன்று நாம் ஸ்மார்ட் போன் மற்றும் கணணிகளை வைத்திருப்பதே இணையத்தை உபயோகிப்பதற்கு தான் என்று சொல்லும் அளவுக்கு இணையத்தின் பயன்பாடு எம்மத்தியில் காணப்படுகிறது.

இவ்வாறு எமது அன்றாட தேவைகளின் ஒரு முக்கிய அம்சமாக காணப்படும் இணைய இணைப்புக்களை பற்றியதொரு புதிய தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்.

மக்களின் தேவையை புரிந்து கொண்டு இன்று சந்தைக்கு அறிமுகாமாகும் இணைய இணைப்புக்கள், பல்வேறு வசதிகளுடன் சிறந்த விலையில் கிடைக்க கூடியதாய் உள்ளது. 2G இன்டர்நெட் பேக் ஒரு விலை, 4G இன்டர்நெட் பேக் ஒரு விலை என்று, ஒவ்வொரு இன்டர்நெட் வழங்கும் நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு தமது இடத்தை இன்டர்நெட் சந்தையில் தக்க வைக்க முயற்ச்சித்து கொண்டு இருக்கிறார்கள்.


அந்த வகையில் வெகு விரைவில் அறிமுகமாக இருக்கும், புதியதொரு இன்டர்நெட் பேக் பற்றிய செய்தி ஒன்றுடன் இன்று உங்களை சந்தித்திருக்கிறேன்.

Reliance நிறுவனத்துக்கு சொந்தாமன Reliance Jio எனப்படும் 4G இன்டர்நெட் சேவையானது, மிகச்சிறந்ததொரு இன்டர்நெட் சலுகையை அறிமுகப்படுத்த உள்ளது.

அதாவது 75 GB அளவான 4G இன்டர்நெட் டேட்டாவை வெறும் 200 ரூபாக்கு வழங்கவிருக்கிறது. இந்த சலுகையுடன் சேர்த்து 4500 நிமிட இலவச டாக் டைம்-ஐயும் வழங்கவிருக்கிறது. இந்த அனைத்து சலுகைகளும் செயற்படுத்திய நாளில் இருந்து 3 மாதங்கள் வரை செல்லுபடியாகும்.

இதை உறுதிப்படுத்தும் வகையில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் வெளியான செய்தியை கீழே கீழே வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
இந்த அனைத்து சலுகைகளும் பெரும்பாலும் ஏப்ரல் மாத முதல் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கபடுகிறது.

இணையத்தில் இதுவரை கசிந்துள்ள செய்திகளின் படி, Reliance டிஜிட்டல் ஸ்டோர்-களில் குறித்த 4G சிம்-ஐ வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான டாகுமென்ட்ஸ் தயாராக உள்ளதாகவும், அதிகாரபூர்வ அறிவுறுத்தல் வெளியாகும் வரை காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தகவலை உறுதிப்படுத்தும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.

பரிந்துரைக்கப்படும் பதிவு
2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே Reliance நிறுவன ஊழியர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

கூகுள் ப்லே ஸ்டோரில் 'உங்களது நாட்டிற்கு இல்லை' என்று காணப்படும் செயலிகளை எமது போனுக்கு இன்ஸ்டால் செய்வது எப்படி?

இன்றைய பதிவில் மற்றுமொரு பயனுள்ள ஆன்ராயிடு சம்மந்தப்பட்ட ஒரு விடயத்துடன் உங்களை சந்திக்கிறேன். ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமாக காணப்படும் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்களுக்கு கூகுள் ப்லே ஸ்டோரில் பல லட்ச்சக்கணக்கான சிறந்த செயலிகள் காணப்படுகின்றன.

ஆனால் நாம் குறிப்பிட்ட சில செயலிகளை எமது போனில் நிறுவ முயற்சித்தால், குறிப்பிட்ட செயலி, எமது நாட்டுக்கு இல்லை என்ற வாசகம் தோன்றுவதை அவதானித்து இருப்பீர்கள்.

ஆகவே இன்றைய பதிவில், இவ்வாறு எமது நாட்டிற்கு இந்த செயலி இல்லை என்று ப்லே ஸ்டோரில் காணப்படும் செயலிகளை எமது ஸ்மார்ட் போனிற்கு எப்படி நிறுவி கொள்வது என்று பார்ப்போம்.


பரிந்துரைக்கப்படும் பதிவு

இதற்கு உதாரணமாக இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் வசிப்போருக்கு கூகுள் ப்லே ஸ்டோரில் கிடைக்காத செயலியான Spotify Music எனப்படும் செயலியை எப்படி எனது போனிற்கு நிறுவி கொண்டேன் என்று காட்டுகிறேன்.

முதலாவதாக உங்களது போனில் செட்டிங்க்ஸ்-இற்கு சென்று, அங்கே
உங்களது போனில் நிறுவி இருக்கும் செயலிகள் காணப்படும் மெனு-வை திறவுங்கள்.

அதிலே கூகுள் ப்லே ஸ்டோர் எனப்படும் செயலியை தெரிவு செய்து, Force Stop என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்து Clear Data/ Cache என்பதை கிளிக் செய்யுங்கள்.


அடுத்து கீழே காணப்படும் இலவச ஆன்ராயிடு வி.பி.என் செயலியை உங்களது போனுக்கு பெற்று கொள்ளுங்கள்.
இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து,அமேரிக்கா என்பதை தெரிவு Connect செய்து என்பதை கிளிக் செய்யுங்கள்.


இப்போது இந்த செயலி உங்களது போனை அமெரிக்க வி.பி.என் ஒன்றுடன் இணைத்து விடும்.

அடுத்து கூகுள் சர்ச்-இற்கு சென்று, உங்களுடைய நாட்டிக்கு இல்லை என்று ப்லே ஸ்டோரில் வந்த குறித்த செயலியை தேடி ப்லே ஸ்டோர் மூலம்
திறவுங்கள்.


அடுத்து கூகுள் ப்லெ ஸ்டோர்-இற்கு உங்களது மின்னஞ்சல் முகவரியை தெரிவு செய்து லொகின் செய்யுங்கள்.

இப்போது குறித்த செயலியை உங்களது போனிற்கு நிறுவுவதற்கான அனுமதி கிடைத்து விட்டது.


இப்போது இந்த செயலியை உங்களது போனுக்கு நிறுவும் போது, கீழ் காட்டப்பட்டுள்ளவாறு ஒரு வாசகம் தோன்றும்.


அதிலே 'ஸ்கிப்' என்று இருப்பதை கிளிக் செய்து, மிக இலகுவாக உங்களது ஆன்ராயிடு போனுக்கு குறித்த செயலியை நிறுவி கொள்ள முடியும்.

ஆகவே ப்லே ஸ்டோர்-இல் உங்களது நாட்டிற்கு இல்லாத செயலிகளை மிக இலகுவாக நிறுவி கொள்ள உதவும் ஆன்ராயிடு சிறப்பு வி.பி.என் செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு சிறப்பு வி.பி.என் செயலி

பரிந்துரைக்கப்படும் பதிவு

ஆகவே இந்த சிறப்பு செயலியை பயன்படுத்தி மிக இலகுவாக உங்களுக்கு தேவையான அனைத்து செயலிகளையும் நிறுவி கொள்ள முடியும்.

குறிப்பு

மேலே நான் குறிப்பிட்டது போல, இந்த வி பி என் செயலியில் அமேரிக்கா என்பதை தெரிவு செய்யுங்கள். ஏன் என்றால், பெரும்பாலான ஆன்ராயிடு செயலிகள் அமெரிக்க நாட்டவர்களுக்கே முதலில் பயன்படுத்த கிடைக்கும்.

வாட்ஸ்அப்-இல் அறிமுகமாகி இருக்கும் புதிய வசதிகள்.

தினம்தோறும் புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி வரும் வாட்ஸ்அப் செயலி, அண்மையில் தனது கோடிக்கணக்கான பயனர்களின் நன்மையை கருத்தில் கொண்டு வாட்ஸ்அப் மூலம் டாகுமென்ட் பைல்-களை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தி இருந்தது. நீங்கள் உங்களது ஸ்மார்ட் போனில் வாட்ஸ்அப்-இன் புதிய பதிப்பை பயன்படுத்துகிறீர்கள் என்றால், நீங்களும் உங்களது போனில் இருந்து வாட்ஸ்அப் மூலம் உங்களது நண்பர்களுடன் டாகுமென்ட் பைல்-களை பகிர்ந்து கொள்ள முடியும். இது குறித்து எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்ட பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தெரிந்து கொள்ள முடியும்.

வாட்ஸ்அப்-இல் டாகுமெண்ட்ஸ் கோப்புக்களை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்

இதை தொடர்ந்து இப்போது அதிகாரபூர்வமாக வெளியாகி இருக்கும் வாட்ஸ்அப்-இன் புதிய பதிப்பில் ஒரு சில சிறந்த வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


மேலே நாம் குறிப்பிட்டது போல வாட்ஸ்அப்-இல் டாகுமென்ட் பைல்-களை அனுப்பும் போது உங்களது கூகுள் டிரைவ் அல்லது மைக்ரோசாப்ட் வன் டிரைவ் போன்ற கணக்குளில் இருக்கும் பைல்-களை நேரடியாக தெரிவு செய்து அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.


மேலும் நீங்கள் அனுப்பிய டாகுமென்ட் பைல்-களை குறித்த காண்டக்ட் பெயரை கிளிக் செய்து Info என்று இருப்பதை கிளிக் செய்வதன் மூலம் பார்த்து கொள்ள முடியும்.

டேட்டா உபயோக கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

அதாவது வாட்ஸ்அப்-இல் வரும் எந்த வகையான பைல்-கள் உங்களது போன் டேட்டா மூலம் தரவிறக்கப்பட வேண்டும், எந்த வகையான பைல்-கள் வைபை மூலம் தரவிறக்கபட வேண்டும் போன்ற செட்டிங்க்ஸ் தெரிவுகளை செய்து கொள்ள முடியும்.

நோடிபிகேசன்-இல் இருந்த படியே மெசேஜ்-களுக்கு பதிலளுக்கும் வசதி.

நீங்கள் உங்களது போனில் வேறு ஏதேனும் ஒரு செயலியை பயன்படுத்தி கொண்டிருக்கும் போது உங்களுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் வந்த நோடிபிகேசன் ஒன்று வருமேயானால், குறித்த மெசேஜ்-இற்கு வாட்ஸ்அப்-ஐ திறக்காமலேயே, நோடிபிகேசன்-ஐ கிளிக் செய்வதன் மூலம் நேரடியாக பதில் அனுப்ப முடியும்.

அடுத்து, இந்த பதிப்பிலே காணப்படும் சிறந்த வசதியாக, தடித்த (Bold) மற்றும் வளைந்த (Italic) எழுத்துக்களை வாட்ஸ்அப் செட்-இல் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறை மூலம் பயன்படுத்தி கொள்ள கூடியதாய் இருக்கும்.
வாட்ஸ் அப் மெசேஜ்-களில் தடித்த எழுதுக்களை பயன்படுத்துவது எப்படி?

நீங்கள் தடித்த எழுத்தின் மூலம் அனுப்ப நினைக்கும் வார்த்தை ஒன்றின் முன்னாலும் பின்னாலும் உங்களது போனில் இருக்கும் * சிம்பல்-ஐ பயன்படுத்துவன் மூலம் தடித்த எழுத்துக்களை வாட்ஸ்அப் மெசேஜ்-இல் அனுப்ப முடியும்.

உதாரணமாக - *what's up*

வாட்ஸ் அப் மெசேஜ்-களில் வளைந்த எழுதுக்களை பயன்படுத்துவது எப்படி?

நீங்கள் வளைந்த எழுத்தின் மூலம் அனுப்ப நினைக்கும் வார்த்தை ஒன்றின் முன்னாலும் பின்னாலும் உங்களது போனில் இருக்கும் ​_ சிம்பல்-ஐ பயன்படுத்துவன் மூலம் வளைந்த எழுத்துக்களை வாட்ஸ்அப் மெசேஜ்-இல் அனுப்ப முடியும்.

உதாரணமாக - _hello???_


அண்மையில் வாட்ஸ்அப் செயலியை அனைவரும் இலவசமாக உபயோகிக்கலாம் என்று வாட்ஸ்அப் அறிவித்திருந்தது. இருந்த போதிலும் இந்த புதிய பதிப்பு வெளியாவதற்கு முன்னர் இருந்த வாட்ஸ்அப் பதிப்பில், வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த பணம் செலுத்தும் மெனு காணப்பட்டது. ஆனால் தற்போது வாட்ஸ்அப் அனைவருக்கும் இலவசமாக்கப்பட்டு விட்டதால் இந்த மெனுவை புதிய பதிப்பில் நீக்கி இருக்கிறார்கள்.

ஆகவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வசதிகளையும் உங்களது போனில் தற்போது இருக்கும் வாட்ஸ்அப் பதிப்பை அப்டேட் செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

பூமியில் இருக்கும் இடங்களை தேட கூகுள் மேப் போல வானத்தில் இருக்கும் இடங்களை தேட கூகுள் ஸ்கை மேப்

மற்றுமொரு சுவாரஸ்யமான பதிவுடன் இன்று உங்களை சந்திக்கின்றேன். இன்று நாம் எங்கு சென்றாலும் எம்முடன் கூடவே வந்து வழிகாட்டுவது கூகுள் மேப் ஆகும். புதிய இடங்களுக்கு செல்லும் போது, குறித்த இடத்துக்கான தூரம் எவ்வளவு, இதற்கான குறுக்கு வழிகள் என்ன என்பதையெல்லாம் எமது வழிகாட்டியாக இருந்து, எமது பயணத்தை இலகுபடுத்தும் மேப் பற்றியது தான் இன்றைய பதிவு.

ஆனால் இன்று நாம் பார்க்க இருப்பது பூமியில் இருக்கும் இடங்களை அறிந்து கொள்ள உதவும் கூகுள் மேப் பற்றியதல்ல. வானத்தில் இருக்கும் கோள்கள், நட்சத்திரங்கள், மற்றும் மேலும் பல வானியல் சம்மந்தப்பட்ட மேப் பற்றியது.


எமது தளத்தில் ஏற்கனவே இன்டர்நெட் இல்லாத சந்தர்ப்பத்திலும் கூகுள் மேப்-ஐ பயன்படுத்துவது எப்படி என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

இன்டர்நெட் இல்லாத சந்தர்ப்பத்திலும் கூகுள் மேப் பயன்படுத்துவது எப்படி?

வானத்தில் இருக்கும் கோள்கள், நட்சத்திரங்கள், மற்றும் மேலும் பல வானியல் சம்மந்தான விடயங்களுடன் இன்னும் பல பயனுள்ள வசதிகளையும் உள்ளடக்கி எமது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனுக்கு கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயலியே கீழ்வரும் ஸ்கை மேப் ஆகும்.
சரி.. இப்போது இந்த செயலியில் உள்ள சிறப்பம்சங்கள் என்ன என்று பார்ப்போம்.

எமது போனில் இருக்கும் ஜி.பி.எஸ் தொழிநுட்பம் மூலம், வானத்தில் இருக்கும் நட்ச்சத்திரங்களை பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு கோள்களும் இருக்கும் திசையை ஆடோ மற்றும் மனுஅல் முறை மூலம் பார்த்து கொள்ள முடியும்.

டைம் ட்ரேவல் எனப்படும் வசதி மூலம், நாளைய தினம் நடக்கவிருக்கும் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.

இவை தவிர இன்னும் பல சிறந்த வசதிகளை தருகிறது இந்த அருமையான செயலி.

கூகுள் ஸ்கை மேப் செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று உங்களது ஆன்ராயிடு மற்றும் ஐபோனுக்கு தரவிறக்கி கொள்ள முடியும்.

கூகுள் ஸ்கை மேப் -ஆன்ராயிடு செயலி
கூகுள் ஸ்கை மேப் - ஐபோன் செயலி

பூமியில் இருக்கும் இடங்களை தேட கூகுள் மேப் போல, இனி வானத்தில் இடங்களை தேட ஸ்கை மேப்...

300 MB அளவான ரேம் பாவனையை வெறும் 30 MB ஆக கட்டுப்படுத்தும் ஆன்ராயிடு டூல்-பாக்ஸ்

எமது தளத்தில் ஒரு சில நாட்களுக்கு முன்னர், ஆன்ராயிடு போனை பல்வேறு முறைகள் மூலம் வேகப்படுத்தி கொள்ள உதவும் ஒரு செயலி பற்றி எழுதி இருந்தேன். அந்த பதிவின் பிரதி கீழே,

எங்களுடைய ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் மெதுவாக தொழிற்படுகிறது என்றால், இதற்கு மிக முக்கிய காரணம், எமது ஸ்மார்ட் போனில் உபயோகிக்கப்பட்டிருக்கும் ரேம் பாவனையில் அளவு. எமது போனில் காணப்படும் ரேம் இல் 80% ஆனா ரேம் அனைத்து செயளிகளாலும் உபயோகிக்கப்பட்டு விட்டால், எமது போனின் செயற்பாடு மெதுவாக இருப்பதை அவதானிக்க கூடியதாய் இருக்கும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் அடுத்து செய்யப்போகும் வேலை, கூகுள் ப்லே ஸ்டோரில் இருந்து ரேம் பாவனையை கட்டுப்படுத்த ஒரு செயலி, போனை வேகமாக்க மற்றுமொரு செயலி என்று ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு செயலிகளை நிறுவுவோம்.


இவ்வாறு ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு செயலி என்று, எமது ஸ்மார்ட் போனில், ஸ்மார்ட் போன்களை பராமரிக்க கூடிய பல்வேறு செயலிகள் காணப்படுகின்றன.

ஆகவே உங்களது போனில் ஸ்மார்ட் போன்களை பராமரிக்க நிறுவி இருக்கும் செயலிகள் பற்றியது தான் இன்றைய பதிவு.

முதலாவதாக உங்களது போனில் நிறுவி இருக்கும் அனைத்து ஸ்மார்ட் போன் பராமரிப்பு செயலிகளையும் நீக்கி விடுங்கள். அதாவது உங்களது ஸ்மார்ட் போனை வேகமாக்க நிறுவி இருக்கும் செயலி, சிஸ்டம்-ஐ கூலாக வைத்து இருக்க நிறுவி இருக்கும் செயலி, ரேம் பாவனையை கட்டுப்படுத்த நிறுவி இருக்கும் செயலி என்று, ஸ்மார்ட் போன் பராமரிப்பு செயலி அனைத்தையும் நீக்கி விடுங்கள்.

ஏன் என்று ஆச்சிரியமாக கேட்கிறீர்களா? ஏனென்றால் மேலே குறிப்பிட்ட அனைத்து செயலிகளின் வேலையையும் கீழ்வரும் ஓரே செயலியில் இருந்து செய்து கொள்ள முடியும்.

எமது ஸ்மார்ட் போனை வேகமாக்குவதில் தொடங்கி, ரேம் பாவனையை கட்டுப்படுத்துவது முதல் எமது போன் சிஸ்டம்-ஐ கூலாக வைத்து இருப்பது என்று,

பல்வேறு பயனுள்ள வசதிகளை தருகிறது கீழ்வரும் அன்றொஇட் போனுக்கான டூல் பாக்ஸ் சிறப்பு செயலி.
இந்த செயலியில் பயன்கள் என்ன என்று பார்ப்போம்.

இந்த செயலி மூலம் ரேம்-ஐ சுத்தப்படுத்துவது போனை வேகமாக்குவது, தேவையில்லாத பைல்-களை நீக்குவது என்று பல்வேறு வசதிகள் இருக்கிறது.


இவை மட்டுமல்லாது மேலும் பல்வேறு வசதிகளை தருகிறது இந்த அருமையான செயலி. இந்த செயலியை ஆரம்பித்து இந்த செயலியில் ஒரு சுற்று வலம் வாருங்கள். அப்போது இந்த செயலி எங்களுக்கு இலவசமாக தரும் சிறந்த சேவைகளை உங்களால் தெரிந்து கொள்ள முடியும்.

கூகுள் ப்லே ஸ்டோரில் இலவசமாக கிடைக்க கூடிய இந்த செயலியின் இலவச பதிப்பை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ள முடியும்.

ஆன்ராயிடு டூல் பாக்ஸ் - கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

அடுத்து இந்த அருமையான செயலியின் பணம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பை எப்படி இலவசமாக உங்களது போனுக்கு பெற்று கொள்வது கொள்வது என்று பார்ப்போம்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 02' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த பணம் செலுத்தி பெற வேண்டிய செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.
எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்... :)
இந்த செயலி உங்கள் ஆன்ராயிடு போனில் இருக்கும் பட்ச்சத்தில், உங்களது போனில் வீணடிக்கப்படும் கிட்டத்தட்ட 300 MB அளவான ரேம், வெறும் 30 MB ஆக கட்டுப்படுத்தபடிகிறது.

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு தேவைக்குமென்று தனித்தனி செயலிகளை நிறுவி ரேம் வாபனையை கூட்டுவதை விட வெறும் 30 MB அளவான ரேம்-ஐ மட்டுமே உபயோகிக்கும் இந்த சிறப்பு செயலி உங்களது ஆன்ராயிடு போனில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்றாகும்.

ஆன்ராயிடு போனில் உங்களுக்கு தெரியாமல் திருடப்பட்டு கொண்டிருக்கும் டேட்டாவை கட்டுப்படுத்துவது எப்படி?

ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வரும் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையாக, தங்களுடைய போன் டேட்டா தங்களுக்கே தெரியாமல் முடிவடைந்து போவதை குறிப்பிடலாம். எமது ஸ்மார்ட் போனில் நாம் பயன்படுத்தும் டேட்டா பேக் மிக விரைவாக முடிவடைந்து போவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றிலே பொதுவான சில காரணங்களாக கீழ் குரிப்பிட்டுள்ளவைகளை கூறலாம்.

எமது ஸ்மார்ட் போனில் இருக்கும் செயலிகள் தானாக அப்டேட் ஆவது.

குறிப்பிட்ட சில தளங்களுக்கு செல்லும் பொது அதிகளவான டேட்டா வீணடிக்கப்படுவது,

எமது போனில் இருக்கும் செயலிகள் இன்டர்நெட் உடன் இணைந்து தேவையில்லாமல் எமது டேட்டாவை அப்லோட் செய்வது.

பரிந்துரைக்கப்படும் பதிவு


பரிந்துரைக்கப்படும் பதிவு

ஆகவே மேலே குறிப்பிட்ட எதோ ஒரு காரனத்தினால், எமது ஸ்மார்ட் போனில் இருக்கும் டேட்டா எமக்கு தெரியாமலேயே வீணடிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது.

அதனால் இன்றைய பதிவில், எமது ஸ்மார்ட் போனில் இருக்கும் எந்த ஒரு செயலி மூலமும், போன் டேட்டா, வீணடிக்கப்படாமல் தடுப்பது எப்படி என்று பார்ப்போம்.

நீங்கள் எமது தளத்தில் எழுதப்படும் பதிவுகளை அடிக்கடி வாசிப்பவர் என்றால், நாம் ஏற்கனவே எழுதி இருந்த ஆன்ராயிடு போனுக்கான பயர்வால் பதிவை வாசித்து இருப்பீர்கள். அந்த பதிவிலே நாம் பரிந்துரைத்த செயலியை பயன்படுத்தியே, இன்றும் நமது ஆன்ராயிடு போனில் இருக்கும் டேட்டா எந்த வகையிலும் வீணடிக்கப்படாமல் தடுக்க போகிறோம்.

முதலாவாதாக கீழ்வரும், டேட்டா பாவனையை தீர்மானிக்க கூடிய ஆன்ராயிடு சிறப்பு செயலியை உங்களது போனுக்கு பெற்று கொள்ளுங்கள்.
இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து Start என்பதை கிளிக் செய்யுங்கள்.


இப்போது இந்த செயலியில் உங்களது போனில் இருக்கும் அனைத்து செயலிகளும், சிஸ்டம் பைல்ஸ் உட்பட பட்டியலிடப்பட்டு காட்டப்படும்.

இதிலே எந்த எந்த செயலிகள் உங்களது போனில் இருந்து இன்டர்நெட் இணைப்புடன் இணைய வேண்டும் என்பதை கட்டுப்படுத்த முடியும்.


நீங்கள் அனுமதித்த செயலிகள் தவிர, வேறு எந்த ஒரு செயலியும் உங்களது அனுமதி இல்லாமல் இன்டர்நெட் உடன் இணைய முடியாது.

ஆகவே இந்த பயனுள்ள ஆன்ராயிடு செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று உங்களது போனுக்கு தரவிறக்கி கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு சிறப்பு செயலி.

எமது போனில் இருக்கும் செயலிகள் பயன்படுத்தும் டேட்டாவை கட்டுப்படுத்துவது தவிர, ஆன்ராயிடு போனுக்கான பயர்வால் வசதியையும் இந்த செயலி எமக்கு தருகிறது.

ஆன்ராயிடு பயர்வால் வசதி பற்றி எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்ட பதிவை இங்கே கிளிக் செய்து வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

ஆகவே இந்த செயலியை பயன்படுத்தி உங்களது போனில் இருக்கும் செயலிகள், உங்களுக்கு தெரியாமலேயே இன்டர்நெட் உடன் இணைந்து டேட்டாவை வீணடிப்பதை மிக இலகுவாக தடுக்க முடியும்.

பெண்டிரைவ் ஒன்றை பயன்படுத்தி கணனிக்கு விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவுவது எப்படி?

இந்த பதிவிலே விண்டோஸ் இயங்குதளம் சம்மந்தப்பட்ட ஒரு விடயத்தை பார்ப்போம். குறிப்பிட்ட எதோ ஒரு காரணத்தினால் எமது கணணியை போர்மட் செய்ய நேர்ந்தால், எமது கணனிக்கு மறுபடியும் விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவ விண்டோஸ் டி வி டி  தேவைப்படும். ஆனால் விண்டோஸ் டி வி டி ஒன்று எம்மிடம்  இல்லாத சந்தர்ப்பத்தில் டி வி டி-க்கு பதிலாக எம்மிடம் இருக்கும் பெண் டிரைவ் ஒன்றை பயன்படுத்தி விண்டோஸ் இயங்குதளத்தை கணனிக்கு நிறுவுவது எப்படி என்று பார்ப்போம்.

எமது தளத்தில் ஏற்கனவே விண்டோஸ் இயங்குதளத்தை எது விதமான பெண் டிரைவ் டி வி டி எதுவுமே இல்லாமல் நேரடியாக நிறுவி கொள்வது எப்படி என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.


சரி.. இன்றைய பதிவில் பெண் டிரைவ் ஒன்றை விண்டோஸ் பூடபல் டிவைஸ் ஆக மாற்றி உங்களுக்கு தேவையான எந்த ஒரு விண்டோஸ் இயங்குதளத்தையும் மிக இலகுவாக கணனிக்கு நிறுவுவது எப்படி என்று பார்ப்போம்.

முதலாவதாக உங்களுக்கு தேவையான விண்டோஸ் இயங்குதளத்தின் ISO பைல்-ஐ மைக்ரோசாப்ட் விண்டோஸ் தளத்தில் இருந்து தரவிறக்கி கொள்ளுங்கள்.

அடுத்து கீழே குறிப்பிட்டுள்ள, பெண் டிரைவ் ஒன்றை விண்டோஸ் பூடபல் டிவைஸ் ஆக மாற்ற கூடிய சிறப்பு மென்பொருளை உங்களது கணனிக்கு பெற்று கொள்ளுங்கள்.
அடுத்து உங்களது பெண் டிரைவ்-ஐ கணனியில் இணையுங்கள்.

அடுத்து இந்த மென்பொருளை உங்களது கணனியில் ஆரம்பித்து அதிலே உங்களது பெண் டிரைவ்-ஐ தெரிவு செய்து செய்யுங்கள்.


அடுத்து கீழே காட்டப்பட்டிருக்கும் ஐகான்-ஐ கிளிக் செய்யுங்கள்.


அதன் பின்னர் நீங்கள் ஏற்கனவே தரவிறக்கி வைத்துள்ள விண்டோஸ் இயங்குதள ISO பைல்-ஐ தெரிவு செய்து விட்டு Start என்பதை கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவு தான். இப்போது உங்களது பெண் டிரைவ் பூடபல் டிவைஸ் ஆக மாற தயாராகி விட்டது.

ஆகவே மிக இலகுவாக பெண்டிரைவ்-ஐ விண்டோஸ் பூடபல் டிவைஸ் ஆக மாற்ற கூடிய சிறப்பு மென்பொருளை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.

பெண்டிரைவ் விண்டோஸ் பூடபல் மென்பொருள்

சிறிது நேரம் பொறுத்திருங்கள். உங்களது பெண் டிரைவ் விண்டோஸ் பூடபல் டிவைஸ் ஆக மாறிய பின்னர், உங்களது கணணியை ரீஸ்டார்ட் செய்து விட்டு, Bios செட்டிங்க்ஸ்-இற்கு சென்று, அங்கே பூடபல் டிவைஸ் ஆக பெண்டிரைவ்-ஐ தெரிவு செய்து விட்டு, மிக இலகுவாக உங்களது கணணியை போர்மட் செய்து புதிதாக விண்டோஸ் இன்ஸ்டால் செய்யுங்கள்.

ஆன்ராயிடு கஸ்டம் ரொம் என்றால் என்ன? சிறந்த 10 ஆன்ராயிடு கஸ்டம் ரொம்

இன்றைய பதிவில் மற்றுமொரு மிக முக்கியமான ஆன்ராயிடு சம்மந்தமான விடயம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன். ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு வார்த்தை கஸ்டம் ரொம் ஆகும்.

கஸ்டம் ரொம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வதற்கு முன்னர், ஸ்டொக் ரொம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம்.

ஸ்டொக் ரொம் என்றால் என்ன?

எமது ஆன்ராயிடு போனில் குறித்த ஒரு ஏதேனும் ஒரு ஆன்ராயிடு இயங்குதளம் காணப்படும். அத்துடன் குறித்த இயங்குதளம் எமது போனுக்கு தரும் சிறப்பு வசதிகளும் காணப்படும். இந்த வசதிகளுடன் கூடிய இயங்குதளத்தையே, நாம் ஆன்ராயிடு ஸ்டொக் ரொம் என்று அழைக்கிறோம்.

ஸ்டொக் ரொம் ஆனது, ஒரு குறிப்பிட்ட வரையறையை கொண்டது. இதுவரை உங்களது போன் ரூட் செய்யப்படாமல் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல், போனில் தரப்பட்ட இயங்குதளத்துடன் செயற்பட்டு கொண்டு இருக்கிறது என்றால், உங்களுடைய போன் ஆன்ராயிடு ஸ்டொக் ரொம் உடன் இருக்கிறது என்று அர்த்தம்.


கஸ்டம் ரொம் என்றால் என்ன?

உங்களது போனில் காணப்படும் ஸ்டொக் ரொம்-ஐ மாற்றி உங்களது தேவைக்கு ஏற்ற போல, உங்களது ஆன்ராயிடு போனை மாற்றியமைத்தால், அதுவே கஸ்டம் ரொம் என்று அழைக்கப்படுகிறது. ஆகவே ஆன்ராயிடு கஸ்டம் ரொம் என்றால் என்ன என்பது இப்போது தெளிவாகி இருக்கும் என்று நினைக்கின்றேன்.

கஸ்டம் ரொம் ஒன்றை பயன்படுத்தும் போது, உங்களது போனிற்கு ஆன்ராயிடு நிறுவனம் தனது புதிய இயங்குதளமொன்றை அதிகாரபூர்வமாக வெளியிடாத போதும், உங்களால் குறித்த இயங்குதளத்தை உங்களது போனில் நிறுவ முடியும்.


ஆன்ராயிடு போனுக்கான கஸ்டம் ரொம் பல்வேறு மூன்றாம் தரப்பு தனிநபர்/ நிறுவனத்தால் டிவலப் செய்யப்படுகின்றன. அவற்றிலே சிறந்த 10 ஆன்ராயிடு கஸ்டம் ரொம்-களை கீழே பட்டியலிட்டு உள்ளேன்.
ஆன்ராயிடு போனுக்கு இதுவரை வெளியாகி இருக்கு கஸ்டம் ரொம்-களில் மிகச்சிறந்த கஸ்டம் ரொம் விபரங்கள்.

CyanogenMod கஸ்டம் ரொம்

ஆன்ராயிடு போன்களுக்கு வெளியாகி இருக்கும் கஸ்டம் ரொம்-களில், இது ஒரு சிறந்த ரொம் ஆகும். பல்வேறு வசதிகளை தரும் இந்த ரொம் அடிக்கடி சிறந்த பல அப்டேட்-களையும் தர தவறியதில்லை.

Paranoid கஸ்டம் ரொம்

உங்களது ஆன்ராயிடு போனின் ஒட்டு மொத்த தோற்றத்தையே மாற்றியமைக்க கூடிய இந்த ரொம், ஆன்ராயிடு பாவனையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமான ஒரு கஸ்டம் ரொம் ஆக காணப்படுகிறது.


இவை தவிர மேலும் சில சிறந்த ஆன்ராயிடு கஸ்டம் ரொம்-களை கீழே பட்டியலிடுகிறேன்.

Resurrection Remix கஸ்டம் ரொம்
Dirty Unicorns கஸ்டம் ரொம்
XenonHD கஸ்டம் ரொம்
BlissPop கஸ்டம் ரொம்
Omni-ரொம்
MIUI கஸ்டம் ரொம்
Carbon ரொம்
Liquid Smooth ரொம்

ஆனால் உங்களது போனிற்கு கஸ்டம் ரொம் ஒன்றை நிறுவ வேண்டும் என்றால், உங்களது போன் கட்டாயமாக ரூட் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆன்ராயிடு ரூட் செய்வது எப்படி என்ற சிறப்பு பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கஸ்டம் ரொம் ஒன்றை நிறுவுவதற்காக உங்களது ஆன்ராயிடு போனை ரூட் செய்வதால், ஆன்ராயிடு போனுக்கான வாரண்டி இல்லாமல் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்ராயிடு ரூட் பற்றி அனைத்தும்.. - சிறப்பு பதிவு

ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் காணப்படும் மிகப்பெரிய பிரச்சினை ஒன்று தான், ஆன்ராயிடு ரூடிங் என்றால் என்ன? ரூட் செய்வது எப்படி? ரூட் சென்வதன் நன்மை தீமைகள் என்ன என்பதாகும்.

எமது பேஸ்புக் பேஜ் மூலமாக கூட பலபேர் ஆன்ராயிடு ரூடிங் சம்மந்தமாக கேட்டு இருந்தார்கள். ஆகவே அனைவரினது கேள்விகளுக்கும் விடை கூறும் விதமாக இன்றைய பதிவில் ஆன்ராயிடு ரூடிங் சம்மந்தமான அனைத்து விடயங்களையும் பகிர்ந்து கொள்ள போகிறேன். இந்த பதிவில் ரூடிங் சம்மந்தமான கீழ்வரும் விடயங்களை பற்றி விளக்கமாக பார்ப்போம்.

  1. ஆன்ராயிடு ரூடிங் என்றால் என்ன? அதன் நன்மை தீமைகள் என்ன?
  2. ரூட் செய்ய முன் உங்களது போனில் செய்ய வேண்டியவை.
  3. ரூட் செய்வது எப்படி?
  4. ரூட் செய்யப்பட்டதை உறுதி செய்வது எப்படி?
  5. ரூட் செய்த போனை அன் ரூட் செய்வது எப்படி?

ஆன்ராயிடு ரூடிங் என்றால் என்ன? ரூட் செய்வதன் நன்மை தீமைகள் என்ன?

இது குறித்தான சிறப்பு பதிவொன்றை எமது தளத்தில் ஏற்கனவே எழுதி இருந்தேன். ஆன்ராயிடு ரூடிங் என்றால் என்ன? உங்களது ஆன்ராயிடு போனை ரூட் செய்வதால் என்னவெல்லாம் செய்து கொள்ள முடியும். ரூட் செய்வதன் நன்மைகள் என்ன, தீமைகள் என்ன என்ற அனைத்து விதமான தகவல்களையும் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.


ரூட் செய்ய முன் உங்களது போனில் செய்ய வேண்டியவை.

அடுத்து, உங்களது போனை ரூட் செய்ய முன்னர், போனில் என்னவெல்லாம் செய்து கொள்ள வேண்டும் என்பதை விளக்கமாக பார்ப்போம்.

ஒரு சில ரூடிங் முறைகள் மூலம் உங்களது போனை ரூட் செய்வதால், உங்களது போனில் இருக்கும் அனைத்து தகவல்களும் அழிந்து போக வாய்ப்பு உள்ளது. ஆனால் இது அனைத்து ரூடிங் முறைகளுக்கும் பொருத்தம் இல்லை. நான் எனது போனை ரூட் செய்யும் போது, எது விதமான டேட்டாகளும் அழியவில்லை. இருந்த போதிலும் முன்னெச்சரிக்கையாக ரூட் செய்ய முன்னர், உங்களது போனில் இருக்கும் அனைத்து பைல்-களையும் பேக்கப் எடுத்து வைத்து கொள்வது பாதுகாப்பனதாகும்.

ஆகவே உங்களுடைய போனில் இருக்கும் அனைத்து பைல்-களையும் (செயலிகள் உட்பட) பேக்கப் எடுக்க கீழ்வரும் ஆன்ராயிடு சிறப்பு செயலியை பயன்படுத்துங்கள்.

ஆன்ராயிடு சிறப்பு செயலி

இந்த செயலி மூலம் அனைத்து பைல், டேட்டா, செயலிகள் என்பவற்றை பேக்கப் எடுத்து, அதை உங்களது மெமரி கார்டு-இல் அல்லது கணனியில் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.


போன் பேட்டரி சார்ஜ்-ஐ 80%-க்கு அதிகமாக வைத்து கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு போனை ரூட் செய்வதற்கு குறைந்தது 5 முதல் 15 நிமிடம் வரை எடுக்கும். ஆகவே ரூட் ப்ராசெஸ் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் உங்களது போனில் பேட்டரி சார்ஜ் தீர்ந்து விட்டால், சிஸ்டம் பைல்-களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே உங்களது போனில் குறைந்தது 80% ஆவது சார்ஜ் இருக்க வேண்டும்.

சாதாரண வேகத்துடன் கூடிய தடையில்லாத இன்டர்நெட் இணைப்பு

ரூட் செய்யும் போது சில சிஸ்டம் பைல் மோடிபிகேசன்-கள் நடைபெறும். ஆகவே இதை செய்து கொள்ள உங்களது போனில் இன்டர்நெட் இணைப்பு கட்டாயமாக இருக்க வேண்டும். மேலும் குறித்த இன்டர்நெட் இணைப்பு தடையில்லாமல் தொடர்ந்து செயட்படகூடிய இன்டர்நெட் இணைப்பாக இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பதால் ரூட் ப்ராசெஸ் நடைபெறும் போது சிஸ்டம் எரர்-கள் வரும் வாய்ப்பு குறைவடையும்.

கணணி மூலமா ரூட் செய்ய போகிறீர்கள்?

உங்களது போனை போனில் இருந்த படியே ரூட் செய்வது தான் சிறந்ததாகும். இவ்வாறு போனில் இருந்தே செய்வதால், ரூட் ப்ராசெஸ் நடக்கும் போது பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. அப்படியில்லாமல் கணனியில் இருந்து ரூட் செய்ய போகிறீர்கள் என்றால், உங்களது போனுக்கு தேவையான சரியான ட்ரைவர்ஸ் என்பவற்றை நிறுவி கொள்ளுங்கள்.

அடுத்துடன் உங்களது கணனியில் நிறுவி இருக்கும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளையும் நிறுத்தி வையுங்கள்.

ரூட் செய்யும் போது ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் என்ன செய்வது?

ரூட் செய்யும் போது சிஸ்டம் அளவில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால், எம்மால் எதுவுமே செய்ய முடியாது. அவ்வாறான சூழ்நிலை ஒன்றில், உங்களது போனை கஸ்டமர் சர்வீஸ் செண்டர் ஒன்றிற்கு எடுத்து சென்றே திருத்தி கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். அப்படியல்லாமல், ரூட் செய்யமுடியவில்லை. ரூட் எரர் என்ற செய்திகள் வருமேயானால், உங்களது போனை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்வதன் மூலம் போனை பழைய நிலைக்கு திரும்ப பெற்று கொள்ள முடியும்.

சரி.. இப்போது முக்கியமான பகுதிக்கு வருவோம்..

ஆன்ராயிடு போனை ரூட் செய்வது எப்படி?

ஆன்ராயிடு போனை ரூட் செய்வது எப்படி என்பது பற்றிய இரண்டு சிறப்பு பதிவுகளை எமது தளத்தில் ஏற்கனவே எழுதி இருந்தேன். அதிலே வெறும் 5 நிமிடத்திற்குள் ஆன்ராயிடு போனை மிக இலகுவாக போனில் இருந்தே ரூட் செய்து கொள்ளும் முறை, பெரும்பாலான ஆன்ராயிடு டிவைஸ்-களை வெற்றிகரமாக ரூட் செய்ய உதவியது. அந்த சிறப்பு செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் இணைப்பில் சென்று உங்களது போனிற்கு பெற்று கொள்ளுங்கள்.
குறித்த ரூடிங் சிறப்பு செயலியை போனுக்கு தரவிறக்குவது எப்படி? மற்றும் குறித்த செயலியை பயன்படுத்தி மிக இலகுவாக ரூட் செய்து கொள்வது எப்படி என்ற சிறப்பு பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதற்கு அடுத்த படியாக சிறந்த ரூடிங் செயலிகளாக கீழ்வரும் செயலிகளை குறிப்பிடலாம்.

ரூட் ஜீனியஸ்
ஐ ரூட்

அது தவிர, மேலும் 12 சிறப்பு ஆன்ராயிடு ரூடிங் செயலிகள் பற்றிய சிறப்பு பதிவொன்றை எழுதி இருந்தேன். ஆகவே மேலே குறிப்பிட்டுள்ள முறை மூலம் உங்களது ஆன்ராயிடு போனை ரூட் செய்ய முடியவில்லை என்றால், கீழ் குறிப்பிட்டுள்ள 12 சிறப்பு ஆன்ராயிடு ரூடிங் செயலிகள் மூலம் முயற்சித்து பாருங்கள்.

ரூட் செய்யப்பட்டதை உறுதி செய்து கொள்வது எப்படி?

பெரும்பாலும் உங்களுடைய போன் ரூட் செய்யப்பட்டதும் குறித்த செயலியில், ரூட் சரியாக செய்யப்பட்டது என்ற வாசகம் தோன்றும். அது தவிர, கீழ்வரும் சிறப்பு செயலி மூலம் கூட உங்களது ஆன்ராயிடு போன் சரியாக ரூட் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள .முடியும்.

ஆன்ராயிடு சிறப்பு செயலி


அன்-ரூட் செய்வது எப்படி?

சரி.. இறுதியாக என்னுடைய போனுக்கு ரூட் தேவையில்லை என்று நினைப்பவர்கள் எப்படி ரூட்-ஐ இல்லாமல் செய்து கொள்வது என்று பார்ப்போம்.

ரூட் செய்த ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்களை மிக இலகுவாக அன்ரூட் செய்து கொள்வது எப்படி என்பது பற்றிய சிறப்பு பதிவொன்றை எமது தளத்தில் ஏற்கனவே எழுதி இருந்தேன். அந்த சிறப்பு பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

ஆகவே இந்த பதிவில் ஆன்ராயிடு ரூடிங் சம்மந்தமான உங்களது அனைத்து கேள்விகளுக்கும் விடையளித்து விட்டேன் என்று நினைக்கின்றேன். மேலே குறிப்பிட்டுள்ள அறிவுறுத்தல்களின் படி உங்களது ஆன்ராயிடு போனையும் மிக இலகுவாக ரூட் செய்திடுங்கள்.

ஆன்ராயிடு போனில் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புக்களை ரெகார்டிங் செய்வது எப்படி?

ஸ்மார்ட் போன்களை உபயோகிக்கும் நாம், குறிப்பிட்ட ஏதோ ஒரு காரனத்திற்காக எமக்கு உள்வரும் அல்லது வெளிச்செல்லும் அழைப்புக்களை ரெகார்ட் செய்து கொள்ள வேண்டிய தேவை ஏற்படலாம்.

ஆனால் இன்று காணப்படும் எந்த ஒரு ஸ்மார்ட் போனும், அழைப்புக்களை ரெகார்ட் செய்வதற்கான நேரடியான வசதியை வழங்குவதில்லை. குறிப்பிட்ட ஏதேனும் ஒரு செயலியை பயன்படுத்தியே கால் ரெகார்டிங் செய்து கொள்ள வேண்டியதாக உள்ளது.

எமது பேஸ்புக் பேஜ் மூலம் பல ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள், தங்களுக்கு வரும் அழைப்புக்களை ஸ்மார்ட் போன் மூலம் ரெகார்டிங் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால், இந்த சிறப்பு பதிவை எழுதுகிறேன்.


பரிந்துரைக்கப்படும் பதிவு

ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்களுக்கு வரும் அழைப்புக்களை ரெகார்ட் செய்ய ப்லே ஸ்டோரிலே பல்வேறு செயலிகள் காணப்படுகின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலான செயலிகள், தமது வேலையை சரிவர செய்து முடிக்க தவறுகின்றன. ஆகவே இன்றைய பதிவில், ப்லே ஸ்டோரில் காணப்படும் மிகச்சிறந்த கால் ரெகார்டிங் செயலிகளை உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

அவற்றிலே மிக சிறந்த கால் ரெகார்டிங் செயலியான 'கால் ரெகார்டர்' செயலியை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றியும் கூறுகிறேன்.

முதலாவதாக கீழே வழங்கப்பட்டிருக்கும் கால் ரெகார்டர் செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு பெற்று கொள்ளுங்கள்.
அடுத்து இந்த செயலியை ஆரம்பித்து, உங்களுக்கு தேவையானது போல செட்டிங்க்ஸ் மாற்றங்களை செய்து கொள்ளுங்கள்.


இப்போதிலிருந்து நீங்கள் உங்களது போன் மூலம் எடுக்கும் ஒவ்வொரு அழைப்பும் இந்த செயலியில் தானாக ரெகார்டிங் செய்யப்படும்.


மிகவும் இலகுவாக உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புக்களை ரெகார்டிங் செய்து கொள்ள உதவும் இந்த அருமையான செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு கால் ரெகார்ட் செயலி 1

இதே போன்று மேலும் சில சிறந்த ஆன்ராயிடு கால் ரெகார்டிங் செயலிகளை கீழே பட்டியலிட்டுள்ளேன்.

ஆன்ராயிடு கால் ரெகார்ட் செயலி 2
ஆன்ராயிடு கால் ரெகார்ட் செயலி 3
ஆன்ராயிடு கால் ரெகார்ட் செயலி 4
ஆன்ராயிடு கால் ரெகார்ட் செயலி 5

இவை அனைத்துமே கூகுள் ப்லே ஸ்டோரில் காணப்படும் மிகச்சிறந்த கால் ரெகார்டிங் செயலிகள் என்பதும் அதே போல், இந்த செயலிகளை உங்களது போனில் நிறுவ, உங்களது போன் ரூட் செய்யப்பட்டிருக்க தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் மெசேஜ் படிக்கப்பட்டதாக வரும் நீல நிற டிக்கை மறைப்பது எப்படி?

ஸ்மார்ட் போன்களை பயன்படுத்திவரும் பெரும்பாலானோரால் மிகவும் விரும்பி பாவிக்கப்பட்டு வரும் வாட்ஸ்அப் மெசஞ்சர்-இல் இருக்கும் மிகப்பெரிய ஒரு பிரச்சினை, நாம் குறித்த ஒரு வாட்ஸ்அப் மெசேஜ்-ஐ வாசித்த பின்னர் தோன்றும் நீல நிற டிக்.

இதை பற்றி பெரிதாக ஒரு விளக்கமும் தர தேவையில்லை என்று நினைக்கிறேன். எமது நண்பர் ஒருவர், எமக்கு வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் ஒன்றை அனுப்பும்போது குறித்த மெசேஜ்-ஐ நாம் படித்து முடித்ததும், குறித்த மெசேஜ் படிக்கப்பட்டு விட்டதாக அனுப்பியவருக்கு தெரிவிப்பதே நீல நிற டிக் ஆகும்.

வாட்ஸ்அப்-இல் இருக்கும் வசதிகளில் மிகச்சிறந்த ஒரு வசதியாக கருதப்படும் இந்த நீல நிற டிக் வசதி, சில சமயம் எமக்கு தொல்லை தரும் ஒரு வசதியாகவே பார்க்கபடுகிறது.


குறிப்பிட்ட ஏதோ ஒரு காரணத்தினால், நாம் ஒருவருடைய மெசேஜ்-ஐ படித்து முடித்த பிறகும், அது அனுப்பியவருக்கு தெரியக்கூடாது என்ற ஒரு நிலை தோன்றலாம்.

அவ்வாறான சூழ்நிலை ஒன்று வரும் போது, வாட்ஸ்அப்-இல் உங்களால் மெசேஜ் படித்து முடிந்ததும் தோன்றும் நீல நிற டிக்கை மறைப்பது எப்படி, அல்லது நீல நிற டிக் தோன்றாமல் மெசேஜ்-ஐ படிப்பது எப்படி என்று பார்ப்போம்.

இந்த வேலையை மிக இலகுவாக கீழ்வரும் இரண்டு முறைகள் மூலம் செய்து கொள்ள முடியும்.

1 - உங்களது போனில் Incognito Mode-ஐ செயற்படுத்துவதன் மூலம்.
2 - உங்களது போனில் இருக்கும் Flight Mode எனப்படும் வசதி மூலம்.

சரி.. மேலே குறிப்பிட்டுள்ள முறைகளை எப்படி செயற்படுத்துவது என்று விளக்கமாக பார்ப்போம்.

முதலாவது முறையை பயன்படுத்தி, அதாவது உங்களது போனில் Incognito Mode-ஐ செயற்படுத்துவதன் மூலம் வாட்ஸ்அப் மெசேஜ் படிக்கப்பட்டதும் தோன்றும் நீல நிற டிக்கை மறைப்பது எப்படி என்று பார்ப்போம்.

இந்த உபாயத்தை உங்களது போனில் செயற்படுத்தி கொள்வது எப்படி என்பது பற்றிய சிறப்பு பதிவொன்றை எமது தளத்தில் ஏற்கனவே எழுதி இருந்தேன். அந்த பதிவை கீலே வலங்கப்பட்டிருக்கும் இனைப்பில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

உங்களது போனில் Incognito Mode-ஐ செயற்படுத்துவது எப்படி?

சரி.. இப்போது இரண்டாவது முறையை பயன்படுத்தி வாட்ஸ் அப் இல் நீல நிற டிக் தோன்றாமல் மெசேஜ்-ஐ வாசிப்பது எப்படி என்று பார்ப்போம்.

வாட்ஸ்அப்-இல் குறித்த ஒரு மெசேஜ் வந்ததும் உங்களது போனில் இருக்கும் Flight Mode வசதியை செயட்படுத்துங்கள். இவ்வாறு செய்வதால், உங்களது போனிட்கும் மொபைல் நெட்வொர்க்-இற்கும் இருக்கும் தொடர்பு துண்டிக்கப்படுகிறது.

ஆகவே இந்த வசதியை செயற்படுத்திய பின்னர், குறித்த மெசேஜ்-ஐ வாட்ஸ்அப்-இல் திறந்து வாசியுங்கள். மெசேஜ்-ஐ வாசித்து முடித்ததும், மறுபடியும் வாட்ஸ்அப்-ஐ மூடி விட்டு Flight Mode வசதியை துண்டியுங்கள்.


இந்த முறை மூலம் வாட்ஸ்அப் மெசேஜ்களை வாசித்தால், மெசேஜ்-ஐ அனுப்பியவருக்கு நீல நிற டிக் காட்டப்பட மாட்டது. ஆகவே குறித்த நபர், நீங்கள் இன்னும் அவருடைய மெசேஜ்-ஐ வாசிக்கவில்லை என்று நினைத்து கொண்டு இருப்பார்.

ஆனால் மறுபடியும் நீங்கள் வாட்ஸ்அப்-இல் ஆன்லைன் சென்றால் குறித்த நபருக்கு மெசேஜ் படிக்கப்பட்டு விட்டதாக நீல நிற டிக் சென்று விடும்.

ஆகவே Incognito Mode-ஐ செயற்படுத்தி வாட்ஸ்அப் மெசேஜ்-ஐ வாசிக்க நீங்கள், இரண்டாவது முறையில் குறிப்பிட்டுள்ளவாறு மொபைல் நெட்வொர்க்-ஐ Off செய்ய தேவையில்லை. ஆகவே மொபைல் நெட்வொர்க்-ஐ நிறுத்தாமல் வாட்ஸ்அப் மெசேஜ் படிக்கப்பட்டதும் தோன்றும் நீல நிற டிக்கை மறைக்க நினைப்பவர்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ள Incognito Mode உபாயம் மிகவும் சிறந்ததாக அமையும்.

ஜிமெயில் கணக்கு ஒன்றின் மூலம் உங்களது ஆன்ராயிடு போனை கண்காணிப்பு கேமரா ஆக மாற்றி மற்றுமொரு போனுக்கு அல்லது கணனிக்கு லைவ் ஸ்ட்ரீமிங் எப்படி?

இன்றைய பதிவில் மற்றுமொரு மிகச்சிறந்த கண்காணிப்பு கேமரா சம்மந்தப்பட்ட விடயமொன்றுடன் உங்களை  சந்திக்கின்றேன். எமது தளத்தில் ஏற்கனவே உங்களது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனை எப்படியெல்லாம் ஒரு கண்காணிப்பு கேமரா ஆக மாற்றி பாதுகாப்பு சம்மந்தமான விடயங்களுக்கு பயன்படுத்தலாம் என்று கூறியிருந்தேன். அந்த பதிவுகளை நீங்கள் வாசிக்க தவறியிருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

ஆன்ராயிடு போனை கண்காணிப்பு கேமரா ஆக உபயோகிப்பது எப்படி?

ஆண்ராயிடு போனை ஸ்பை கேமரா ஆக மாற்றி கணணிக்கு லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி?


சரி.. இன்றைய பதிவிலும் இதே மாதிரியான மற்றுமொரு உபாயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதாவது உங்களுடைய ஆன்ராயிடு போனை இரு முறைகள் மூலம் கண்காணிப்பு கேமரா ஆக பயன்படுத்துவது எப்படி என்பதாகும்.

முதலாவதாக உங்களது போனில் இருந்து கேமரா மூலம் ஒளிபரப்பப்படும் வீடியோவை இன்னுமொரு போனில் நேரடியாக ஒளிபரப்புவதும், அதே போல் அடுத்து கணணி ஒன்றில் நேரடியாக ஒளிபரப்புவது எப்படி என்பதுமாகும்.

இந்த அனைத்து வேலைகளையும் மிக இலகுவாக உங்களது ஜிமெயில் கணக்கு ஒன்றின் மூலம் செய்து கொள்ள முடியும்.

சரி. எப்படி என்று விளக்கமாக பார்ப்போம்.

முதலாவதாக கீழே வழங்கப்பட்டிருக்கும் ஆன்ராயிடு போனை கண்காணிப்பு கேமரா ஆக மாற்ற கூடிய சிறப்பு செயலியை உங்களது போனிற்கு பெற்று கொள்ளுங்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து Start என்பதை கிளிக் செய்யுங்கள்.


அடுத்து தோன்றும் திரையில் என்பதை Camera தெரிவு செய்து, Next என்பதை கிளிக் செய்யுங்கள்.


அடுத்து தோன்றும் திரையில் உங்களது ஜிமெயில் கணக்கு ஒன்றை தெரிவு செய்து லொகின் செய்யுங்கள்.


மேலே காட்டியிருப்பது போல் Save Power என்பதை தெரிவு செய்வதால் உங்களுடைய போன் ஸ்க்ரீன் லாக் ஆகி விடும். ஆகவே போன் பேட்டரி சார்ஜ்-ஐ முடிந்தவரை சேமித்து கொள்ள முடியும்.

சரி.. இப்போது நீங்கள் உங்களது போனில் இருந்து ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் வீடியோவை இன்னுமொரு ஆன்ராயிடு போன் மூலம் பார்க்க வேண்டும் என்றால் குறித்த செயலியை அந்த ஆன்ராயிடு போனிலும் நிறுவ வேண்டும். நிறுவும் போது Viewer என்பதை தெரிவு செய்ய வேண்டும்.


அடுத்து வீடியோ ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஆன்ராயிடு போனில் லொகின் செய்த அதே ஜிமெயில் கணக்கு மூலம் இந்த போனிலும் லொகின் செய்வதால், மிக இலகுவாக முதலாவது ஆன்ராயிடு போனில் இருந்து ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் வீடியோவை இரண்டாவது ஆன்ராயிடு போன் மூலம் பார்த்து கொள்ள முடியும்.

ஆன்ராயிடு போன் மூலம் இல்லாமல் கணணி ஒன்றின் மூலம் குறித்த லைவ் ஸ்ட்ரீமிங் வீடியோவை பார்க்க வேண்டும் என்றால், உங்களது லைவ் ஸ்ட்ரீமிங் நடந்து கொண்டிருக்கும் ஆன்ராயிடு போனில் காட்டப்படும் குறித்த தளத்திற்கு, உங்களது கணனியில் பயர்பாக்ஸ் உலாவி மூலம் சென்று, குறித்த ஜிமெயில் கணக்கிற்கு லொகின் செய்வதன் மூலம், கணனியில் இருந்து கூட லைவ் ஸ்ட்ரீமிங் வீடியோவை பார்க்க முடியும்.


ஆகவே கணணி ஸ்மார்ட் என்று அனைத்திற்கும் வீடியோ லைவ் ஸ்ட்ரீமிங் செய்யக்கூடிய இந்த அருமையான செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ள முடியும்.

ஆன்ராயிடு சிறப்பு செயலி

குறிப்பு 

உங்களது போனில் இருந்து வீடியோவை லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய வேண்டும் என்றால், உங்களது போனில் இன்டர்நெட் இணைப்பு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த உபாயத்தை எந்த விதமான தவறான காரியங்களுக்கும் பயன்படுத்த வேண்டாம் என்று உங்களை அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

பேஸ்புக் வீடியோ ப்ரொபைல் பிக் வசதி அறிமுகம். உங்களது பேஸ்புக் கணக்கிலும் வீடியோ ஒன்றை ப்ரொபைல் போட்டோ ஆக வைப்பது எப்படி?

பேஸ்புக் பயன்படுத்தியது போதும், பேஸ்புக் அலுப்பாகி விட்டது என்று ஒரு முடிவை எடுத்து நாம் பேஸ்புக்கில் இருந்து விலக முயற்ச்சிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், எதாவது ஒரு புது விதமான பேஸ்புக்  வசதியை அறிமுகப்படுத்தி எம்மை பேஸ்புக் உடன் கட்டிப்போட மார்க் தவறியதில்லை.

அந்த வகையில் அண்மையில் வெளியான ஒரு சில சிறந்த பேஸ்புக் வசதிகளை குறிப்பிட்டு சொல்லலாம்.

பேஸ்புக் அறிமுகப்படுத்தியிருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தும் வசதி

பேஸ்புக் மெசஞ்சர்-இல் கூடைப்பந்து கேம் விளையாடுவது எப்படி?

இன்று உலகில் காணப்படும் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கு மத்தியில், முன்னிலையில் நிற்கும் பேஸ்புக் சமூக வலைத்தளமானது தனது அடுத்த புதிய பேஸ்புக் வசதியை தனது பயனர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.


இந்த புத்தம்புதிய வசதி என்னவென்றால், எமது பேஸ்புக் ப்ரோபைல் போட்டோவுக்கு பதிலாக வீடியோ ஒன்றை வைப்பதாகும். இந்த வசதி வெகுவிரைவில் அறிமுகமாக இருப்பதாக ஒரு சில மாதங்களுக்கு முன்னரே பேஸ்புக் நிறுவனம் அறிவித்திருந்தது.

அந்த நேரம் முதல் குறிப்பிட்ட சில பேஸ்புக் பயனர்களுக்கு இந்த புதிய வசதியை ஒவ்வொரு நாளும் வழங்கிக்கொண்டு இருந்தது. அந்த வகையில் தற்போது இந்த பேஸ்புக் ப்ரோபைல் வீடியோ வசதியை அனைத்து பேஸ்புக் பயனர்களின் மத்தியிலும் அறிமுகமாக்கி இருக்கிறது.

ஆகவே இனி நீங்களும் உங்களது ஆன்ராயிடு அல்லது ஐபோன் மூலம் 7 செக்கன் அளவிலான வீடியோ கோப்பு ஒன்றை உங்களது பேஸ்புக் ப்ரொபைல் வீடியோ ஆக வைத்து கொள்ள முடியும். இதுவரை இந்த வசதி ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெகு விரைவில் இந்த வசதி கணணி மூலம் பேஸ்புக் பயன்படுத்துவோருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
பேஸ்புக் ப்ரொபைல் வீடியோ வசதியை உங்களது ப்ரொபைல்-இலும் பெற்றுக்கொள்ள, உங்களது ஆன்ராயிடு அல்லது ஐபோன் மூலம் பேஸ்புக் கணக்கிற்கு லோக் ஆகி, உங்களது ப்ரொபைல்-இற்கு செல்லுங்கள்.

அங்கே தற்போது இருக்கும் உங்களது ப்ரொபைல் போட்டோவை கிளிக் செய்யுங்கள்.

இப்போது, படத்தில் காட்டியுள்ளது போல் வீடியோ ப்ரொபைல் போட்டோவை செயட்படுத்துவதட்கான வசதி காட்டப்படும். அதை கிளிக்  மூலம், புதியதொரு வீடியோவையோ அல்லது ஏற்கனவே உங்களது போனில் இருக்கும் வீடியோ ஒன்றையோ உங்களது பேஸ்புக் ப்ரொபைல் வீடியோ ஆக வைத்து கொள்ள முடியும்.


குறிப்பு

உங்களது பேஸ்புக் ப்ரொபைல்-இல் வீடியோ ஒன்றை செட் அப் செய்வதற்கான வசதி இல்லை என்றால், உங்களது பேஸ்புக் செயலியை அப்டேட் செய்து விட்டு மறுபடியும் பாருங்கள். அப்போதும் குறித்த வசதி இல்லை என்றால், இந்த வசதி இன்னும் உங்களது பேஸ்புக் கணக்கிற்கு வரவில்லை என்று அர்த்தம்.

கவலை வேண்டாம்... உலகளாவிய ரீதியில் பேஸ்புக் வீடியோ ப்ரொபைல் வசதியை அனைத்து பயனர்களுக்கும் ஏற்கனவே பேஸ்புக் நிறுவனம் வழங்க ஆரம்பித்து விட்டது. ஆகவே ஓரிரு நாட்கள் பொறுத்திருங்கள். உங்களது பேஸ்புக் கணக்கிற்கும் இந்த புதிய வசதி வந்து சேரும்.

பொய்யான பேஸ்புக் கணக்குகளை கண்டு பிடிக்க பேஸ்புக் அறிமுகப்படுத்தும் புதிய டூல்

கோடிக்கணக்கான பயனர்களை கொண்டிருக்கும் பேஸ்புக் சமூக வலைத்தலமானது, தனது பயனர்களின் நன்மை கருதி, அடிக்கடி சிறந்த பல வசதிகளை அறிமுகப்படுத்தி கொண்டு இருப்பது நாம் யாவரும் அறிந்த விடயமே.

அந்த வகையில் பேஸ்புக் தளத்தில் அண்மையில் வெளியாகி பெரிதும் வரவேற்பு பெற்ற கீழ்  குறிப்பிடப்பட்டிருக்கும் வசதியை குறிப்பிடலாம்.

பேஸ்புக் மெசஞ்சர்-இல் கூடைப்பந்து கேம் விளையாடுவது எப்படி?


இந்த அளவுக்கு உலக இணைய பாவனையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாக பேஸ்புக் சமூக வலைத்தளத்தை பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சினையாக, தமது பெயரில் தமது போட்டோவுடன் உருவாக்கப்பட்டிருக்கும் பொய்யான கணக்குகளை குறிப்பிடலாம்.

குறிப்பிட்ட எதோ ஒரு காரணத்தினால் தங்களுடைய பெயரில் வேறு ஒருவரால் ஒரு பொய்யான பேஸ்புக் கணக்கு உருவாக்கப்பட்டு, அது தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு வரலாம்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையை நீங்களும் எதிர் கொண்டு இருந்தால், என்ன செய்வதென்று தெரியாமல் பேஸ்புக்-இற்கு ஒரு முறை முறைப்பாடு ஒன்றை செய்து விட்டு பேசாமல் இருந்து இருப்பீர்கள்.

ஆனால் இனி அந்த கவலையே வேண்டாம்.
இந்த மாதிரியான குறைகளை தீர்க்கும் முகமாக பேஸ்புக், பொய்யான ப்ரோபைல்-களை கண்டு பிடிக்கும் புதுவிதமான டூல் ஒன்றை பேஸ்புக்-இல் அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்த வசதி மூலம், உங்களது பேஸ்புக் பெயர், மற்றும் ப்ரோபைல் போட்டோவுடன் புதிய கணக்கொன்று ஆரம்பிக்கப்பட்டால், பேஸ்புக்-இல் இருந்து உங்களது கணக்கிற்கு தானாக ஒரு நோடிபிகேசன் வரும். இந்த நோடிபிகேசனில் குறித்த கணக்கு உங்களை ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறதா என்பதை தெரிவிக்க முடியும்.

பரிந்துரைக்கப்படும் பதிவு

குறித்த கணக்கும் பொய்யானது என்பதை நீங்கள் பேஸ்புக்-இற்கு உறுதிப்படுத்தும் சந்தர்ப்பத்தில் குறித்த கணக்கை பேஸ்புக் முடக்கி விடும்.

இந்த புதிய வசதி குறித்த தகவலை, பேஸ்புக் பாதுகாப்பு தலைமை நிருவாகி டேவிஸ் என்பவர், மாஷெபல் எனப்படும் பிரபல்யமான தளத்திற்கு தெரிவித்து உள்ளார்.

கல்லூரி அல்லது அலுவலகத்தில் இருக்கும் ஒட்டு மொத்த வைபை நெட்வொர்க்-ஐயே உங்களது போனில் இருந்து கட்டுப்படுத்தும் அதிபயங்கர ட்ரிக்

எமது தளத்தில் அடிக்கடி வைவை சம்மந்தமான பதிவுகள் எழுதப்படுவது நீங்கள் யாவரும் அறிந்த விடயமே. ஸ்மார்ட் போன் மற்றும் கணணிகளை பயன்படுத்துவோருக்கு வைபை சம்மந்தமான உபாயங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதாலேயே எமது தளத்தில் இது சம்மந்தமான பதிவுகள் அடிக்கடி எழுதப்படுகின்றன.

அந்த வகையில் எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்ட மிகச்சிறந்த வைபை சம்மந்தமான ஒரு சில பதிவுகளை கீழே பட்டியலிட்டுள்ளேன். இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தால், குறித்த லின்க்கை கிளிக் செய்து வாசித்து கொள்ள முடியும்.

கல்லூரி அல்லது அலுவலகத்தில் இருக்கும் கணனிகளுக்கு போடப்பட்டிருக்கும் வைபை பாஸ்வேர்ட்-ஐ தெரிந்து கொள்வது எப்படி?

உங்களது ஆன்ராயிடு போனில் இருக்கும் வைபை நெட்வொர்க் உடைய கடவுச்சொல்லை தெரிந்து கொள்வது எப்படி?

உங்களது வைபை நெட்வொர்க் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்று ஆன்ராயிடு போன் மூலம் தெரிந்து கொள்வது எப்படி?

கல்லூரி அல்லது அலுவலக கணனியில் இருக்கும் இன்டர்நெட்-ஐ எமது ஸ்மார்ட் போன்களுடன் ஷேர் செய்வது எப்படி?

ஆகவே இன்றைய பதிவிலும் மற்றுமொரு அதிபயங்கரமான வைபை உபாயம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன்.


அதாவது உங்களுடைய ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் மூலம், குறிப்பிட்ட ஒரு வைபை நெட்வொர்க்-ஐயே கட்டுப்படுத்துவது எப்படி என்பதாகும். இந்த உபாயம் போன் மூலம் உங்களது அலுவலக வைபை நெட்வொர்க்-ஐ அல்லது உங்களது கல்லூரி வைபை நெட்வொர்க் அப்படியும் இல்லையாயின் வேறு ஏதேனும் ஒரு ஒட்டுமொத்த வைபை நெட்வொர்க்-ஐயே உங்களது ஆன்ராயிடு போனில் இருந்து கட்டுப்படுத்த முடியும்.

எப்படி என்றால், குறித்த வைபை நெட்வொர்க்-இல் இணைந்து இருக்கும் டிவைஸ்-களில் எந்த எந்த டிவைஸ்-கள், குறித்த வைபை நெட்வொர்க்-இல் இணைந்து இருக்க வேண்டும் என்பதை உங்களால் கட்டுப்படுத்த முடியும். (உங்களது ஸ்மார்ட் போனும் குறித்த வைபை நெட்வொர்க்-இல் இணைந்து இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.)

நீங்கள் இந்த டிவைஸ், இந்த வைபை நெட்வொர்க்-இல் இருக்க தேவையில்லை என்று நினைத்தால், ஒரு கிளிக் மூலம் குறித்த டிவைஸ்-ஐ வைபை நெட்வொர்க்-இல் இருந்து நீக்கி விட முடியும்.

குறிப்பு

இந்த உபாயத்தை உங்களது ஆன்ராயிடு போனில் செயற்படுத்த வேண்டும் என்றால், கட்டாயமாக உங்களது ஆன்ராயிடு போன் ரூட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆன்ராயிடு ரூட் என்றால் என்ன? இதை செய்வதன் நன்மை தீமைகள் என்ன என்பதை பற்றிய பதிவுகள் எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்டன. ஆகவே உங்களது ஆன்ராயிடு போன் இன்னும் ரூட் செய்யப்படவில்லை என்றால், கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று மிக இலகுவாக உங்களது ஆன்ராயிடு போனை ரூட் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு போனை 5 நிமிடத்திற்குள் ரூட் செய்வது எப்படி?

அன்ராயிடு போனை ரூட் செய்வதற்கான 12 சிறந்த செயலிகள்

இந்த அளவுக்கு அதிசக்தி வாய்ந்த இந்த உபாயத்தை உங்களது ஆன்ராயிடு போனில் இருந்து செய்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.

முதலாவதாக, கீழே வழங்கப்பட்டுள்ள வைபை நெட்வொர்க்கை கட்டுப்படுத்தகூடிய ஆன்ராயிடு சிறப்பு செயலியை உங்களது போனிற்கு பெற்றுக்கொள்ளுங்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து ரூட் அனுமதியை வழங்குங்கள்.


அடுத்து இந்த செயலியில் மேலே வலது மூலையில் காணப்படும் Start ஐகான்-ஐ கிளிக் செய்யுங்கள்.


இப்போது குறித்த நெட்வொர்க்-இல் இணைந்து இருக்கும் அனைத்து டிவைஸ்-களும் பட்டியலிடப்பட்டு காட்டப்படும்.


இதிலே காட்டப்படும் டிவைஸ்-களில், நீங்கள் குறித்த வைபை நெட்வொர்க்-இல் இந்த டிவைஸ் இருக்க தேவையில்லை என்று நினைக்கும் டிவைஸ்-ஐ தெரிவு செய்யுங்கள்.


அடுத்து Grab என்பதை கிளிக் செய்து விட்டு, 'கில்' என்பதை கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவு தான். இப்போது குறித்த டிவைஸ், குறித்த வைபை நெட்வொர்க்-இல் இருந்து நீக்கப்பட்டு விடும்.

இந்த அதிசக்தி வாய்ந்த ஆன்ராயிடு சிறப்பு செயலியை உங்களது போனிற்கு தரவிறக்குவது எப்படி என்று பார்ப்போம்.

இது ஒரு ஹேக்கிங் சம்மந்தப்பட்ட செயலி என்பதால், கூகுள் ப்லே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. ஆனாலும் இதை கூகுள் சர்ச் மூலம் தரவிறக்கி கொள்ள முடியும்.

கீழே படத்தில் காட்டியுள்ளவாறு 'வை பை கில்' என்று கூகுள் சர்ச் செய்யுங்கள்.


கிடைக்கும் முடிவில் காணப்படும் முதலாவது தளத்திற்கு சென்று, குறித்த செயலியை நிறுவுவதற்கான டவுன்லோடரை தரவிறக்கி உங்களது போனில் நிறுவுங்கள்.


அடுத்து குறித்த டவுன்லோடரை உங்களது போனில் ஆரம்பித்து, 'வைபை கில் ப்ரீ வெர்சன்' செயலியை உங்களது போனிற்கு தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள்.

Kategori

Kategori