போன் ஹீட் ஆகுவதை தடுக்கும் விதமாக சிறப்பு கூலர் சிஸ்டத்துடன் அறிமுகமாகிறது சாம்சுங் S7

ஸ்மார்ட் போன்களை தயாரிக்கும் நிறுவனங்கள் தமது இடத்தை உலக ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் தக்கவைத்து கொள்வதற்காக பல்வேறு வசதிகளுடன் நவீன தொளினுட்பத்திலான ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்து கொண்டு இருக்கின்றனர்.

ஸ்மார்ட் போன்களுக்கு பெயர்போன இரண்டு நிறுவனம் ஆப்பிள் மற்றும் சாம்சுங் என்பது நாம் யாவரும் அறிந்த விடயமே. இந்த இரண்டு நிறுவனங்களும் தமது அதிசிறந்த தயாரிப்புக்களை ஸ்மார்ட் போன் சந்தையில் அறிமுகம் செய்து கொண்டிருக்கின்றன.

இவற்றிற்கு சிறந்த உதாரணமாக ஆப்பிள் நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்திய 6S சீரீஸ் ஸ்மார்ட் போன்களும் சாம்சுங் நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்திய கேலக்ஸ்சி சீரீஸ் ஸ்மார்ட் போன்களையும் குறிப்பிட்டு காட்டலாம்.

இந்த வரிசையில் சாம்சுங் நிறுவனம் அடுத்ததாக அறிமுகப்படுத்த உள்ள ஸ்மார்ட் போன் கேலக்ஸ்சி S7. உலகில் இதுவரை அறிமுகமாகியுள்ள ஸ்மார்ட் போன்களில் இந்த சாம்சுங் S7 தனிச்சிறப்போன்றுடன் வெளிவரவிருக்கிறது.


அதாவது நம் அனைவருக்குமே தெரிந்தது போல், ஸ்மார்ட் போன்களை அதிகளவான நேரம் உபயோகித்து கொண்டிருக்கும் போது அல்லது கேம்ஸ்-களை விளையாடும் போது போன் ஹீட் ஆகுவது சாதாரண விடயம்.

பரிந்துரைக்கப்படும் பதிவு

அவ்வாறு போன் ஹீட் ஆகியதும் சிறிது நேரத்திற்கு போனை உபயோகிக்காமல் இருந்தால் எங்களது ஸ்மார்ட் போன் பழைய நிலைமைக்கு திரும்பி விடும். இதுவே இன்றைய ஸ்மார்ட் போன்களின் இயல்பு நிலை.

ஆனால் சாம்சுங் S7 போன் இந்த விதிக்கு ஒருபடி மேலே சென்று கூலர் சிஸ்டம் ஒன்றுடன் அறிமுகமாக இருக்கிறது. அதாவது குறித்த ஸ்மார்ட் போன் அதிகளவில் ஹீட் ஆகும் போது கூலர் சிஸ்டம் தானாக செயற்பட ஆரம்பித்து போன் ஹீட்டை தணிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கூலர் சிஸ்டம் ஸ்மார்ட் போனில் காணப்படும் முக்கியமான ஹர்ட்வேர் பாகங்கள் ஹீட் ஆக்குவதை தடுப்பதோடு S7-இன் ப்ரோசெஸ்சர் ஹீட் ஆகாமல் தடுப்பது இதன் சிறப்பு பணி என சாம்சுங் நிறுவனத்தின் முக்கிய தலைமை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த அவர், இந்த கூலர் சிஸ்டம், நாம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் AC-யை போன்று செயற்பட்டு போன் ஹீட் ஆகுவதை தடுக்க கூடியது என்றும் கூறியுள்ளார்.

ஆகவே இந்த சிறப்பு கூலர் சிஸ்டம் உங்களுடைய சாம்சுங் S7-இன் முக்கிய பாகங்கள் ஹீட் ஆகுவதை தடுத்து உங்களது போனை மிகவும் கூலாக வைத்து இருக்கும்.

பரிந்துரைக்கப்படும் பதிவு

சாம்சுங் S7 ஸ்மார்ட் போனை உபயோகிக்க போகும் கேம்ஸ் பிரியர்களுக்கு இனி தங்களது ஸ்மார்ட் போன் அதிக நேரம் கேம்ஸ் விளையாடுவதால் ஹீட் ஆகி விடுமே என்ற கவலை வேண்டாம்.

டொரண்ட் பைல்-ஐ அன்றொஇட் போன் மூலம் டவுன்லோட் செய்வது எப்படி?

எமது இன்றைய பதிவில் தொழினுட்பத்தை விட்டு திரைப்படங்களை பற்றிய ஒரு பதிவை பார்க்கலாம். ஏற்கனவே எமது தளத்தில் உங்களது ஸ்மார்ட் போனிற்கு மிக இலகுவாக எப்படி தமிழ் திரைப்படங்களை தரவிறக்கி கொள்வது என்ற பதிவை எழுதி இருந்தேன். அந்த பதிவின் சுருக்கத்தை கீழே தருகிறேன்.

இன்று  சந்தைக்கு வரும் ஸ்மார்ட் போன்-களும் பெரிய அளவிலான ஸ்க்ரீன்-ஐ கொண்டிருப்பதால் அனைவருமே திரைப்படங்களை தங்களுடைய ஸ்மார்ட் போனில் இருந்தபடியே பார்த்து கொள்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதுமட்டும் இல்லாமல் இன்றைய சமூகத்தினர் ஸ்மார்ட் போன் மூலமாக திரைப்படங்களை பார்க்க ஆர்வம் காட்டுவதற்கு மற்றுமொரு முக்கிய காரணமாக நேரத்தை சொல்லலாம். இன்றைய சூழ்நிலையில் நேரம் என்பது அனைத்து தரப்பினர் மத்தியிலும் மிக முக்கிய ஒன்றாக கருதப்படுகிறது. எவருமே தங்களுடைய நேரத்தை வீணடிக்க தயாராக இல்லை. ஆகவே வாகனங்களில் பயணங்களை செய்யும் போது, காலையில் வேலைக்கு செல்லும் போது என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் தங்களது ஸ்மார்ட் போன் மூலமாகவே திரைப்படங்களை பார்த்து கொள்கிறார்கள்.



இந்த பதிவின் தொடர்ச்சியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

உங்களது ஸ்மார்ட் போனிற்கு புத்தம்புதிய தமிழ் திரைப்படங்களை தரவிறக்குவது எப்படி?

ஆகவே திரைப்படங்களுடன் சம்மந்தப்பட்ட மற்றுமொரு பதிவாக இன்றைய பதிவில் எமது அன்றொஇட் ஸ்மார்ட் போன் மூலமாக எப்படி டொரண்ட் பைல்-களை டவுன்லோட் செய்வது என்று பார்ப்போம்.

இந்த வேலையை மிக இலகுவாக செய்து முடிக்க உதவுகிறது கீழ் வரும் அன்றொஇட் போனுக்கான சிறப்பு செயலி.

இந்த செயலியை தரவிறக்கி உங்களது போனில் நிறுவிக்கொள்ளுங்கள்.

அடுத்து உங்களுக்கு தேவையான டொரண்ட் பைல்-ஐ உங்களது போனிற்கு தரவிறக்கி கொள்ளுங்கள். 

இப்போது உங்களது போனில் குறித்த செயலியை ஆரம்பித்து அதிலே காணப்படும் + என்பதை அழுத்துங்கள்.

அடுத்து நீங்கள் ஏற்கனவே டவுன்லோட் செய்து வைத்த டொரண்ட் பைல்-ஐ தெரிவு செய்யுங்கள்.


அடுத்து தோன்றும் திரையில் குறித்த திரைப்படம் உங்களது போனில் எந்த இடத்தில் தரவிறக்கி சேமிக்கப்படும், திரைப்படத்தின் அளவு என்ன போன்ற சில விடயங்களை தெரிந்து கொள்ள முடியும்.

அவைகளை உறுதி செய்த பின்னர், மேலே வலது மூலையில் காணப்படும் + ஐ கிளிக் செய்யுங்கள்.


அவ்வளவு தான். இப்போது உங்களுக்கு பிடித்த திரைப்படம் உங்களது ஸ்மார்ட் போனில் டவுன்லோட் ஆக ஆரம்பித்து விடும்.


நாம் கணனியில் டொரண்ட்-ஐ தரவிறக்கும் போது எப்படி எமக்கு தேவையான நேரத்தில் குறிப்பிட்ட பைல் டவுன்லோட் ஆகுவதை நிறுத்தி வைக்க முடியுமே, அதே போல் போனிலும் செய்து கொள்ள முடியும்.

இந்த அருமையான செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ள முடியும்.


ஆகவே இந்த அருமையான செயலியை பயன்படுத்தி மிக இலகுவாக உங்களுக்கு பிடித்த திரைப்படங்களை உங்களது போனில் இருந்தபடியே தரவிறக்கி கொள்ளுங்கள்.

சில Emoji-களை சமூக வலைத்தளத்தில் உபயோகித்ததால் 12 வயதான சிறுமி மீது சட்ட நடவடிக்கை

சமூக வலைத்தளம் ஒன்றில் Emoji சிலவற்றை உபயோகித்தமையினால் 12 வயதான சிறுமி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது என்று கூறினால் உங்களது முகத்தில் வரும் Emoji எப்படி இருக்கும்?

ஆம் நண்பர்களே.. இன்ஸ்டக்ரம் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்ட சில Emoji களை உபயோகித்ததால் Fairfax, Virginia-வை சேர்ந்த 12 வயதான பாடசாலை சிறுமி மீது சட்ட நடவடிக்கை மேட்கொள்ளப்பட்டுள்ளது.


குறித்த சிறுமி, தனது இன்ஸ்டக்ரம் கணக்கில் கீழே படத்தில் காட்டியுள்ளவாறன வாசகத்தை சில Emoji-களை பயன்படுத்தி பதிந்துள்ளார்.


அதாவது அந்த பதிவிலே தான் கல்வி கற்கும் குறிப்பிட்ட பாடசாலையை எதிர்க்கும் விதாமான Emoji-களை பயன்படுத்தி தனது பதிவை அப்டேட் செய்து இருக்கிறார்.

இதை அவதானித்த போலீஸ் அதிகாரிகள், குறித்த மாணவியின் மீது பாடசாலையை அவமதித்த குற்றம் மற்றும் கணணியை தவறாக உபயோகித்த குற்றம் என்ற பிழைகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் குறிப்பிட்ட பாடசாலைக்கு இது குறித்து தெரிவித்து இதை பதிவு செய்தவர் யார் என்ற விசாரணையை ஆரம்பித்து இருக்கிறார்கள்.
விசாரணையின் முடிவில் குறித்த மாணவி பொய்யான ஒரு இன்ஸ்டக்ரம் கணக்கில் இருந்து வேறு ஒரு மாணவியின் பெயரை பயன்படுத்தியே இந்த பதிவை அப்டேட் செய்து இருந்தது தெரிய வந்தது. அதன் பின்னர், குறித்த பதிவு அப்டேட் செய்யப்பட்ட IP முகவரியை ட்ரேஸ் செய்து குறித்த மாணவியை கண்டு பிடித்து இருக்கிறார்கள்.

விசாரணையின் போது குறித்த மாணவி, தான் செய்த குற்றத்தை ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து மாணவியின் தாய் மேலும் கருத்து தெரிவிக்கையில் பாடசாலையில் தனது மகளுக்கு செய்யப்பட்ட கேலி நடவடிக்கைகளின் காரணமாகே அவர் இவ்வாறன பதிவொன்றை அப்டேட் செய்து இருந்ததாக தெரிவித்து இருந்தார்.

குறித்த தகவலை அமெரிக்காவின் பிரபல்ய தளமான Washington Post
வெளியிட்டுள்ளது.

இன்ஸ்டக்ரம் போட்டோ மற்றும் வீடியோ களை எமது போனிற்கு தரவிறக்கி கொள்வது எப்படி?

இன்றைய பதிவில் சமூக வலைத்தளம் ஒன்றை பற்றிய ஒரு பதிவை பார்க்கலாம். பேஸ்புக், ட்விட்டர் போன்றே இன்ஸ்டக்ரம் கூட இன்றைய இளைய சமூகத்தினர் மத்தியில் மிகவும் பிரபல்யமான ஒரு சமூக வலைத்தளம் ஆகும்.

நாம் அனைவருக்குமே தெரிந்தது போல் இன்ஸ்டக்ரம்-ஐ தற்போது பேஸ்புக் நிறுவனமே நடாத்தி வருகின்றது. பேஸ்புக் போன்ற அளவுக்கு இன்ஸ்டக்ரம்-இல் பல்வேறுபட்ட வசதிகள் காணப்படாவிட்டாலும் எமது அழகிய போட்டோ மற்றும் வீடியோகளை பதிவேற்றவும் அவற்றிற்கு லைக் கமெண்ட் போன்றவைகளை தெரிவிக்கவும் என்று சிறந்த வசதிகளை தருகின்றது இன்ஸ்டக்ரம்.

ஆனால் இன்ஸ்டக்ரம்-இல் காணப்படும் ஒரு குறையாக, இன்ஸ்டக்ரம்-இல் காணப்படும் போட்டோ மற்றும் வீடியோகளை எமது ஸ்மார்ட் போனிற்கு தரவிறக்கி கொள்ள முடியாமல் உள்ளதை கூறலாம்.

ஆகவே இன்றைய பதிவில் இந்த குறையை தீர்க்கும் முகமாக இன்ஸ்டக்ரம்-இல் காணப்படும் போட்டோ மற்றும்  வீடியோகளை மிக இலகுவாக எமது ஸ்மார்ட் போனிற்கு எப்படி தரவிறக்கி கொள்வது என்று பார்ப்போம்.


ஏற்கனவே எமது தளத்தில் பேஸ்புக் மற்றும் யூடியுப் வீடியோகளை எமது ஸ்மார்ட் போனிற்கு மிக இலகுவாக எந்த விதமான செயலிகளையும் பயன்படுத்தாமல் எப்படி தரவிறக்கி கொள்வது என்ற பதிவை எழுதி இருந்தேன். நீங்கள் அந்த பதிவை தவற விட்டு இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தெரிந்து கொள்ள முடியும்.

எந்தவித சாப்ட்வேர்-ஐயும் பயன்படுத்தாமல் பேஸ்புக் வீடியோகளை கணணி, அன்றொஇட், ஐபோனிற்கு தரவிறக்கி கொள்வது எப்படி?

எந்தவித சாப்ட்வேர்-ஐயும் பயன்படுத்தாமல் யூடியுப் வீடியோகளை கணணி, அன்றொஇட், ஐபோனிற்கு தரவிறக்கி கொள்வது எப்படி?

அதே போன்று இன்ஸ்டக்ரம் போட்டோ மற்றும் வீடியோகளை எமது ஸ்மார்ட் போனிற்கு எப்படி தரவிறக்கி கொள்ள முடியும் என்று பார்ப்போம்.

எமது இந்த தேவையை மிக இலகுவாக செய்து முடிக்க உதவுகிறது கீழ் குறிப்பிட்டுள்ள அன்றொஇட் போனிட்கான சிறப்பு செயலி.
இந்த செயலியை தரவிறக்கி உங்களது அன்றொஇட் போனில் நிறுவிக்கொள்ளுங்கள்.

 நிறுவிய செயலியை உங்களது போனில் ஆரம்பித்து விட்டு மறுபடியும் மூடி விடுங்கள்.


இப்போது குறித்த செயலி உங்களது போனில் பின்புலத்தில் இருந்து செயற்பட்டுக்கொண்டு இருக்கும்.


இந்த செயலி உங்களது போனின் பின்புலத்தில் இருந்து செயற்பட்டுக் கொண்டு இருக்கும் போது நீங்கள் இன்ஸ்டக்ரம்-ஐ உபயோகித்தால், உங்களுக்கு இன்ஸ்டக்ரம்-இல் இருக்கும் போட்டோ மற்றும் வீடியோகளை தரவிறக்கி கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.

அதாவது கீழே காட்டியுள்ளவாறு நீங்கள் தரவிறக்கி கொள்ள நினைக்கும் போட்டோ-வின் கீழ் மூலையில் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்யுங்கள்.

அடுத்து தோன்றும் திரையில் Copy Share URL என்பதை கிளிக் செய்யுங்கள்.


இப்போது குறித்த போட்டோ உங்களது போனிற்கு தரவிறக்கப்படும்.


இந்த முறையை பயன்படுத்தி மிக இலகுவாக இன்ஸ்டக்ரம் போட்டோகளை உங்களது அன்றொஇட் போனிற்கு தரவிறக்கி கொள்ள முடியும்.

இன்ஸ்டக்ரம் போட்டோ மற்றும் வீடியோ களை தரவிறக்கி கொள்ள உதவும் சிறப்பு செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ள முடியும் 


குறிப்பு

இந்த செயலியை பயன்படுத்தி இன்ஸ்டக்ரம் போடோகளை உங்களது அன்றொஇட் போனிற்கு தரவிறக்கி கொள்ள வேண்டும் என்றால், குறித்த செயலி உங்காளது போனின் பின்புலத்தில் செயற்பட்டு கொண்டு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

அப்படி இந்த செயலி பின்புலத்தில் செயட்படவில்லை என்றால் இன்ஸ்டக்ரம் போடோகளை தரவிரக்குவதட்கான வசதி உங்களது இன்ஸ்டக்ரம் கணக்கில் காட்டப்படமாட்டது.

ப்ரீடம் 251 ஸ்மார்ட் போனை முற்பதிவு செய்த வாடிக்கையாளர்களின் பணத்தை திருப்பி கொடுக்கிறது ரிங்கிங் பெல் நிறுவனம்.

கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் பிரபல்யமாக பேசப்பட்ட ஒரு விடயம் தான் ப்ரீடம் 251 ஸ்மார்ட் போன். உலகின் முதலாவது அதிகுறைந்த விலையில் அறிமாகும் ஸ்மார்ட் போன் என்ற பெருமையுடன் இந்திய சந்தையில் தனது அறிமுகத்தை பதிந்த ப்ரீடம் 251 ஸ்மார்ட் போன் இந்திய மக்களிடையே பல்வேறுபட்ட நேர் மற்றும் எதிர்மறையான கருத்துக்களை தனுள்ளே வாங்கி இருந்தது நாம் யாவரும் அறிந்த விடயமே.

எமது தளத்திலும் கூட இந்த ஸ்மார்ட் போன் குறித்தான நேர் மற்றும் எதிர்மறையான பதிவுகள் வெளிவந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த பதிவுகளை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

இந்தியாவில் 251 ரூபாய்க்கு அறிமுகமாகும் ஸ்மார்ட் போன்.. இது மற்றுமொரு ஆன்லைன் ஏமாற்று வேலையா?

251 ரூபாய் ரிங்கிங் பெல் ஸ்மார்ட் போன். உண்மையிலே இந்த ஸ்மார்ட் போன் ரிங் ஆகுமா?

சைனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்மார்ட் போன்கள்  ₹1000-க்கு கிடைக்கும் போது, உள்நாட்டு தயாரிப்பான ப்ரீடம் போன் ₹251-க்கு கிடைப்பதில் என்ன ஆச்சிரியம்?


சரி.. இப்போது எதற்கு முடிந்து போன விடயத்தை பேசுகிறேன் என்று பார்க்கிறீர்களா? ப்ரீடம் 251 ஸ்மார்ட் போன் குறித்தான சில முக்கிய தகவல்கள் இப்போது இணையத்தில் வெளி வந்துள்ளன.

இந்த ஸ்மார்ட் போன் முற்றுமுழுதாக ஒரு ஏமாற்று வேலை, 4 மாதங்களின் பின்னர் குறிப்பிட்ட நிறுவனம் ஸ்மார்ட் போன்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யாது என்ற கருத்து பெரும்பாலான மக்களிடையே இருந்து வந்தது.

ஆகவே இவ்வாறான கேள்விகளுக்கு விடையளிக்கும் முகமாக ரிங்கிங் பெல் நிறுவனத்தின் உரிமையாளர் சில அதிரடி முடிவுகளை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதாவது ப்ரீடம் 251 ஸ்மார்ட்  போனை பெற்றுக் கொள்வதட்காக இதுவரை 30,000 வாடிக்கையாளர்கள் தமது கிரெடிட், மற்றும் டெபிட் கார்டு மூலமாக பணம் செலுத்தி முன்பதிவு செய்து இருப்பதாகவும், இந்த பணத்தை மறுபடியும் வாடிக்கையாளர்களுக்கே திருப்பி கொடுத்து விட்டு, குறித்த ஸ்மார்ட் போனை டெலிவரி செய்யும் போது பணத்தை பெற்றுக்கொள்ளும் முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்திருக்கிறது ரிங்கிங் பெல் நிறுவனம்.
அதுமட்டுமல்லாது, 7 மில்லியன் வாடிக்கையாளர்கள் ப்ரீடம் 251 ஸ்மார்ட் போனை முற்பதிவு செய்திருப்பதாகவும், அவர்களில் 30,000 வாடிக்கையாளர்கள் மட்டுமே பணம் செலுத்துவதற்கான லின்க்கை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொடிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு ரிங்கிங் பெல் ஸ்மார்ட் போன் நிறுவனம் தற்போது பணம் செலுத்தி முற்பதிவு செய்த அனைத்து வாடிக்கையாளர்களின் பணத்தையும் திரும்ப வழங்க முடிவெடுத்துள்ளது.

ஆகவே ப்ரீடம் 251 ஸ்மார்ட் போனை பெற்றுக்  கொள்வதற்கான பணப்பரிமாற்றம், போனை வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்யும் போது தான் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த ரிங்கிங் பெல் நிறுவனம், குறித்த ப்ரீடம் 251 ஸ்மார்ட் போன் ஒன்றை விற்றால், தமது நிறுவனத்திற்கு $0.45 (டாலர்) இலாபம் இருப்பதாகவும் கூறியுள்ளது.

ட்ரூ காலர் டேட்டாபேஸ்-இல் திருடி வைக்கப்பட்டிருக்கும் உங்களது தொலைபேசி இலக்கத்தை நீக்குவது எப்படி?

எமது தளத்தில் ஏற்கனவே தெரியாத இலக்கத்தில் இருந்து எமது ஸ்மார்ட் போனிற்கு வரும் அழைப்புக்களை எப்படி ட்ரேஸ் செய்வது என்றும் தெரியாத இலக்கத்தில் இருந்து அழைப்பவர் பெயரை எப்படி கண்டு பிடிப்பது என்று பதிவுகள் எழுதப்பட்டன.

அவற்றில் தெரியாத இலக்கத்தில் இருந்து அழைப்பவர் யார் என்பதை கண்டறிய ட்ரூ காலர் எனப்படும் சிறப்பு செயலியை எப்படி செட்டிங்க்ஸ் செய்து சரியாக உபயோகிப்பது என்ற பதிவு பெரிதும் வரவேற்பு பெற்றது.

அந்த பதிவை நீங்கள் தவற விட்டு இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று ட்ரூ காலர் செயலியை உங்களது அன்றொஇட், ஐ போன் மற்றும் விண்டோஸ் போன்களில் எப்படி செட்டிங்க்ஸ் செய்து தெரியாத இலக்கத்தில் இருந்து உங்களது போனிற்கு வரும் அழைப்பு யாருடையது என்று சரியாக தெரிந்து கொள்ளுங்கள்.

தெரியாத இலக்கத்தில் இருந்து வரும் அழைப்பு யாருடையது என்று அந்த நொடியே தெரிந்து கொள்வது எப்படி?


உலகில் உபயோகிக்கப்படும் 80% ஆனா தொலைபேசி இலக்கங்களை ட்ரூ காலர் செயலி சரியாக கண்டு பிடித்து உங்களுக்கு தெரியாத இலக்கம் ஒன்றிலிருந்து அழைப்பொன்று வரும் போது குறிப்பிட்ட அழைப்பு யாருடைய அழைப்பு என்று காட்டி விடுகின்றது.

சரி.. இதை ட்ரூ காலர் செயலி எப்படி கண்டு பிடிக்கிறது என்று தெரிந்து கொள்வோம்.

குறிப்பிட்ட ஒருவர் ட்ரூ காலர் செயலியை தனது ஸ்மார்ட் போனில் நிறுவும் போது, குறிப்பிட்ட நபருடைய ஸ்மார்ட் போனில் இருக்கும் அனைத்து தொலைபேசி இலக்கங்களும் உரிய பெயர் விபரங்களுடன் ட்ரூ காலர் டேட்டாபேஸ்-இல் சேமிக்கப்பட்டு விடும்.

இந்த முறை மூலமே ட்ரூ காலர் எம்முடைய அனைத்து தொலைபேசி இலக்கங்களையும் பெற்றுக்கொள்கிறது. இந்த செயலியை உலகம் முழுவதும் பல லட்ச்சக்கணக்கான பயனர்கள் உபயோகிப்பதால், அவர்களுடைய டேட்டாபேஸ்-இல் பல மில்லியன் கணக்கான தொலைபேசி இலக்கங்கள் சேமிக்கப்பட்டு இருக்கின்றன.

ஆகவே இது ஒரு ஆன்லைன்-இல் நடைபெறும் தனிநபர் தகவல் திருட்டு செயற்பாடு போலவே கருதப்படுகின்றது.

அதனால் உங்களது தனிப்பட்ட தொலைபேசி இலக்கமும் ட்ரூ காலர்
டேட்டாபேஸ்-இல் ஏற்கனவே சேமிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை அவர்களுடைய தளத்திற்கு சென்று உங்களது தொலைபேசி இலக்கத்தை வழங்கி தெரிந்து கொள்ள முடியும்.

ட்ரூ காலர் தளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.


ஆகவே உங்களது தொலைபேசி இலக்கம் ட்ரூ காலர் டேட்டாபேஸ்-இல் உங்களது பெயர் விபரங்களுடன் சேமிக்கப்பட்டு இருந்தால் அதை எப்படி அவர்களுடைய டேட்டாபேஸ்-இல் இருந்து நீக்கி கொள்வது என்று பார்ப்போம்.

கீழே வழங்கப்பட்டிருக்கும் ட்ரூ காலர்-இன் அனலிஸ்ட் போன் நம்பர் என்ற தளத்திற்கு செல்லுங்கள்.
இந்த தளத்தில் உங்களது தகவல்களை வழங்கிய பின்னர், உங்களது போன் நம்பரை குறித்த டேட்டாபேஸ்-இல் இருந்து நீக்கி கொள்ள முடியும்.

ட்ரூ காலர் அன்-லிஸ்ட் போன் நம்பர் தளம்

அதிலே உங்களுது இலக்கத்தை பதிவு செய்து, ஏன் ட்ரூ காலர் டேட்டாபேஸ்- இல் இருந்து உங்களது இலக்கத்தை நீக்க விரும்புகிறீர்கள் என்ற காரணத்தை தெரிவு செய்த பின்னர்,


Unlist என்று இருப்பதை கிளிக் செய்வதன் மூலம், அடுத்த 24 மணி நேரத்திற்குள் ட்ரூ காலர் டேட்டாபேஸ்-இல் இருந்து உங்களது தொலைபேசி இலக்கத்தை நீக்கி கொள்ள முடியும்.

பரிந்துரைக்கப்படும் பதிவு

ஆகவே உங்களுடைய தொலைபேசி இலக்கமும் இந்த தளத்தில் சேமிக்கப்பட்டு இருந்தால் நான் மேலே குறிப்பிட்டு உள்ள முறையை பயன்படுத்தி உங்களது தொலைபேசி இலக்கத்தை ஆன்லைன்-இல் இருந்து நீக்கி கொள்ள முடியும்.

சாம்சுங் நிறுவனம் அறிமுகப்படுத்தும் 256 GB அதிஉயர் மெமரி கார்டு 12 செக்கன்களில் 5 GB டேட்டாவை பரிமாற்றக் கூடியது.

தொழிநுட்ப வளர்ச்சியின் மற்றுமொரு எடுத்துக்காட்டாக சாம்சுங் நிறுவனம் உலகின் முதலாவது 256 GB அளவு கொண்ட மெமரி கார்டு-ஐ அறிமுகப்படுத்த உள்ளது.

தொழிநுட்ப வளர்ச்சியின் ஆரம்ப காலத்தில் 5 MB அளவு கொண்ட ஹர்ட் டிஸ்க்-ஐ கிட்டத்தட்ட 4 மனிதர்கள் இருந்தால் தான் தூக்க முடியும் என்ற அளவில் காணப்பட்டது. இது குறித்தான புகைப்பங்கள் கூட இணையத்தில் வெளியாகி இருந்தது.

அப்படி இருந்த காலகட்டத்தில் இருந்து தொழிநுட்பம் படிப்படியாக முன்னேறி இன்று மிகச்சிறய அளவில் மெமரி கார்டுகளும் ஹர்ட் டிஸ்க்களும் கிடைக்கின்றன.

எமது ஸ்மார்ட் போனை எடுத்து கொண்டால், இதற்கும் பல்வேறு அளவுகளில் மெமரி கார்டு-கள் கிடைக்கின்றன. 1 GB தொடக்கம் 64 GB அளவு வரை இன்றைய ஸ்மார்ட் போன்களில் மெமரி கார்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.


பெரிய அளவில் கிடைக்க கூடிய மெமரி கார்டுகள் பெரும்பாலும் தரம் குறைந்த சீனா தயாரிப்புக்கலாகவே உள்ளது. ஆகவே இவற்றை எமது ஸ்மார்ட் போன்களில் உபயோகிப்பது அவ்வளவு பாதுகாப்பானது இல்லை.

ஆனால் இனி அந்த கவலை வேண்டாம். 256 GB அளவு கொண்ட அதிஉயர் தரத்துடன் சாம்சுங் நிறுவனம் அறிமுகப்படுத்தும் மெமரி கார்டுகள் கூடிய விரைவில் சந்தைக்கு வரவுள்ளன.

சாம்சுங் நிறுவனத்தின் அதிகாரபூர்வ தளத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்தின் படி, இந்த மெமரி கார்டு V-NAND கொண்ட தொழிநுட்பத்தில் உருவாக்கப்பட்டிருப்பதோடு இந்த மெமரி கார்டு கீழ்வரும் வசதிகளை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
  • 850MBps ரீடிங் (வாசிப்பு) வேகம்
  • 260MBps ரைடிங் (எழுதும்) வேகம்
  • கணனிக்கான Sata SSD-ஐ விட இரு மடங்கு வேகம் அதிகம்.
  • சாதாரண மெமரி கார்டு-ஐ விட மூன்று மடங்கு வேகம் அதிகம்.
மேலும் இந்த அதிஉயர் தரம் கொண்ட மெமரி கார்டு பற்றி சாம்சுங் நிறுவனத்தின் மெமரி கார்டு விற்பனையின் தலைமை நிருவாகி கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்ட இந்த மெமரி கார்டு-இன் டேட்டா பரிமாற்ற வேகமானது 12 செக்கன் களில் 5 GB ஆக இருக்கும் என தெரிவித்தார்.

தொழிநுட்ப வளர்ச்சியின் மற்றுமொரு சிறந்த எடுத்துக்காட்டாக சாம்சுங் நிறுவனம் அறிமுகப்படுத்தும் இந்த 256 GB அளவு கொண்ட அதிஉயர் தரத்திலான மெமரி கார்டு அமைந்து இருக்கின்றது.

பரிந்துரைக்கப்படும் பதிவு

இந்த மெமரி கார்டு சம்மந்தாமான மேலதிக தகவல்களை சாம்சுங் நிறுவனத்தின் அதிகாரபூர்வ தளத்தில் சென்று தெரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்தவித சாப்ட்வேர்-ஐயும் பயன்படுத்தாமல் பேஸ்புக் வீடியோகளை கணணி, அன்றொஇட், ஐபோனிற்கு தரவிறக்கி கொள்வது எப்படி?

சமூக வலைத்தளம் என்று கூறினாலே அனைவரினது நினைவுக்கும் முதலில் வருவது பேஸ்புக் சமூக வலைத்தளம். அந்த அளவுக்கு இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக் அனைவர் மத்தியிலும்  பிரபல்யமடைந்து காணப்படுகிறது.

எமது தளத்தில் அடிக்கடி இந்த பேஸ்புக் சம்மந்தமான தகவல்கள் சென்ற நாட்களில் பதியப்பட்டது. அதே போல் இன்றும் மற்றுமொரு சுவாரஸ்யமான பேஸ்புக் தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்.

பேஸ்புக்கில் பதிவேற்றப்படும் வீடியோகளில் குறிப்பிட்ட சில வீடியோகளை தவிர மற்றைய வீடியோகளை எம்மால் தரவிறக்கி கொள்ள முடியாது.


ஆகவே இன்றைய பதிவில் பேஸ்புக்கில் காணப்படும் வீடியோகளை எமது கணணிக்கோ அல்லது ஸ்மார்ட் போனிட்கோ எந்த விதமான மென்பொருளையும் பயன்படுத்தாமல் தரவிறக்கி கொள்வது எப்படி என்று பார்ப்போம்.

உங்களுக்கு தரவிறக்கி கொள்ள தேவையான பேஸ்புக் வீடியோவை உங்களது உலாவியில் புதிய டேப் ஒன்றை பயன்படுத்தி திறந்து கொள்ளுங்கள்.

அடுத்து குறித்த வீடியோ-வின் URL-இல் காணப்படும் https என்பதில் s-ஐ நீக்குங்கள். அதன் பின், www. என்பதற்கு பிறகு down என்று டைப் செய்து Enter பட்டன்-ஐ அழுத்துங்கள்.


இப்போது உங்களது உலாவியில் புதிய திரை ஒன்று பேஸ்புக் வீடியோவை தரவிறக்க கூடிய வசதியுடன் தோன்றும்.
அங்கே காணப்படும் டவுன்லோட் என்ற பட்டன்-ஐ அழுத்துவதன் மூலம் குறிப்பிட்ட பேஸ்புக் வீடியோவை தரவிறக்கி கொள்ள முடியும்.


அன்றொஇட் மற்றும் ஐபோனிற்கு பேஸ்புக் வீடியோ களை தரவிறக்குவது எப்படி?

மேலே குறிப்பிட்ட அதே முறையை பயன்படுத்தி பேஸ்புக் வீடியோகளை உங்களது அன்றொஇட் மற்றும் ஐபோனிற்கு தரவிறக்கி கொள்ள முடியும்.

ஆனால் வீடியோகளை தரவிறக்கி கொள்ள வேண்டுமென்றால் உங்களது ஸ்மார்ட் போனில் இருந்து பேஸ்புக்  தளத்திற்கு கூகுள் க்ரோம் அல்லது வேறு ஏதேனும் உலாவின் மூலமே லொகின் செய்ய வேண்டும்.

அப்போது தான் உங்களால் பேஸ்புக் வீடியோகளை மேலே குறிப்பிட்ட முறையை பயன்படுத்தி தரவிறக்கி கொள்ள முடியும்.

அப்படியல்லாமல் உங்களது ஸ்மார்ட் போனில் காணப்படும் பேஸ்புக் செயலி மூலம் வீடியோகளை பார்க்கும் பட்ச்சத்தில் மேலே குறிப்பிட்ட முறையை பயன்படுத்தி வீடியோகளை தரவிறக்கி கொள்ள முடியாது என்பதை கருத்திட்கொள்ளுங்கள்.

உங்கள் அன்றொஇட் போனில் ரீசைக்கில் பின் வசதியை ஏற்படுத்தி கொள்வது எப்படி?

ஸ்மார்ட் போன்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமாக காணப்படும் அன்றொஇட் போனுக்கான பல உபாயங்கள் பற்றி எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்டு உள்ளன.

அவைகளிலே நான் கடந்த நாட்களில் அன்றொஇட் போனில் இருந்து தவறுதலாக அழிந்து போன போடோஸ் மற்றும் வீடியோகளை எவ்வாறு மிக இலகுவாக மீட்டெடுத்து கொள்வது என்று பதிவொன்றை எழுதி இருந்தேன்.

அந்த பதிவை நீங்கள் தவறவிட்டு இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனில் இருந்து அழிந்து போன அனைத்து கோப்புக்களையும் எப்படி மீட்டெடுப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

அன்றொஇட் போனில் அழிந்த பைல்-களை பாதுகாப்பாக மீட்டெடுப்பது செய்வது?

ஆனால், வருமுன் காப்பது என்றுமே சிறந்தது என்று கூறுவதற்கு அமைய இன்றைய பதிவில் உங்களது அன்றொஇட் போனில் இருக்கும் பைல்கள் தவறுதால அழிந்து விட்டால் அதை போனில் இருக்கும் 'ரீசைக்கிள் பின்'-ஐ பயன்படுத்தி எப்படி மிக இலகுவாக அடுத்த நொடியே மீட்டெடுத்து கொள்வது என்று பார்ப்போம்.


ஆகவே விண்டோஸ் கணனிகளில் காணப்படும் ரீசைக்கிள் பின்-ஐ போலவே
இந்த உபாயமும் உங்களது அன்றொஇட் போனில் தொழிற்படும். எம் அனைவருக்குமே தெரிந்தது போல், நாம் எமது கணனியில் இருந்து ஏதாவது குறிப்பிட்ட ஒரு பைல்-ஐ அழித்து விட்டால், அது ரீசைக்கிள் பின்-இல் தற்காலிகமாக தங்கி இருக்கும். குறிப்பிட்ட அந்த பைல் எமக்கு தேவையென்றால் ரீசைக்கிள் பின்-இல் சென்று மறுபடியும் மீட்டெடுத்து கொள்ள முடியும்.

அதே உபாயத்தை தான், இன்று நாம் எமது அன்றொஇட் போனிலும் செயற்படுத்த போகிறோம்.

இந்த வேலையை மிக இலகுவாக செய்து முடிக்க உதவுகிறது கீழ்வரும் அன்றொஇட் போனுக்கான சிறப்பு செயலி.
இந்த செயலியை தரவிறக்கி உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனில் நிறுவி கொள்ளுங்கள்.

உங்களது போனில் இருந்து அழிக்கப்படும் எந்த வகையான பைல்-கள் இந்த செயலியில் தங்க வேண்டும் என்பதை செட்டிங்க்ஸ்-இற்கு சென்று தெரிவு செய்து கொள்ள முடியும்.


அத்தோடு நீங்கள் உங்களது போனில் இருந்து அழிக்கும் பைல்-கள் எவ்வளவு காலம் இந்த செயலில் தங்கி இருக்க வேண்டும் என்பதை கூட தெரிவு செய்து கொள்ள முடியும்.


இந்த பயனுள்ள செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ள முடியும்.

அன்றொஇட் சிறப்பு செயலி

ஆகவே இந்த அருமையான செயலியை உங்களது அன்றொஇட் போனில் நிறுவிக்கொள்வதன் மூலம், உங்களது போனில் இருந்து தவறுதலாகவோ அல்லது தேவையில்லை என்றோ நீங்கள் அழித்த அனைத்து கோப்புகளையும் மிக இலகுவாக மீட்டெடுத்து கொள்ள முடியும்.

பேஸ்புக் அறிமுகப்படுத்தியிருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தும் வசதியை உங்களது பேஸ்புக் கணக்கில் பெறுவது எப்படி?

இருபத்திஓராம் நூற்றாண்டில் இணையத்தை உபயோகிக்கும் இளைய சமூதாயத்தினரிடையே புரட்ச்சியை ஏற்படுத்தி இருப்பது பேஸ்புக் சமூக வலைத்தளம் என்று கூறினாலும் மிகையாகாது. இளைஜர் யுவதி என்று மட்டுமல்லாது பேஸ்புக் சமூக வலைத்தளம் ஆனது அனைத்து தரப்பினராலும் விரும்பி உபயோகிக்கப்படும் ஒரு சமூக வலைத்தளமாகும்.

2004 ஆம் ஆண்டில் இணையத்தில் உருவெடுத்த பேஸ்புக், 2008 ஆம் ஆண்டளவில் உலகம் முழுவதும் பிரபல்யமடைய ஆரம்பித்தது. அன்றிலிருந்து பேஸ்புக் நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் தனது சமூக வலைத்தளத்தை உபயோகிக்கும் பாவனையாளர்களின் சௌகரியத்தை கருத்திற்கொள்ள தொடங்கினார்.


எந்த ஒரு தளத்தின் வெற்றிக்குமே அதை உபயோகிக்கும் பயனர்களின் சௌகர்யமே  மிக முக்கியமானது என்பதை சரி வர தெரிந்து கொண்ட பேஸ்புக் நிறுவனம், தனது பயனர்களை கவரும் வகையில் பல்வேறு வசதிகளை பேஸ்புக் தளத்தில் எமக்கு தர ஆரம்பித்தது.

பேஸ்புக் தளத்தில் இன்று வரை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் வசதிகளில் மிகவும் சிறந்த வசதியாக காணப்படுவது, குறிப்பிட்ட எமது நண்பர்களின் பதிவுகளை லைக் செய்து விருப்பம் தெரிவிப்பது. ஆனால் இதற்கு எதிர்மறையான வசதியை பேஸ்புக் பயனர்கள் பேஸ்புக் நிறுவனத்திடம் கேட்டு வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.

பரிந்துரைக்கப்படும் பதிவு

அதாவது குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பதிவு எமக்கு பிடிக்கவில்லை என்றால், அந்த பதிவை டிஸ்லைக் செய்யும் வசதி. என்னை பொருத்தவரை கண்டிப்பாக பேஸ்புக்கில் இந்த வசதி ஒரு போதும் வராது.
கோடிக்கணக்கான பயனர்கள் தொடர்ந்தும் டிஸ்லைக் வசதி வேண்டும் என பேஸ்புக் நிறுவனத்தை வேண்டிக்கொள்ள சாமர்த்தியமாக செயற்பட்ட மார்க், தற்போது பேஸ்புக் சிறப்பு ரியக்சன் என்ற பெயரில் உணர்வுகளை வெளிப்படுத்துவதட்கான வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

இது குறித்து பேஸ்புக் நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ள கருத்தை கீழே காணலாம்.


அவரின் கருத்துப்படி புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தும் வசதியை ஏற்கனவே பேஸ்புக்கில் காணப்படும் லைக் பட்டன்-ஐ பிடித்து  சிறிது நேரம் அழுத்தி பிடித்து கொண்டிருப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.


உலகம் முழுதும் உள்ள பேஸ்புக் பயனர்களுக்கு இந்த வசதி அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், ஒரு சிலருக்கு இந்த வசதி கிடைக்கவில்லை. பெரும்பாலும் இன்று அல்லது ஓரிரு நாட்களுக்குள் இந்த வசதியை ஆசிய நாட்டை சேர்ந்த பேஸ்புக் பயனர்களும் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்களது ஜிமெயில் முகவரியின் மத்தியில் காணப்படும் புள்ளி (.) செல்லுபடியாகாது என்பது உங்களுக்கு தெரியுமா?

இன்றைய காலகட்டத்தில் மின்னஞ்சல் முகவரி ஒன்றை உபயோகிக்காதவர்கள் யாருமோ இல்லை என்று கூறலாம். இன்று நாம் இணையத்தில் உபயோகிக்கும் அனைத்து ஆன்லைன் கனன்க்குகளை ஆரம்பிக்க கட்டாயமாக மின்னஞ்சல் முகவரி ஒன்று எமக்கு தேவைப்படுகிறது. ஆகவே இன்று இணையத்தை உபயோகிக்கும் அனைத்து தரப்பினருமே குறைந்தது ஒரு மின்னஞ்சல் முகவரியையாவது பதிவு செய்து வைத்து இருக்கிறார்கள்.

ஆகவே இன்றைய பதிவில் மின்னஞ்சலுடன் சம்மந்தப்பட்ட மற்றுமொரு சுவாரஸ்யமான விடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மின்னஞ்சல் சேவைகளில் மிகவும் பிரபல்யமான ஒன்று தான் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் சேவை. பல்வேறு பயனுள்ள வசதிகளை தமது பயனர்களுக்கு வழங்கி வரும் ஜிமெயில் மின்னஞ்சல் சேவை மற்றைய மின்னஞ்சல் சேவைகளை பார்க்க ஒரு படி மேலே தான் இருந்து கொண்டு இருக்கிறது.


இப்படி இருக்கும் ஜிமெயில் மின்னஞ்சல் சேவையில் காணப்படும் ஒரு சுவாரஸ்யமான விடயம் தான், ஜிமெயில் முகவரிகளில் நீங்கள் உபயோகப்படுத்தும் புள்ளி (.) கணக்கில் எடுத்து கொள்ளபடாமை.

அதாவது உங்களது மின்னஞ்சல் முகவரியில் இருக்கும் எழுத்துக்களின் மத்தியில் நீங்கள் புள்ளி (.) ஒன்றையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளிகலையோ கொண்டு மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி இருந்தாலும் உங்களது மின்னஞ்சல் முகவரியில் இருக்கும் புள்ளிகள் கணக்கில்கொள்ள பட மாட்டது.

உதாரணமாக உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் முகவரி tech.in.tha.mil@gmail.com என்று இருக்குமேயானாலும் கூட ஜிமெயில் இதை techinthamil@gmail.com என்றே கருத்திட்கொள்ளும்.

அதாவது உங்களது ஜிமெயில் முகவரியின் மத்தியில் காணப்படும் புள்ளிகள் கணக்கில் கொள்ளப்பட மாட்டாது.
அதே போன்று நீங்கள் உங்களது ஜிமெயில் மின்னஞ்சல் முகவரியை கொண்ட நண்பர்களுக்கு மின்னஞ்சல்களை அனுப்பும் போது அவர்களுடைய மின்னஞ்சல் முகவரியும் மத்தியில் எத்தனை புள்ளிகளை வைத்து ஜிமெயில் முகவரியை டைப் செய்து அனுப்பினாலும், குறிப்பிட்ட நண்பருக்கு மின்னஞ்சல் கிடைக்கும்.

உங்களது நண்பருடைய ஜிமெயில் முகவரி myfriend@gmail.com என்று இருக்குமேயானால், நீங்கள் சரியான மின்னஞ்சல் முகவரிக்கு பதிலாக எத்தனை புள்ளியை வேண்டுமானாலும் டிபே செய்து அனுப்ப முடியும்.

உதாரணமாக
my.friend@gmail.com அல்லது
my.fri.en.d@gmail.com அல்லது
m.y.f.rie.n.d@gmail.com என்று கூட டைப் செய்து அனுப்ப முடியும். இவ்வாறு நீங்கள் பிழையாக டைப் செய்து அனுப்பும் மின்னஞ்சல் கூட உங்களது நண்பரின் இன்பாக்ஸ்-ஐ சரியாக சென்றடையும்.

குறிப்பு

இது உபாயம் ஜிமெயில் மின்னஞ்சல் முகவரிகளில் மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்றொஇட் போனை ஒரே கிளிக் மூலம் அன்-ரூட் செய்வது எப்படி?

எமது தளத்தில் ஏற்கனவே அன்றொஇட் ஸ்மார்ட் போனை ரூட் செய்வது எப்படி என்றும் ரூட் செய்வதன் நன்மை தீமைகள் என்ன என்றும் பதிவுகள் எழுதப்பட்டன.

குறிப்பிட்ட சில சிறப்பு செயலிகளின் உதவியுடன் உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனை மிக இலகுவாக ரூட் செய்து கொள்ள முடியும். அன்றொஇட் போனை ரூட் செய்து கொள்ள உதவும் மிகச்சிறந்த செயலிகளை எமது முன்னைய இரண்டு பதிவுகளில் பரிந்துரைத்து இருந்தேன். அந்த பதிவுகளை நீங்கள் தவற விட்டு இருந்தால், கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தெரிந்து கொள்ள முடியும்.

அன்றொஇட் போனை ரூட் செய்வதற்கான 12 சிறந்த செயலிகள்

மிகவும் இலகுவான முறையில் வெறும் ஐந்தே நிமிடத்தில் உங்களது அன்றொஇட் போனை ரூட் செய்து கொள்ள வேண்டுமென்றால், கீழே வழங்கப்பட்டிருக்கும் பதிவை வாசித்து பாருங்கள்.

அன்றொஇட் போனை 5 நிமிடத்திற்குள் ரூட் செய்வது எப்படி?


ஆனால் உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனை ரூட் செய்து கொள்ள முன்னர், ரூட் செய்வதன் நன்மை தீமைகளை தெரிந்து கொள்ள வேண்டும். அன்றொஇட் ரூட் செய்வதன் நன்மை தீமைகளை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தெரிந்து கொள்ள முடியும்.

அன்றொஇட் போனை ரூட் செய்வதன் நன்மை தீமைகள் என்ன?

சரி.. எப்படி உங்களது ரூட் செய்யப்பட்ட அன்றொஇட் போனை மிக இலகுவான முறையில் அன்-ரூட் செய்து கொள்வது என்று பார்ப்போம்.

இந்த வேலையை மிக இலகுவாக ஒரு சில கிளிக் -களில் செய்து முடிக்க உதவுகிறது அன்றொஇட் அன்-ரூட் செய்வதற்கான கீழ்வரும் சிறப்பு செயலி.
இந்த செயலியை தரவிறக்கி உங்களது அன்றொஇட் போனில் நிறுவி கொள்ளுங்கள்.

அடுத்து ரூட் செய்யப்பட்ட உங்கள் அன்றொஇட் போனில் இந்த செயலியை ஆரம்பித்து கீழே காட்டியுள்ளவாறு செட்டிங்க்ஸ் பகுதிக்கு செல்லுங்கள்.

அதிலே Full Unroot என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.


அடுத்து தோன்றும் திரையில் Continue என்பதை கிளிக் செய்யுங்கள்.


அவ்வளவு தான். இப்போது உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போன் அன்-ரூட் ஆக தயாராகி விட்டது.

அன்றொஇட் போனை அன்-ரூட் செய்வதற்கான செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ள முடியும்.

அன்றொஇட் அன்-ரூட் சிறப்பு செயலி

சிறிது நேரம் பொறுத்திருந்து, அன்-ரூட் செயன்முறை முடிவடைந்த பின்னர், உங்களது அன்றொஇட் போனை ஒரு முறை Restart செய்து விட்டு மறுபடியும் உபயோகிக்க தொடங்குங்கள்.

உங்கள் அன்றொஇட் போனுக்கு புதிதாக ஆடைகள் வாங்கி கொடுப்போமா?

ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமான ஒரு ஸ்மார்ட் போன் தான் அன்றொஇட். பல்வேறு வசதிகளுடன் நியாயமான விலையில் கிடைக்கும் அன்றொஇட் ஸ்மார்ட் போன் களை இளைஜர் யுவதி முதல் பெரியோர் வரை விரும்பி உபயோகித்து வருகின்றனர்.

மற்றைய ஸ்மார்ட் போன் களை போல் இல்லாது அன்றொஇட் ஸ்மார்ட் போன் களை எமது எமது தேவைக்கு ஏற்ற போல குறிப்பட்ட சில கட்டுப்பாடுகளுடன் மாற்றி வடிவமைத்துக்கொள்ள முடியும். ஆகவே இன்றைய பதிவில் இது போன்ற கட்டமைப்பை வடிவமைத்து கொள்ள உதவும் ஒரு உபாயத்தை உங்களுக்கு கூறுகிறேன்.

எமது அன்றொஇட் ஸ்மார்ட் போனின் மென்பொருள் கட்டமைப்பு தோற்றத்தை குறிப்பிட்ட சில செயலிகளை பயன்படுத்தி எமது விருப்பம் போல் மாற்றிக்கொள்ள முடியும்.


இவ்வாறு செய்து கொள்வதன் மூலம் எமது ஸ்மார்ட் போன் மிக அழகிய தோற்றத்துடன் காட்சியளிக்கும்.

இந்த மாற்றத்தை எமது ஸ்மார்ட் போனில் கொண்டு வர கூகுள் ப் லே ஸ் டோர் இல் பல்வேறு செயலிகள் காணப்படுகின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலான செயலிகள் எமது ஸ்மார்ட் போன் வேகத்தை குறைத்து விடுகின்றன.

ஆகவே இன்றைய பதிவில் எமது அன்றொஇட் ஸ்மார்ட் அலங்கரித்துக்கொள்ள உதவும் அதே வேளையில் எமது ஸ்மார்ட் போன் வேகத்தை பாதிக்காதவாறு செயற்படக்கூடிய சிறந்த செயலிகளை உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

இந்த வேலையை எமது அன்றொஇட் போனில் மிக இலகுவாக செய்து முடிக்க உதவுகிறது கீழ்வரும் சிறப்பு செயலியும் அதற்கான ஐ கன் பேக் -உம்..
உங்களது அன்றொஇட் மெனு கட்டமைப்பை மாற்றக்கூடிய சிறப்பு செயலியை இங்கே கிளிக் செய்து தரவிறக்கி கொள்ளுங்கள்.

இந்த செயலியுடன் இணைந்து சிறப்பாக செயற்படக்கூடிய ஐ கன் பேக் -களை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் இருந்து தரவிறக்கி கொள்ளுங்கள்.

ஐகன் பேக் 1
ஐகன் பேக் 2

ஆகவே இந்த சிறப்பு செயலிகளை பயன்படுத்தி உங்களது அன்றொஇட் போனின் மெனு கட்டமைப்பு தோற்றங்களை உங்களது தேவைக்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொள்ளும் அதே வேலை உங்களது ஸ்மார்ட் போனின் வேகத்தில் எந்த குறையும் வராமலும் பார்த்து கொள்ள முடியும்.

கணனியில் நிறுவப்பட்டிருக்கும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் சரியாக செயற்படுகிறதா என்று தெரிந்து கொள்வது எப்படி?

கணணிகளை உபயோகிக்கும் எமக்கு இணையத்தின் மூலம் கிடைக்கும் பல்வேறு பயனுள்ள வசதிகளுடன் சேர்த்து இலவசமாக ஒரு சில ஆபத்துக்களும் கிடைக்கின்றன.

இவற்றில் குறிப்பாக சுட்டி காட்ட வேண்டிய ஒரு விடயம் தான் இணையத்தில் இருந்து கணணிகளை தொற்றிக்கொள்ளும் வைரஸ். எமது கணனிகளுக்கு வைரஸ் பல்வேறு முறை மூலம் வர வாய்ப்பு இருக்கின்றது. அவற்றில் இணையத்தை உபயோகிக்கும் போது வைரஸ் தொற்றிக்கொள்ள கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம். இணையத்தை உபயோகிக்கும் நாம் பல்வேறு தளங்களை தினம்தோறும் வளம் வருகிறோம். இணையத்தை உபயோகிக்கும் போது இவ்வாறான ஒரு சூழல் உருவாக்கப்படுவதால், எமக்கு தெரியாமலேயே எமது கணணிகளுக்குள் வைரஸ் பைல்-கள் சென்று விடுகின்றது.

இவ்வாறன வைரஸ்-கள் எமது கணனியின் வேகத்தை குறைப்பதில் இருந்து எமது முக்கியமான கோப்புக்களை அழித்து விடக்கூடிய அளவிற்கு திறமை கொண்டது.


ஆகவே இவ்வாறன வைரஸ் தாக்குதல்களில் இருந்து எமது கணணியை பாதுகாத்து கொள்ளவே நாம் சிறந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்களை உபயோகிக்கிறோம்.

ஆனால் நாளுக்கு நாள் பெருகி வரும் புது விதமான வைரஸ்களை சில வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள் சரியாக கண்டறிய மறுக்கின்றன.

ஆகவே எமது கணனியில் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் நிருவட்டிருக்கின்ர போதிலும் எமது கணணிகளை வைரஸ் தாக்க வாய்ப்பு இருக்கின்றது.

ஆகவே எமது கணனியில் நிறுவப்பட்டிருக்கும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளானது சரியாக செயற்படுகிறதா என்று தெரிந்து கொள்வதன் மூலம் எமது கணணியை புதுவகையான வைரஸ்களில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும்.

சரி.. எப்படி எமது கணனியில் நிறுவப்பட்டிருக்கும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் சரியாக செயற்படுகிறதா என்று தெரிந்து கொள்வது என்று பார்ப்போம்.

பரிந்துரைக்கப்படும் பதிவு

முதலாவதாக உங்களது கணனியில் Notepad ஒன்றை ஆரம்பியுங்கள்.


அடுத்து கீழே குறிப்பிட்டுள்ளதை Copy செய்து நோட்பேட்-இல் Paste செய்யுங்கள்.

X5O!P%@AP[4PZX54(P^)7CC)7}$TECHHACKS-ANTIVIRUS-TEST-FILE!$H+H*


இப்போது இந்த பைல்-ஐ virus test.com என்ற பெயரில் உங்களது கணனியில் சேமித்து கொள்ளுங்கள்.


சேமித்த பைல்-ஐ உங்களது கணனியில் டபுள் கிளிக் செய்து ஆரம்பியுங்கள்.

உங்களது கணனியில் நிறுவப்பட்டிருக்கும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளானது சரியாக செயற்படுகிறது என்றால், குறிப்பிட்ட இந்த பைல்-ஐ வைரஸ் பைல் ஆக கருதி அழித்து விடும்.

பரிந்துரைக்கப்படும் பதிவு

அப்படி குறிப்பிட்ட இந்த பைல்-ஐ அழிக்கவில்லை என்றால், உங்களது கணனியில் நிறுவப்பட்டிருக்கும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் சரியாக செயற்படவில்லை என்று அர்த்தம். அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் உங்களது வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை அப்டேட் செய்திடுங்கள். அல்லது வேறு ஏதேனும் ஒரு சிறந்த வைரஸ் எதிர்ப்பு மேன்பொருளிட்கு மாறி கொள்ளுங்கள்.

இன்டர்நெட் வேகத்தை இலவசமாக அதிகரித்து கொள்ள உதவும் 16 சிறந்த DNS முகவரிகள்

இணைய வேகத்தை அதிகரிப்பது எப்படி என்ற தலைப்பில் எமது தளத்திலே பல பதிவுகள் வெளிவந்து உள்ளன. அதன் தொடர்ச்சியாக இன்றைய பதிவில் எமது இணைய இணைப்பின் வேகத்தை அதிகரித்து கொள்ள உதவும் மிகச்சிறந்த 10 பப்ளிக் DNS முகவரிகளை உங்களுக்கு தருகிறேன்.

DNS என்றால் என்ன அதை எப்படி எமது கணனியில் உபயோகிப்பது என்று ஏற்கனவே எமது தளத்தில் பதிவொன்றை எழுதி இருந்தேன். அதன் பிரதியை கீழே உங்களுக்கு தருகிறேன். ஆகவே கீழ் குறிப்பிட்டுள்ள முறையை பயன்படுத்தி உங்களது கணனியின் இணைய வேகத்தை இலவசமாக அதிகரித்து கொள்ளுங்கள்.

உங்களது கணணி குறிப்பிட்ட ஒரு இணைய இணைப்பு  ஒன்றுடன் இணைந்து இருக்கும் போது சாதாரண DNS-கு பதிலாக மிக வேகமாக இயங்க கூடிய பப்ளிக் DNS-ஐ உபயோகிக்கும் பட்ச்சத்தில் உங்களது இணைய வேகமானது எந்த வித மென்பொருளும் இன்றி இன்னும் அதிகரிக்கப்படும்.


நீங்கள் குறிப்பிட்ட ஒரு இன்டர்நெட் நெட்வொர்க் உடன் இணையும் போது, உங்களது கணணி ஆனது, அந்த குறிப்பிட்ட நெட்வொர்க் உடைய DNS-ஐயே பெற்றுக்கொள்ளும். அனால் இதை நீங்கள் மாற்றி, அதிவேக DNS-ஐ உபயோகிக்கும் போது உங்கள் இணைய வேகமானது இருந்ததிலும் பார்க்க வேகமாக்கப்படும்.

ஆகவே உங்களது இணைய வேகத்தை இலவசமாக அதிகரித்து கொள்ள உதவும் சிறந்த 10 பப்ளிக் DNS முகவரிகளை கீழே பட்டியலிட்டுள்ளேன்.


சரி.. இந்த முகவரிகளை எமது கணனியில் எப்படி உபயோகிப்பது என்று பார்ப்போம். இதை உங்களுக்கு செய்து காட்ட, நான் கூகுளின் பப்ளிக் DNS முகவரியை எடுத்து கொள்கிறேன்.

இப்போது கணனியின் இணைய வேகத்தை எப்படி கூகுள் DNS மூலம் இலவசமாக அதிகரித்து கொள்வது என்று பார்ப்போம்.

உங்கள் கணனியில் Start-ஐ கிளிக் செய்யுங்கள்.

பின் Control Panel, அங்கே Network and Sharing Center என்பதில் கிளிக் செய்யுங்கள்.


அடுத்து Local Area Connection என்பதை கிளிக் செய்யுங்கள்.


என்னுடைய கணனியில் மேலே காட்டியிருக்கும் படத்தில் Connection 2 என்று காணப்படுகிறது. இது நான் எனது ஸ்மார்ட் போன் மூலம் கணணிக்கான இணைய இணைப்பை வழங்கி உள்ளதாலேயே இப்படி காட்டுகிறது.

நீங்கள் கணணியில் இணையத்தை Router மூலமாக பெற்றுக்கொள்ளும் பட்ச்சத்தில் Connection 2 என்று காட்டப்படமாட்டது என்பதை கருத்திட்கொள்ளுங்கள்.

அடுத்து Properties என்பதை கிளிக் செய்யுங்கள்.


அடுத்து  கீழே காட்டியிருப்பது போல் IPv4 என்பதை Double Click செய்யுங்கள்.


அடுத்ததாக Use Following DNS என்பதை தெரிவு செய்து நான் கீழே படத்தில் காட்டியுள்ளவாறு 
8.8.8.8
8.8.4.4 என்று வழங்கி OK என்பதை கிளிக் செய்யுங்கள்.


இதே முறையை பயன்படுத்தி நான் ஏற்கனவே மேலே வழங்கியுள்ள சிறந்த 10 பப்ளிக் DNS முகவரிகளில் ஏதேனும் ஒன்றை உங்கள் கணனியில் உபயோகித்து கொள்ள முடியும். 

நான் வழங்கியிருக்கும் பட்டியலில், உங்களது இணைய இணைப்புடன் மிகவும் வேகமாக செயல்படக்கூடிய DNS-ஐ பரீட்ச்சித்து பார்த்து, குறிப்பிட்ட அந்த முகவரியை உபயோகியுங்கள்.

வாட்ஸ்அப்-இல் வரும் போட்டோ வீடியோகள் போன் Gellary-யில் தோன்றுவதை மறைப்பது எப்படி?

வாட்ஸ்அப் செயலிகளை நிறுவாத ஸ்மார்ட் போன்களே இல்லை என்று கூறும் அளவுக்கு வாட்ஸ்அப் மெசெஞ்சர் செயலியானது அனைத்து ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியிலும் பிரபல்யமாக உள்ளது.

ஆகவே இன்றைய பதிவில் அன்றொஇட் ஸ்மார்ட் போன் உபயோகிப்பவர்களுக்காக வாட்ஸ்அப் செயலியுடன் சம்மந்தப்பட்ட மற்றுமொரு பதிவை தருகிறேன். வாட்ஸ்அப்-இல் எமது நண்பர்கள் எம்முடன் பகிர்ந்து கொள்ளும் போட்டோ மற்றும் வீடியோகள் எமது கேலரி-க்கு (Gallery) தானாக டவுன்லோட் ஆக்குவதை அவதானித்து இருப்பீர்கள். ஆனால் இதை சில செட்டிங் மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் தடுத்து கொள்ள முடியும்.

இவ்வாறு குறிப்பிட்ட சில செட்டிங்க்ஸ் மாற்றங்களை செய்து கொள்வதால் போட்டோ மற்றும் வீடியோகள் போன் கேலரி-க்கு தானாக டவுன்லோட் ஆகுவதை மட்டுமே தடுக்க முடியும்.

அப்படியில்லாமல் நாம் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு வாட்ஸ்அப் போட்டோவை பார்க்க வேண்டும் என்று எமது வாட்ஸ்அப்-இல் கிளிக் செய்தால் அந்த குறிப்பிட்ட போட்டோ கேலரி-க்கு டவுன்லோட் ஆகுவதை தடுக்க முடியாது.


அன்றொஇட் ஸ்மார்ட் போன்களை வைத்து இருக்கும் பெரும்பாலானோர் இந்த பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். ஆகவே இன்றைய பதிவில் இவ்வாறு எமது வாட்ஸ்அப்-இல் வரும் போட்டோ வீடியோகள் தானாக போன் கேலரி-க்கு டவுன்லோட் ஆகுவதை தடுப்பது எப்படி என்றும் அதை தடுத்த பின், நாம் மனுஅல் ஆக கிளிக் செய்து பார்க்கும் வாட்ஸ்அப் போட்டோகள் எமது கேலரி-யில் தோன்றுவதை எப்படி தடுப்பது என்றும் பார்ப்போம்.

வாட்ஸ்அப் இல் வரும் போட்டோ மற்றும் வீடியோகள் எமது போன் கேலரி-க்கு தானாக டவுன்லோட் ஆகுவதை தடுப்பது எப்படி என்ற சிறப்பு பதிவை ஏற்கனவே எமது தளத்தில் எழுதி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் தவற விட்டு இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தெரிந்து கொள்ள முடியும்.

வாட்ஸ்அப்-இல் வரும் போட்டோ வீடியோகள் எமது ஸ்மார்ட் போனிற்கு தானாக டவுன்லோட் ஆகுவதை தடுப்பது எப்படி?

ஆகவே மேலே குறிப்பிட்டுள்ள முறையை பயன்படுத்தி வாட்ஸ்அப் பைல்-கள் தானாக எமது கேலரி-க்கு டவுன்லோட் ஆக்குவதை தடுப்பது எப்படி என்று தெரிந்து கொண்டீர்கள்.

அடுத்து நாம் ஏதேனும் ஒரு வாட்ஸ்அப் போட்டோவை பார்க்க வேண்டும் என்று எமது வாட்ஸ்அப்-இல் இருக்கும் குறித்த போடோவின் மீது கிளிக் செய்தால் அந்த குறிப்பிட்ட போட்டோ கேலரி-யில் தோன்றுவதை தடுப்பது எப்படி என்று பார்ப்போம்.

முதலாவதாக உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனில் My Files அல்லது File Manager என்று இருக்கும் மெனு-இற்கு செல்லுங்கள்.

அங்கே Device Storage என்பதை கிளிக் செய்யுங்கள்.


அங்கே வாட்ஸ்அப் என்று காணப்படும் போல்டர்-ஐ தேடிப்பிடுயுங்கள்.


அதை கிளிக் செய்து, அங்கே Media என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து WhatsApp Images என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.


அடுத்து மேலே வலது மூலையில் செட்டிங்க்ஸ்-ஐ கிளிக் செய்து Create Folder என்பதை கிளிக் செய்யுங்கள்.


இப்போது குறிப்பிட்ட போல்டர்-ஐ .nomedia என்ற பெயருடன் உருவாக்குங்கள்.

கீழே படத்தில் காட்டியுள்ளது போல் போல்டர்-இன் பெயருக்கு முன்னால் புள்ளி (.) ஒன்றை வைக்க மறக்க வேண்டாம்.


ஆகவே நீங்கள் உருவாக்கிய போல்டர் கீழ் காட்டியிருக்குமாறு காணப்படும்.


அவ்வளவு தான். இப்போது நீங்கள் வாட்ஸ்அப்-இல் கிளிக் செய்து டவுன்லோட் செய்து பார்க்கும் எந்த ஒரு போடவும் உங்களது போன் கேலரி-யில் தோன்றாது.

பரிந்துரைக்கப்படும் பதிவு

டவுன்லோட் செய்த குறிப்பிட்ட போட்டோகளை மறுபடியும் பார்க்க வேண்டுமென்றால் My Files-இனுள் வாட்ஸ்அப் போல்டர்-இல் வாட்ஸ்அப் இமேஜ் என்று இருக்கும் போல்டர்-இல் சென்று பார்த்து கொள்ள முடியும்.

Kategori

Kategori