இன்றைய காலத்தில் அதிகமானோரால் பாவிக்கப்படும் ஸ்மார்ட் போன் இயங்குதளமாக ஆன்ராயிடு காணப்படுகிறது. ஆன்ராயிடு போனில் பயனர்கள் நலன் கருதி பல சலுகைகள் காணப்படுகின்றன. அதில் ஒன்றாக இந்த நொடிபிகேஷன் பெனலை கூறலாம். நொடிபிகேஷன் பெனல் ஆனது நம் போணுக்கு வரும் அனைத்து அறிவிப்புக்களையும் அவ்வப்போதே உடனடியாகவும் இலகுவாகவும் பார்ப்பதற்கு வசதியாக நிர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சில வேளைகளில் நம் கையால் குறித்த சில அறிவிப்புக்களை பார்க்க முன்பே கிளியர் ஆகி விடும். அவ்வாறான் நேரத்தில் கிளியர் செய்யப்பட்ட நோடிபிகேசன்-களை திரும்ப பார்க்க முடியாது என்று நினைத்து வருந்தி சும்மா இருந்துவிடிவோம்.
ஆனால் சில வேளைகளில் நம் கையால் குறித்த சில அறிவிப்புக்களை பார்க்க முன்பே கிளியர் ஆகி விடும். அவ்வாறான் நேரத்தில் கிளியர் செய்யப்பட்ட நோடிபிகேசன்-களை திரும்ப பார்க்க முடியாது என்று நினைத்து வருந்தி சும்மா இருந்துவிடிவோம்.
ஆனால் எப்படி அழிந்த போட்டோ, வீடியோ, மெசேஜ், கான்டெக்ட் நம்பர் போன்றவற்றை மீளப்பெறுகிறோமோ அதே போல் கிளியர் செய்யப்பட்ட நொடிபிகேஷன்களையும் மீளப்பெறலாம்.
ஆன்ராயிடு போனில் இருந்து அழிந்த போட்டோ, வீடியோ, மெசேஜ், கான்டெக்ட் நம்பர் போன்றவற்றை ரிகவர் செய்வது எப்படி என்பதை நாம் ஏற்கனவே பதிவு செய்துள்ளோம். அதை வாசிக்காதிருந்தால் கீழே உள்ள லின்கிற்கு சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
போட்டோ, வீடியோகள் தெரியாமல் டிலீட் ஆகுவது போல, சில வேலைகளில் மிக முக்கியமான சில நொடிபிகேஷன்களும் நம்மாள் தினமும் தெறியாமல் கிளியர் செய்யப்படுகின்றன. அப்படி கிளியர் செய்யப்படும் நொடிபிகேஷன்களை மீளப்பெறுவது எப்படி என்பதை இன்றைய பதிவில் பார்ப்போம்.
க்ளியர் செய்யப்பட்ட நொடிபிகேஷன்களை மீளப்பெறுவது எப்படி?
முதலில் உங்கள் போனில் ஹோம் ஸ்கிரீனுக்கு சென்று வெற்றிடம் ஒன்றில் லோங் ப்ரஸ் (சிறிது நேரத்திற்கு) செய்யுங்கள்.
அதில் விட்ஜட் எனும் ஆப்ஷ்னை தெறிவு செய்து அதில் ஷோட்கட்ஸை டெப் செய்யுங்கள்.
அடுத்து அதிலே செடிங்ஸ் வரும் வறை ஸ்க்ரோல் செய்து, செட்டிங்க்ஸ்-ஐ தெரிவு செய்யுங்கள்.
இப்பொழுது செடிங்ஸ் ஷோட்கட்ஸ் என ஒரு புதிய ஸ்கிரீன் வரும். அதில் நொடிபிகேஷன் லொக்கை செலெக்ட் செய்யுங்கள்.
இப்போது நொடிபிகேஷன் லொக் என ஒரு ஷோட்கட் உங்கள் ஹோம் ஸ்கிரீனில் வரும்.
இப்போது நொடிபிகேஷன் லொக் என ஒரு ஷோட்கட் உங்கள் ஹோம் ஸ்கிரீனில் வரும்.
இப்போது நீக்கப்பட்ட நொடிபிகேஷன்களை இந்த ஷோட்கட்டின் மூலம் மறுபடியும் பார்த்துக்கொள்ளலாம்.
குறிப்பு
குறிப்பு
இந்த வசதியானது, ஆன்ராயிடு கிட்கட் இயங்குதளத்திட்கு மேற்பட்ட பதிப்புக்களில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.






