இந்திய நாட்டில் கடந்த சில மாதங்களாக மிகக்குறைந்த விலையில் அறிமுகமாகும் ஸ்மார்ட் போன் என்ற தலைப்பு பரவலாக பேசப்பட்ட ஒரு விடயமாகும். நம் அனைவருக்குமே தெரிந்தது போல பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ரிங்கிங் பெல் எனும் நிறுவனம் அறிமுகப்படுத்திய ப்ரீடம்-251 எனும் ஸ்மார்ட் போன் இந்திய விலையில் வெறும் 251 ரூபாய்க்கு அறிமுகமாகியது.
இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு பிரபல்ய இணையத்தளங்களிலும் காரசாரமான விடயங்கள் விவாதிக்கப்பட்டன. இது குறித்து எமது தளத்தில் எழுதப்பட்ட பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
251 ரூபாய் ரிங்கிங் பெல் ஸ்மார்ட் போன். உண்மையிலே இந்த ஸ்மார்ட் போன் ரிங் ஆகுமா?
இதை தொடர்ந்து சென்ற மாதத்தில் (ஏப்ரல்) Docoss எனும் நிறுவனத்தின் 888 ரூபாய்க்கு ஒரு ஸ்மார்ட் போன் அறிமுகமாகி இருந்தது. ஸ்மார்ட் போன் ஒன்றின் அனைத்து வசதிகளையும் கொண்ட Docoss X1 என்று பெயரிடப்பட்ட 888 ரூபாய் ஸ்மார்ட் போன் இந்தியா முழுவதும், எஸ்.எம்.எஸ் மூலம் தனது முன்பதிவுகளை ஆரம்பித்து இருந்தது. இது குறித்து எமது தளத்தில் எழுதப்பட்ட பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
இந்திய விலையில் வெறும் 888 ரூபாய்க்கு அறிமுகமாகி இருக்கும் Docoss X1 ஸ்மார்ட் போன்
ஆனால் இதற்கேல்லாம் மூத்த சகோதரனாக தற்போது வெறும் 99 ரூபாய்க்கு ஒரு ஸ்மார்ட் போன் அறிமுகமாகி இருக்கிறது. Namotel எனப்படும் பெங்களூர்-இல் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்று இந்திய பெறுமதியில் வெறும் 99 ரூபாய்க்கு Namotel Acche Din எனப்படும் ஸ்மார்ட் போன் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஆன்ராயிடு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட் போன் கீலே குறிப்பிட்டுள்ள வசதிகளை கொண்டுள்ளது.
4 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்ராயிடு 5.1 லொலிபொப் இயங்குதளம்.
1.3GHz க்வாட் கோர் ப்ரோசெஸ்சர்
1 GB ரேம்
இரண்டு சிம் வசதி (3G)
VGA முன்பக்க கேமரா
2MP பின்பக்க கேமரா
இந்த ஸ்மார்ட் போன் பற்றி குறித்த நிறுவனம் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து கீழே..
"இந்த ஸ்மார்ட் போனை நாங்கள் உருவாக்கியது இந்தியா மீதான அன்பை காட்டுவதற்காக இந்தியாவிலே தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் போன். மேலும் இந்த ஸ்மார்ட் போனை ஆதர் கார்ட் வைத்துள்ள இந்திய மக்கள் மட்டுமே வாங்க முடியும்"
ஆகவே நீங்களும் இந்த 99 ரூபாய் ஸ்மார்ட் போனை வாங்க வேண்டுமென்றால் இங்கே கிளிக் செய்து குறித்த நிறுவனத்தின் அதிகாரபூர்வ தளத்தில் சென்று முன்பதிவுகளை செய்து கொள்ள முடியும்.
அத்துடன் இந்த ஸ்மார்ட் போனை டிலிவரி செய்யும் போது பணத்தை செலுத்துவதற்கான வசதியையும் ஏற்படுத்தி தந்து இருக்கிறது குறித்த நிறுவனம்.
மேலும் இந்த ஸ்மார்ட் போனின் விலை ஆரம்பத்தில் 2,999 ரூபாய் ஆக இருந்த போதிலும் தற்போது வெறும் 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக குறித்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.
Tech in Tamil
Tech News
இந்திய விலையில் வெறும் 99 ரூபாய்க்கு அறிமுகமாகி இருக்கும் Namotel ஸ்மார்ட் போன்
