இன்ஸ்டக்ரம் கணக்கை ஹேக் செய்து காட்டிய 10 வயது சிறுவனுக்கு 10,000 அமெரிக்க டாலர்கள் பரிசு

இன்று இணையத்தில் காணப்படும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனர்கள் குறித்த சமூக வலைத்தளத்தை ஏதேனும் ஒரு முறை மூலம் ஹேக் செய்து காட்டினால், குறித்த பாதுகாப்பு ஓட்டையை சரி செய்துவிட்டு, ஹேக் செய்த நபருக்கு சன்மானம் வழங்குவதை பெரும்பாலான சமூக வலைத்தளங்கள் கடைபிடிக்கின்றன.

இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக அண்மையில் பேஸ்புக் கணக்குகளை எப்படி ஹேக் செய்யலாம் என்று பேஸ்புக் பாதுகாப்பு துறைக்கு தெரிவித்து 15,000 அமெரிக்க டாலர்களை பரிசாக பெற்ற இந்தியாவை சேர்ந்த இன்ஜினியரிங் மாணவன் பிரகாஷ்-ஐ குறிப்பிடலாம்.

எமது தளத்திலும் இந்த ஹெகிங் பற்றி செய்தி ஒன்று எழுதப்பட்டு இருந்தது. அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே தரப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

பேஸ்புக் கணக்கை எப்படி ஹேக் செய்யலாம் என்று காட்டிய பிரகாஷ்-இற்கு 15,000 அமெரிக்க டாலர்களை வழங்கியது பேஸ்புக் நிறுவனம்.


இதை தொடர்ந்து தற்போது புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமான இன்ஸ்டக்ரம்-ஐ எப்படி ஹேக் செய்யலாம் என்று காட்டிய பின்லாந்து நாட்டை சேர்ந்த ஒருவருக்கு இன்ஸ்டக்ரம் உரிமையாளரான மார்க் 10,000 அமெரிக்க டாலர்களை பரிசாக வழங்கி .உள்ளார்.

இதில் இருக்கும் மிக சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், இன்ஸ்டக்ரம் கணக்கை ஹேக் செய்து இருப்பது ஜானி என்று அழைக்கப்படும் பின்லாந்து நாட்டை சேர்ந்த 10 வயது சிறுவன்.
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டக்ரம் கணக்குகளை 13 வயதிற்கு மேற்பட்டோர் மட்டுமே பயன்படுத்த முடியும் எனும் விதிமுறை இருக்கிறது. ஆனால் ஜானி இன்ஸ்டக்ரம் கணக்கை லொகின் செய்யாமலேயே குறித்த ஒரு இன்ஸ்டக்ரம் கணக்கில் காணப்படும் கமெண்ட்-ஐ அழிப்பது மற்றும் மாற்றியமைப்பது எப்படி என்று இன்ஸ்டக்ரம் பாதுகாப்பு துறைக்கு தெரிவித்து இருக்கிறார்.

இதை பரிசீலித்து பார்த்த இன்ஸ்டக்ரம் பாதுகாப்பு துறை, குறித்த பாதுகாப்பு ஓட்டையை உடனடியாக சரி செய்து இருக்கிறது. இதை தொடர்ந்து தமது வலைத்தளத்தில் இருக்கும் மிக முக்கியமானதொரு பாதுகாப்பு குறையை சுட்டிக்காட்டிய ஜானி-க்கு 10,000 அமெரிக்க டாலர்களை பரிசாக வழங்கி உள்ளது.

இதுமட்டுமல்ல..! இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே இந்த சிறுவன், பேஸ்புக் வியாபர பேஜ்-களில் இருந்த பாதுகாப்பு குறை ஒன்றை சுட்டிக்காட்டி பேஸ்புக் உரிமையாளர் மார்க்-இன் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். அதாவது பேஸ்புக் வியாபர பேஜ்-களில் பதிவேற்றப்பட்ட கமெண்ட் ஒன்றை மூன்றாம் நபராக இருந்து டிலீட் செய்து காட்டி இருக்கிறார். இதை தொடர்ந்து குறித்த பாதுகாப்பு குறையை சுட்டிக்காட்டியதால் ஜானிக்கு 10,000 அமெரிக்க டாலர்களை பரிசாக வழங்கி இருக்கிறது பேஸ்புக் நிறுவனம்..