ஆனால் இன்று சந்தைக்கு அறிமுகமாகும் ஸ்மார்ட் போன்களும்/ அவற்றின் இயங்குதளங்களும் அவற்றை பயன்படுத்தும் பயனர்களின் நன்மையையும் கருத்தில் கொள்ள தொடங்கி உள்ளது. அதாவது அதிக நேரம் ஸ்மார்ட் போன்களை உபயோகிப்பதால், எமது கண்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை கருத்திற்கொண்டு அன்ராயிடு மற்றும் ஐபோன் நிறுவனங்கள் தங்களுடைய இயங்குதளங்களில் புதிய பதிப்பில் 'நைட் மொட்' வசதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இது என்னவென்றால், எமது ஸ்மார்ட் போன் டிஸ்ப்ளே-யில் இருந்து வெளியாகும் அதிகளவான வெளிச்சைத்தை எமது கண்களின் தேவைக்கு ஏற்ப கட்டுப்படுத்துவதாகும்.
விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாக உள்ள ஆன்ராயிடின் புதிய இயங்குதளமான ஆன்ராயிடு N 7.0 பதிப்பில் இந்த வசதி பல்வேறு மெருகூட்டல்களுடன் அறிமுகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
பரிந்துரைக்கப்படும் பதிவு
ஆண்ராயிடு N 7.0 இயங்குதளத்தின் மிகச்சிறந்த 9 வசதிகள்
ஆனால் இந்த பயனுள்ள வசதி, தற்போது பெரும்பாலோனோரால் பயன்படுத்தப்பட்டு வரும் ஆன்ராயிடு லொலிபோப் மற்றும் மார்ஸ்மலோ இயங்குதளங்களில் இல்லை.
ஆகவே இந்த குறையை தீர்க்கும் முகமாக, அதிகளவான நேரம்/ இரவு நேரங்களில் எமது ஸ்மார்ட் போனை உபயோகிக்கும் போது எமது கண்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தடுக்கும் வகையில் அறிமுகமாகி இருக்கும் ஒரு சூப்பரான செயலியை இன்று உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.
போன் டிஸ்ப்ளே வெளிச்சத்தில் இருந்து கண்களை பாதுகாப்பது எப்படி?
முதலாவதாக கீலே தரப்பட்ட்டிருக்கும் ஆன்ராயிடு போன் டிஸ்ப்ளே-யில் இருந்து வெளியாகும் வெளிச்சை கட்டுப்படுத்தி கண்களை பாதுகாக்க உதவும் செயலியை பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை ஆரம்பித்து, உங்களது கண்களுக்கு பொருத்தமான ஒரு நிறத்தை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
அடுத்து இந்த செயலியை ஆரம்பித்து, உங்களது கண்களுக்கு பொருத்தமான ஒரு நிறத்தை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
மேலும் உங்களது கண்களின் தேவைக்கு ஏற்ற மாதிரி ஆட்டோ அல்லது மனுஅல் ஆக கூட இந்த செயலியை கட்டுப்படுத்த முடியும்.
மிக இலகுவாக போன் டிஸ்ப்ளே வெளிச்சத்தை கட்டுப்படுத்தி எமது கண்களை பாதுகாக்க உதவும் இந்த ஆன்ராயிடு செயலியை இங்கே கிளிக் செய்து கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும். ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பிலே அடிக்கடி விளம்பரங்கள் வந்து தொல்லை தருகின்றன.
ஆகவே இந்த செயலியின் விளம்பரம் நீக்கப்பட்ட இலவச பதிப்பை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,
'பதிவு 50' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.
எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடன் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.


