ஸ்மார்ட் போன் மூலம் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் அனைவருக்குமே இருக்கும் ஒரு பொதுவான தேவையாக தமது ஸ்மார்ட் போனில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்த வேண்டிய தேவையை கூறலாம்.
இதற்கு மிக முக்கிய காரணம், இன்று சந்தைக்கு அறிமுகமாகும் இரண்டு சிம் பயன்படுத்தும் வசதிகளை ஸ்மார்ட் போன். இதிலும் குறிப்பாக இன்று சந்தைக்கு அறிமுகமாகும் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் கள் பெரும்பாலும் இரண்டு சிம் பயன்படுத்தும் வசதிகளை கொண்டதாக காணப்படுகிறது.
எமது தளத்தில் ஏற்கனவே ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் தமது ஸ்மார்ட் போனில் இருந்து மிக இலகுவாக இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்துவது எப்படி என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஆன்ராயிடு போனில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்துவது எப்படி?
ஆகவே இன்றைய பதிவில் உங்களது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் இரண்டாவதாக வாட்ஸ்அப் கணக்கொன்றை பயன்படுத்த மிகச்சிறந்ததொரு ஜி பி வாட்ஸ்அப் பதிப்பை அறிமுகப்படுத்துகிறேன்.
எமது போனில் இருக்கும் சாதாரண வாட்ஸ்அப் பதிப்பு தரும் வசதிகளை விட பல மடங்கு வசதிகள் கொண்ட ஜி பி வாட்ஸ்அப் மூலம் உங்களுக்கு தேவையான மாதிரி உங்களது வாட்ஸ்அப் கணக்கை கட்டுப்படுத்த முடியும்.
ஜி பி வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி?
முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் ஜி பி வாட்ஸ்அப்-ஐ உங்களது ஆன்ராயிடு போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.அடுத்து ஜி பி வாட்ஸ்அப்-ஐ ஆரம்பித்து உங்களது தொலைபேசி இலக்கம், பெயர் என்பவற்றை வழங்கி இரண்டாவது வாட்ஸ்அப் கணக்கை செயட்படுத்துங்கள்.
இப்போது ஜி பி வாட்ஸ்அப் செட்டிங்க்ஸ்-இற்கு சென்றால் அங்கே உங்களால் அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
ஜி பி வாட்ஸ்அப்-இல் உங்களுக்கு கிடைக்கும் சில வசதிகள்.
ஆகவே உங்களது ஆன்ராயிடு போனுக்கும் ஜி பி வாட்ஸ்அப்-ஐ டவுன்லோட் செய்ய வேண்டுமென்றால், கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.
எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் 'பதிவு 43' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.
எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.



