வைபரில் நீங்கள் அனுப்பிய போட்டோ வீடியோகளை மற்றவர் பார்த்தவுடன் தானாக அழியும் படி செய்வது எப்படி?

நமது ஸ்மார்ட் போனில் நாம் நிறுவி இருக்கும் செயலிகளில் முக்கியமான ஒரு செயலி தான் இந்த வைபர். நம் அனைவருக்குமே தெரியும் வைபர்-இன் தொழிற்பாடு. ஸ்மார்ட் போன்களுக்கான மிகச்சிறந்த மெசஞ்சர் செயலிகளில் வைபர்-ம் ஒன்று.

வைபர் ஆனது எமது ஸ்மார்ட் போன் ஊடாக வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புக்களை டேட்டா அல்லது வைபை இணைப்பு மூலம் மிகக்குறைந்த செலவில் மேற்கொள்ள உதவுகிறது. பல லட்சம் பயனர்களை திருப்திப்படுத்தி வரும் வைபர் ஆனது இப்போது தனது சேவையில் ஒரு அங்கமாக மற்றுமொரு புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.



பரிந்துரைக்கப்படும் பதிவு

உங்கள் பென் டிரைவ்-ஐ ரேம் ஆக பாவித்து, கம்ப்யூட்டரின் வேகத்தை அதிகரிப்பது எப்படி?

அதாவது நீங்கள் உங்களது புகைப்படம் அல்லது வீடியோ ஒன்றை உங்கள் நண்பருக்கு வைபர் மூலம் அனுப்பும் போது, குறிப்பிட்ட அந்த புகைப்படம் அல்லது வீடியோவை உங்கள் நண்பர் பார்த்தவுடன் தானாக அழியும் படி வசதியை செய்து கொள்ள முடியும்.

உண்மையிலே இது ஒரு நல்ல வசதி அல்லவா நண்பர்களே? ஆம்.. இந்த வசதியை எப்படி பெற்றுக்கொள்வது என்று கீழே விளக்கமாக கூறியுள்ளேன்.


வைபர்-இல் அனுப்பிய போட்டோ தானாக அழியும் படி செய்வது எப்படி?

முதலாவதாக கீலே தறப்பட்டிருக்கும் வைபர் போட்டோகளை தானாக அழிக்க கூடிய செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் உங்கள் நண்பர் அல்லது உறவினருக்கு அனுப்ப நினைக்கும் புகைப்படம் மற்றும் வீடியோகளை எடுங்கள்.


புடைப்படத்தை இந்த செயலி மூலம் எடுத்த பின்னர், கீழே வலது மூலையில் காணப்படும் Send எனும் பட்டனை அழுத்தும் போது, உங்களது ஸ்மார்ட் போனில் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் வைபர் செயலியானது தானாக திறக்கும்.


இப்போது உங்கள் தேவைக்கேற்றவாறு நீங்கள் அனுப்பும் போட்டோ அல்லது வீடியோ எவ்வளவு நேரத்தின் பின் அழிந்து போக வேண்டும் என்பதை தெரிவு செய்து கொள்ள முடியும்.

அதன் பின்னர் நீங்கள் அனுப்ப நினைக்கும் உங்களது அன்புக்குரியவரின் வைபர் இலக்கத்தை தெரிவு செய்து உங்களது போட்டோ அல்லது வீடியோவை அனுப்பி விடலாம்.

நீங்கள் ஏற்கனவே தெரிவு செய்து வைத்த நேரம் முடிவடையும் பட்ச்சத்தில் நீங்கள் அனுப்பிய குறிப்பிட்ட போட்டோ தானாக உங்கள் அன்புக்குரியவரின் வைபர் மெசேஜ் பட்டியலில் இருந்து நீங்கி விடும்.


ஆகவே நீங்கள் அனுப்பிய போட்டோ மற்றவர் பார்த்தவுடன் அழியும் படி செய்யும் ஆன்ராயிடு மற்றும் ஐ போன் செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று பெற்றுக்கொள்ள முடியும்.

ஆன்ராயிடு செயலி
ஐபோன் செயலி

இந்த செயலியை உங்களது ஸ்மார்ட் போனில் பயன்படுத்த வேண்டுமானால் உங்களது போனில் வைபர் செயலியின் புதிய பதிப்பு நிறுவப்பட்டிருத்தல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.