நாம் புதியதொரு ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கினால், ஏற்கனவே பாவித்துகொண்டிருந்த ஸ்மார்ட் போனை விற்பது வழக்கம். எமது பழைய ஸ்மார்ட் போனை இன்னுமொருவருக்கு விற்கும் போது எமது போனிலே இருக்கும் அனைத்து டேட்டா-களையும் அழித்து விட்டு தான் விற்பனை செய்வோம்.
ஆனால் இந்த செயன்முறை எவ்வளவு பாதுகாப்பு மிக்கது என்று சிந்தித்து பார்த்தீர்களா? எமது தளத்திலும் கூட ஏற்கனவே ஆன்ராயிடு போனில் இருந்து அழிந்த பைல்-களை மீட்டெடுக்கும் வல்லமை கொண்ட செயலி ஒன்று பற்றி பதிவொன்று எழுதப்பட்டது. அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
ஆன்ராயிடு போன்/ மெமரி கார்ட்-இல் இருந்து அழிந்த போட்டோ-களை ரிகவர் செய்யக்கூடிய அதிசக்தி வாய்ந்த செயலி
ஆகவே உங்களிடம் இருந்து உங்கள் போனை வாங்கியவர், ஏதேனும் ரிகவரி மென்பொருட்களை பயன்படுத்தி உங்களது போனில் இருந்து அழிந்த பைல்-களை மீட்டெடுக்கும் பட்சத்தில், அதை தவறாக உபயோகிக்க வாய்ப்புள்ளது.
அதனால் எமது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் காணப்படும் தனிப்பட்ட தகவல்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் டேட்டா ரிகவரி மென்பொருட்களிடம் இருந்து எமது டேட்டா-களை பாதுகாத்து கொள்ளும் வகையில் ரிகவர் செய்ய முடியாதவாறு டிலீட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
உங்களது ஆன்ராயிடு போனை விற்க முன்னர், கீலே தறப்பட்ட்டிருக்கும் ரிகவர் செய்யமுடியாதபடி டிலீட் செய்யக்கூடிய செயலியை போனில் நிருவிகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து, ஸ்டார்ட் என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து, உங்களது போனில் இருக்கும் டேட்டா, காண்டேக்ட் லிஸ்ட், போட்டோ போன்றவைகளை தெரிவு செய்து, கீழே படத்தில் காட்டப்பட்டிருப்பது போல் 3 cycles என்பதை தெரிவு செய்துவிட்டு SHRED என்பதை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான்..! இப்போது உங்களது போனில் இருக்கும் அனைத்து டேட்டா-களும் ரிகவர் செய்ய முடியாதாவாறு அழிந்து விடும்.
இனி நீங்களே நினைத்தாலும் உங்களது போனில் இருந்து அழிந்த பைல்-களை ரிகவர் செய்ய முடியாது. ஆகவே உங்களது ஆன்ராயிடு போனில் இருக்கும் பைல்-களை ரிகவர் செய்ய முடியாதபடி அழிக்க உதவும் இந்த செயலியை கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.
ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பிலே குறிப்பிட்டளவான வசதிகள் மட்டுமே காணப்படுகின்றன. ஆகவே இந்த செயலியின் பனம் செலுத்தி பெறவேண்டிய பதிப்பை எப்படி இலவசமாக பெற்றுகொள்வது என்று பார்ப்போம்.
டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.
ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.
அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,
'பதிவு 34' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.
எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.
Tech in Tamil
Android
Tips and Tricks
ஆன்ராயிடு போனை விற்கமுன் இந்த செயலியை பயன்படுத்தி உங்களது பைல்-களை ரிகவர் செய்ய முடியாதபடி டிலீட் செய்யுங்கள்.


