பெண்களின் ஸ்மார்ட் போனில் கட்டாயமாக இருக்க வேண்டிய பாதுகாப்பு செயலிகள்

இன்றைய சூழலில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் அனைத்து துறைகளிலும் சிறந்து செயல்படுகிறார்கள். கல்வி, தொழிநுட்பம், அறிவியல் என்று எங்கு பார்த்தாலும் பெண்களின் ஆதிக்கம் ஆண்களுக்கு சமமாகவே இருக்கிறது.

இப்படி இருக்கும் காலகட்டத்தில் பெண்கள் வெளியில் வேலைக்கு செல்வதும், கல்வி நடவடிக்கைகளுக்காக வெளியில் செல்வதும் என்று பெண்களுக்கான சமஉரிமையை இன்றைய சமூதாயத்தில் காணக்கூடியதாய் இருக்கிறது.

என்ன தான் சமஉரிமை வழங்கப்பட்டாலும் இன்றும் பெண்கள் மீதான வல்லுணர்வு சம்பவங்கள் தினம்தோறும் பதிவாகத்தான் செய்கிறது.

கல்லூரிக்கு சென்ற பெண் மீது வல்லுணர்வு, வேலைக்கு சென்ற பெண் மீது வல்லுணர்வு என்று தினம்தோறும் நாம் கேள்விப்பட்டு கொண்டு தான் இருக்கிறோம்.


இதனால் இன்றைய பதிவில் பெண்களுக்கு உதவக்கூடியவாறன சில பாதுகாப்பு செயலிகளை பரிந்துரைக்கலாம் என்று நினைக்கிறேன்.

இந்த செயலிகள் அவர்களது ஸ்மார்ட் போனில் நிறுவப்பட்டு இருக்கும் சந்தர்ப்பத்தில் ஏதேனும் ஆபத்துக்கள் வந்தால் அதை உரியவருக்கு குறிப்பிட்ட இந்த பாதுகாப்பு செயலிகள் மூலம் தெரியப்படுத்த ஒரு வாய்ப்பு இருவாகுவதாய் இருக்கும்.

ஆபத்தின் போது கிடைக்கும் சிறு குச்சியும் எதாவது ஒரு வகையில் உதவுவது போல, இந்த செயலிகளும் ஆபத்துக்கள் ஏற்படும் போது உதவ வாய்ப்புள்ளது. அதை கருத்திற்கொண்டே இந்த பதிவை எழுதுகிறேன்.

பொதுவாக இன்று அனைவருமே எதாவது ஒரு ஸ்மார்ட் போனை நமக்கு சொந்தமாக்கி வைத்திருக்கிறோம். இவ்வாறு நம்மிடம் இருக்கும் ஆன்ராயிடு அல்லது ஐபோன்-களுக்கு நம்மால் பாதுகாப்பு சம்மந்தமான செயலிகளை நிறுவிக்கொள்ள முடியும்.
எமக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படும் பட்ச்சத்தில் இந்த செயலிகள் மூலம் உரியவருக்கு ஒரு கிளிக் மூலம் செய்தியை தெரிவிக்கும் வசதியை இந்த பாதுகாப்பு செயலிகள் வழங்குகின்றது.

அதனால் நான் கீழே குறிப்பிட்டு இருக்கும் செயலிகளில் எதாவது ஒரு செயலி பெண்களின் ஸ்மார்ட் போனில் இருக்கும் பட்ச்சத்தில் ஆபத்து சமயங்களில் கண்டிப்பாக உதவும்.

பெண்களுக்கான சிறந்த பாதுகாப்பு செயலிகள் (ஆன்ராயிடு மற்றும் ஐபோன்)

Circle of 6
bSafe
SOS – Stay Safe!
VithU
iGoSafely
Smart 24×7
Suspects Registry - For Women
Scream Alarm!
Raksha - Women Safety Alert

இவற்றுள் ஏதேனும் ஒரு செயலியை உங்களது ஸ்மார்ட் போனில் நிறுவிக்கொள்ளுங்கள். நான் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு செயலிகளும் தனி சிறப்பை கொண்டுள்ளது.

இந்த செயலிகளை பயன்படுத்தி ஆபத்தான சூழ்நிலை ஒன்றில், உங்களுக்கு வேண்டியவருக்கு குறும் செய்தி அனுப்பவும், நீங்கள் சரியாக இருக்கும் இடத்தை தெரிவிக்கவும், அதே போல் நேரடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும் என்று, ஒவ்வொரு செயலிகளும் பலவேறு பயனுள்ள வசதிகளையும் தனக்கான தனி சிறப்பு தன்மையையும் கொண்டுள்ளது.