ஆனால் இன்றைய பதிவில் இதற்கேல்லாம் ஒரு படி மேலே சென்று, எமது ஆன்ராயிடு மற்றும் ஐபோனில் இருக்கும் ப்லேஷ் லைட்-ஐ நோடிபிகேசன்-களுக்கு பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.
நமது போனுக்கு ஏதேனும் நொடிபிகேஷன் வரும் போது எப்பவும் போல் ஒரு சிறிய சத்தத்தை கொண்டு அறிந்து கொள்வோம். ஆனால் இந்த சத்தத்தையும் தாண்டி இன்னொரு பிரகாசமான முறை ஒன்றின் மூலம் எமது நோடிபிகேசன்களை பெற்றுக்கொள்ள ஒரு வழி இருக்கிறது. அது என்னவென்றால் எமது போனில் நாம் கெமராவுக்கு பாவிக்கும் ப்லேஷ் லைட்-ஐ போனுக்கான நொடிபிகேஷன் வரும் போது மிளிர வைக்க முடியும்.
எல். ஈ. டீ நொடிபிகேஷன் ஒரு ஸ்மாட் போனுக்கு மிகவும் பயனுள்ள ஒரு வசதியாகும். எதாவது மெசேஜ், கோல் அல்லது எதாவது ஒரு நொடிபிகேஷன் வரும் போது நமது போனில் உள்ள எல். ஈ. டீ லைட் மிளிர்ந்து குறித்த நோடிபிகேசன் வந்திருப்பதை எமக்கு தெரிவிக்கும். ஒரு சில ஸ்மார்ட் போன்களில் இந்த வசதி போனுடனேயே தரப்பட்டிருக்கின்ற போதிலும், சில ஸ்மார்ட் போன்களில் இந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியால் இருக்கும்.
அவ்வாறான போன்களில் குறிப்பிட்ட செயலிகளின் உதவியுடன் இந்த எல். ஈ. டீ நொடிபிகேஷன் வசதியை பெற்றுக்கொள்வது எப்படி என்று இன்றைய பதிவில் பார்ப்போம்.
ஆன்ராயிடு போனில் எல். ஈ. டீ நொடிபிகேஷன் வசதியை பெறுவது எப்படி?
முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் ஆன்ராயிடு எல். ஈ. டீ நொடிபிகேஷன் செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து உள்வரும் அழைப்பு , எஸ்.எம்.எஸ் போன்ற அம்சங்களுக்கு ப்லேஷ் நொடிபிகேஷனை செயற்படுத்திக்கொள்ளலாம். இந்த செயலியின் சிறந்த விஷயம் என்னவென்றால் வைபர், பேஸ்புக் மெசேன்ஜர், வட்ஸ்ஆப் போன்றவற்றிற்கு ஃபிளாஷ் அறிவிப்பை பெற முடியும்.
ஆகவே ஆன்ராயிடு போனுக்கான எல். ஈ. டீ நொடிபிகேஷன் செயலியை இங்கே கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.
ஐபோனில் எல். ஈ. டீ நொடிபிகேஷன் வசதியை பெறுவது எப்படி?
உங்களது ஐபோனில் "எக்ஸஸிபிலிடி" வசதி என ஒன்று போன் செட்டிங்க்ஸ்-இல் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதனால் எந்தவிதமான செயலிகளின் உதவியுமின்றி எல். ஈ. டீ நொடிபிகேஷன் வசதியை பெற்றுக்கொள்ள முடியும். இந்த வசதியை செயற்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.உங்களது ஐ போனில் செட்டிங்க்ஸ் பகுதிக்கு சென்று அதிலே,
General > Accessibility என்பதை தெரிவு செய்யுங்கள்.
Hearing என்ற பகுதி வறை ஸ்க்ரோல் செய்யவும், அதில் எல். ஈ. டீ ப்லேஷ் எனும் வசதியை செயட்படுத்துங்கள்.
அவ்வளவு தான்! இப்போது உங்கள் ஐபோனில் ஒரு நோடிபிகேசன் வரும் போது போனில் இருக்கும் எல். ஈ. டீ லைட் மிளிறும்.


