ஆன்ராயிடு போனை ரூட் செய்வது எப்படி? (கிங் ரூட் புதிய பதிப்பு)

ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாக பேசப்படும் ஒரு வார்த்தை ஆன்ராயிடு ரூடிங். ஆன்ராயிடு ரூட் பற்றி எமது தளத்தில் விளக்கமான பதிவுகள் ஏற்கனவே எழுதப்பட்டு விட்டன. அந்த பதிவுகளை வாசிக்க தவறிய வாசகர்களுக்காக ஆன்ராயிடு ரூட் என்றால் என்ன அதன் நன்மை தீமைகள் என்ன என்பதை சுருக்கமாக பார்ப்போம்.

ஆன்ராயிடு ரூட்டிங் என்றால் என்ன?

ஆன்ராயிடு ரூட்டிங் என்றால், உங்களது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனிட்கான சூப்பர் யூசர் அக்சஸ்-ஐ வழங்குவதாகும்.


அதாவது சாதாரண நிலையில் இருக்கும் உங்களது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனை ரூட் செய்வதன் மூலம், பல்வேறுவகையான வசதிகளை .பெற்றுக்கொள்ள முடியும். உங்களது ஆன்ராயிடு போனிற்கு எதுவெல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி இருந்தீர்களோ, அவற்றில் பெரும்பாலான சேவைகளை பெற்று கொள்ள கூடியதாய் இருக்கும். உதாரணமாக கஸ்டம் ரோம் வசதி, கஸ்டம் தீம், வேகமான செயல்பாடு, பேட்டரி வாழ்க்கை நீடிப்பு, இயங்குதளத்தை அப்டேட் செய்துகொள்வது என்று மேலும் பல்வேறு வசதிகளை செய்து கொள்ள முடியும்.

ஆன்ராயிடு ரூட் பற்றி அனைத்து தகவல்களையும் உள்ளடக்கி எமது தளத்தில் எழுதப்பட்ட சிறப்பு பதிவை வாசிப்பதன் மூலம், ஆன்ராயிடு ரூட் செய்வதன் நன்மை தீமை உள்ளடங்கிய பல்வேறு விடயங்களை தெரிந்து கொள்ள கூடியதாய் இருக்கும். ஆகவே கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று குறித்த பதிவை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு ரூட் பற்றி அனைத்தும் - சிறப்பு பதிவு

ஆன்ராயிடு ஸ்மார்ட் போனை ரூட் செய்ய தேவையானவை

பேட்டரி சார்ஜ் ஆனது 50%-இற்கு அதிகமாக இருக்க வேண்டும்.
இன்டர்நெட் இணைப்பு இருக்க வேண்டும்.

ஆன்ராயிடு போனை ரூட் செய்வது எப்படி?

முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் ஆன்ராயிடு ரூடிங் செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து உங்களது போனில் செட்டிங்-இற்கு சென்று Security என்பதை கிளிக் செய்யுங்கள். அங்கே Unknown Sources என்று இருப்பதில் டிக்-ஐ செயட்படுத்துங்கள்.


அடுத்து உங்களது போனில் நிறுவிய ரூட் செயலியை ஆரம்பித்து, அதிலே "வன் கிளிக் ரூட்" என்பதை க்ளிக் செய்யுங்கள்.


அவ்வளவு தான் இப்போது உங்களது ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் ஆனது ரூட் ஆக தயாராகிவிடும்.


ஆகவே மிக இலகுவாக ஆன்ராயிடு ஸ்மார்ட் போனை ரூட் செய்ய உதவும் ரூடிங் செயலியின் புதிய பதிப்பை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பின்பற்றி உங்களது போனுக்கு பெற்றுகொல்லுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 48' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடன் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.