ஆன்ராயிடு இயங்குதளத்தை மாற்றுவது எப்படி? (கஸ்டம் ரோம்) இன்ஸ்டால் செய்வோம்.

ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் கேட்கப்படும் ஒரு பொதுவான கேள்வியாக தமது போனின் இயங்குதளத்தை மாற்றுவது அல்லது அப்க்ரேட் செய்வது எப்படி என்பதை கூறலாம். ஆகவே இன்றைய பதிவில் உங்களது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் கஸ்டம் ரோம் இன்ஸ்டால் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

கஸ்டம் ரொம் என்றால் என்ன?

உங்களது போனில் காணப்படும் ஸ்டொக் ரொம்-ஐ மாற்றி உங்களது தேவைக்கு ஏற்ற போல, உங்களது ஆன்ராயிடு போனை மாற்றியமைத்தால், அதுவே கஸ்டம் ரொம் என்று அழைக்கப்படுகிறது. ஆகவே ஆன்ராயிடு கஸ்டம் ரொம் என்றால் என்ன என்பது இப்போது தெளிவாகி இருக்கும் என்று நினைக்கின்றேன்.


கஸ்டம் ரொம் ஒன்றை பயன்படுத்தும் போது, உங்களது போனிற்கு ஆன்ராயிடு நிறுவனம் தனது புதிய இயங்குதளமொன்றை அதிகாரபூர்வமாக வெளியிடாத போதும், உங்களால் குறித்த இயங்குதளத்தை உங்களது போனில் நிறுவ முடியும். ஆன்ராயிடு போனுக்கான கஸ்டம் ரொம் பல்வேறு மூன்றாம் தரப்பு தனிநபர்/ நிறுவனத்தால் டிவலப் செய்யப்படுகின்றன.

ஆன்ராயிடு போனுக்கான சிறந்த கஸ்டம் ரோம்-களை நேரடியாக தரவிறக்கி  எமது போனில் நிறுவுவது எப்படி என்ற பதிவொன்று எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்டது. அந்த பதிவை நீங்கள் வாசித்த தவறி  இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து  கொள்ள முடியும்.

ஆன்ராயிடு போனுக்கான சிறந்த 10 கஸ்டம் ரோம்

ஆனால் இன்றைய பதிவில் எமது ஆன்ராயிடு போனில் இருந்தபடியே இயங்குத்தலத்தை மிக இலகுவாக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.

ஆன்ராயிடு இயங்குதளத்தை (கஸ்டம் ரோம்) மாற்றுவது எப்படி?

முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் ஆன்ராயிடு கஸ்டம் ரோம்-ஐ மாற்றக்கூடிய செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து குறித்த செயலியை உங்களது போனில் ஆரம்பியுங்கள். இப்போது உங்களது போனுக்கு இன்ஸ்டால் செய்ய முடியுமான அனைத்து கஷ்டம் ரோம்-களும் காட்டப்படும்.


அதிலே உங்களுக்கு தேவையான கஸ்டம் ரோம்-ஐ தெரிவு செய்து டவுன்லோட் என்பதை கிளிக் செய்யுங்கள்.


அடுத்து டவுன்லோட் செய்த கஸ்டம் ரோம்-ஐ உங்களது போனின் மெமரி கார்ட்-ஐ தெரிவு செய்து இன்ஸ்டால் செய்யுங்கள். இறுதியாக உங்களது போனை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்து விட்டு, புதிய இயங்குதளத்துடன் பயன்படுத்த ஆரம்பியுங்கள்.

குறிப்பு

இந்த செயலி மூலம் கஸ்டம் ரோம் இன்ஸ்டால் செய்ய உங்களது போன் ரூட் செய்யப்பட்டிருத்தல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களது போனை ரூட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஆகவே உங்களது ஆன்ராயிடு போனின் கஸ்டம் ரோம்-ஐ மாற்ற உதவும் இந்த ரோம் இன்ஸ்டாலர்-ஐ கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும். ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பிலே குறிப்பிட்டளவான கஸ்டம் ரோம் மட்டுமே காணப்படுகின்றது. ஆனால் கீழ் குறிப்பிட்டுள்ள முறையை பயன்படுத்தி இந்த செயலியின் பல்வேறு அழகிய கஸ்டம் ரோம்-களை உள்ளடக்கிய கோல்டன் பதிப்பை இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் 'பதிவு 44' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.