ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு இருக்கும் ஒரு பொதுவான பிரச்சினை, தமது ஸ்மார்ட் போனில் காணப்படும் தனிப்பட்ட அல்லது முக்கியமான போட்டோகளை மறைத்து வைப்பது எப்படி என்பதாகும். நீங்கள் ஆன்ராயிடு அல்லது ஐபோன் பாவனையாளர் என்றால், கூகுள் ப்லே ஸ்டோரிலோ அல்லது அப்ஸ் ஸ்டோரிலோ போட்டோகளை மறைக்கக்கூடிய பல்வேறு இலவச அதே போல் பணம் செலுத்தி பெற வேண்டிய செயலிகளை பெற்றுக்கொள்ள முடியும்.
ஆனால் உங்களது தனிப்பட்ட போட்டோகளை குறிப்பிட்ட ஒரு மூன்றாம் நபர் உருவாக்கிய செயலியில் வைத்து லாக் செய்வது அவ்வளவு பாதுகாப்பானது இல்லை. மூன்றாம் நபர் உருவாக்கிய செயலி ஒன்றின் மூலம் உங்களது தனிப்பட்ட பைல்-களை மறைத்து வைப்பது எவ்வளவு ஆபத்தானது/ எவ்வாறெல்லாம் உங்களது போட்டோ களை ஹேக் செய்து விட முடியும் என்பது பற்றிய விளக்கமான பதிவொன்றை எமது தளத்தில் ஏற்கனவே எழுதி இருந்தேன். அந்த பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
உங்கள் ஸ்மார்ட் போனில் போட்டோ லாகர் அப்ஸ்-களை பாவிக்கிறீர்களா? அதில் இருக்கும் ஆபத்துக்களை பாருங்கள்.
ஆகவே இவ்வாறு ஹெகிங் அச்சுறுத்தல் மிக்க சூழலில் எமது ஸ்மார்ட் போனில் இருக்கும் தனிப்பட்ட போட்டோகளை மறைத்து வைப்பது மிகவும் சவாலான ஒரு விடயமாகும்.
அதனால் இன்றைய பதிவில் எமது ஆன்ராயிடு மற்றும் ஐபோனில் இருக்கும் தனிப்பட்ட போட்டோகளை மிகவும் சாதாரணமான ஒரு முறையை பயன்படுத்தி ஸ்மார்ட் ஆக மறைத்து வைப்பது எப்படி என்று பார்ப்போம்.
இந்த உபாயத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், எமது ஆன்ராயிடு மற்றும் ஐபோனில் இருக்கும் போட்டோகளை மறைப்பதற்கு எந்த விதமான செயலிகளும் தேவையில்லை.
ஐபோனில் இருக்கும் போட்டோகளை எந்த விதமான செயலிகளையும் பயன்படுத்தாமல் மறைப்பது எப்படி?
முதலாவதாக உங்களது ஐபோனில் நீங்கள் மறைக்க நினைக்கும் போட்டோவை திறந்து எடிட் என்பதை தெரிவு செய்யுங்கள்.
அடுத்து குறித்த போட்டோவில் Crop என்பதை தெரிவு செய்து குறித்த போட்டோவை Zoom செய்து, போட்டோவின் ஒரு பகுதியை மட்டும் க்ரொப் (வெட்டி எடுத்து) செய்து விட்டு கீழே வலது மூலையில் இருக்கும் Done என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது குறித்த போட்டோ உங்களது ஐபோனில் சேமிக்கப்பட்டு விடும். அதாவது குறித்த ஒரிஜினல் போட்டோவின் ஒரு பகுதி மட்டும் சேமிக்கப்பட்டு இருக்கும்.
ஆகவே குறித்த ஒரிஜினல் போட்டோ இப்போது மறைக்கப்பட்டு விட்டது.
மறைக்கப்பட்ட போட்டோவை மறுபடியும் பார்க்க வேண்டுமென்றால், குறித்த போட்டோவை தெரிவு செய்து எடிட் என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து அதிலே Revert என்று காணப்படுவதை கிளிக் செய்து Revert to Original என்பதை தெரிவு செய்யுங்கள்.
அவ்வளவு தான்..! இப்போது மறைக்கப்பட்ட போட்டோ மறுபடியும் உங்களது ஐபோன் கேலரி-யின் தோன்றி விட்டது.
அடுத்து ஆன்ராயிடு போனில் இருக்கும் போட்டோகளை எந்த விதமான செயலிகளையும் பயன்படுத்தாமல் மறைப்பது எப்படி என்று பார்ப்போம்.
ஆன்ராயிடு போனில் இருக்கும் போட்டோகளை எந்த விதமான செயலிகளையும் பயன்படுத்தாமல் மறைப்பது எப்படி என்ற சிறப்பு பதிவு எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது. அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
எந்தவிதமான ஆப்ஸ்-ம் இல்லாமல் கேலரி-யில் இருக்கும் போட்டோ, வீடியோகளை மறைப்பது எப்படி? (ஆன்ராயிடு)
ஆகவே மேலே குறிப்பிட்ட முறை மூலம் மிக இலகுவாக உங்களது ஆன்ராயிடு மற்றும் ஐபோனில் இருக்கும் போட்டோகளை எந்த விதமான செயலிகளையும் பயன்படுத்தாமல் மறைத்து விட்டீர்கள்.
Tech in Tamil
Android
iPhone
Tips and Tricks
ஆன்ராயிடு மற்றும் ஐபோனில் இருக்கும் போட்டோகளை எந்தவிதமான செயலிகளையும் பயன்படுத்தாமல் மறைப்பது எப்படி?



