ஆன்ராயிடு போனை கணனிக்கான வெப் கேமரா ஆக உபயோகிப்பது எப்படி?
ஆன்ராயிடு போனை CCTV கேமரா ஆக உபயோகிப்பது எப்படி?
சரி.. இதே போன்றதொரு மற்றுமொரு பயனுள்ள பதிவுடன் இன்று உங்களை சந்திக்கிறேன். அதாவது நாம் உபயோகிக்கும் ஆன்ராயிடு ஸ்மார்ட் போனை எப்படி ஒரு வைபை ரௌட்டர் ஆக உபயோகிப்பது என்று பார்ப்போம்.
ஆன்ராயிடு போனில் இருந்தே எம்மால் வைபை ஹாட்ஸ்பொட் ஒன்றை மிக இலகுவாக உருவாக்கி கொள்ள முடியும். ஆனால் ஆன்ராயிடு போன் மூலம் உருவாக்கப்படும் வைபை ஹாட்ஸ்பொட்-இல் குறிப்பிட்ட சில வசதிகளையே எம்மால் பெற்றுக்கொள்ள முடியும்.
ஆனால் நாம் ஒரு வைபை ரௌட்டர் ஒன்றில் பெற்றுக்கொள்ள கூடிய அனைத்து வசதிகளையும் ஆன்ராயிடு போனில் காணப்படும் வைபை ஹாட்ஸ்பொட் மூலம் பெற்றுக்கொள்ள முடியாது.
ஆகவே இன்றைய பதிவில், எமது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனை எப்படி ஒரு வைபை ரௌட்டர்-க்கு இணையாக மாற்றி, வைபை ரௌட்டர் ஒன்றில் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொள்வது என்று பார்ப்போம்.
எமது இந்த தேவையை மிக இலகுவாக செய்து முடிக்க உதவுகிறது கீழ் குறிப்பிட்டுள்ள ஆன்ராயிடு போனுக்கான சிறப்பு செயலி.
இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பியுங்கள்.
அடுத்து, உங்களது ஆன்ராயிடு போனில் இருக்கும் ஹாட்ஸ்பொட்-ஐ பயன்படுத்தி உங்களது வைபை நெட்வொர்க்-க்கான பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல் என்பவற்றை உருவாக்கி கொள்ளுங்கள்.
அடுத்து Start என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது உங்களது போனில் வைபை ஹாட்ஸ்பொட் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.
அடுத்து இந்த செயலியில் மேலே வலது மூலையில் காணப்படும் செட்டிங்க்ஸ்-இற்கு சென்று அங்கே உங்களது தேவைக்கு ஏற்ற போல, உங்களது மொபைல் வைபை ரௌட்டர்-ஐ செட்அப் செய்து கொள்ள முடியும்.
- செட்டிங்க்ஸ் மெனு-இல் உங்களது வைபை நெட்வொர்க் உடன் எதாவது புதிய டிவைஸ்கள் இணைந்தால் உங்களுக்கு தெரியப்படுத்தும் வசதி
- வைபை நெட்வொர்க் உடன் இணைந்து இருந்த டிவைஸ்கள், உங்களது நெட்வொர்க்-இல் இருந்து விலகினால் உங்களுக்கு தெரியப்படுத்தும் வசதி
- உங்களது மொபைல் டேட்டா வேகம் என்ன என்பதை தெரிந்து கொள்ளும் வசதி
என்று மேலும் பல்வேறு வசதிகளை தருகிறது இந்தஅருமையான செயலி.
ஆகவே இந்த அருமையான செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ள முடியும்.
பரிந்துரைக்கப்படும் பதிவு
ஒரு வைபை ரௌட்டர் வழங்கும் முக்கியமான அனைத்து வசதிகளையும் வழங்கும் இந்த அருமையான செயலி, ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் மூலம் ஹாட்ஸ்பொட் பயன்படுத்துவோர் அனைவரின் போனிலும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்றாகும்.



