ஸ்மார்ட் போன்களுக்கான சிறந்த பல பாதுகாப்பு முறைகளை அறிமுகப்படுத்தி வரும் டெக் இன் தமிழ் தளத்தில், இன்று ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்களுக்கான சிறந்ததொரு பாதுகாப்பு சம்மந்தப்பட்ட விடயத்தை அறிமுகப்படுத்த போகிறேன்.
இன்றைய கால கட்டத்தில் திருட்டு என்பது தலைவிரித்தாடக்கூடிய ஒரு விடயமாக மாறி விட்டது. நாம் போருந்துகளில் செல்லும் போது, அல்லது பொது இடங்களுக்கு செல்லும் என்று எமக்கு தெரியாமலேயே எம்முடைய பொருட்களை திருடி விடுகிறார்கள். இதிலும் குறிப்பாக மொபைல் போன் திருட்டு இன்றைய காலத்தில் அதிகளவில் காணப்படுகிறது.
திருடர்கள் ஒரு பக்கம் இருக்க எமது கவனயீனம் காரணமாகவும் இன்று ஸ்மார்ட் போன்கள் தொலைந்து போகின்றன சந்தர்ப்பங்களும் அதிகம்.
ஆகவே எமது இன்றைய பதிவில் இந்த மொபைல் போன் திருட்டு போனால் அல்லது தொலைந்து போனால் மிக இலகுவான முறையில் கண்டு பிடித்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
ஸ்மார்ட் போன்களுக்கான பல்வேறு ட்ரேகிங் செயலிகள் காணப்படுகின்ற போதிலும் அவற்றிலே ஒரு சில செயலிகள் மட்டுமே தமது வேலையை சரி வர செய்து முடிக்கின்றன.
ஆகவே இன்றைய பதிவில் அவ்வாறான சிறந்ததொரு (ஆன்ராயிடு போனுக்கு) பாதுகாப்பு செயலியை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.
என்டி தேப் எனப்படும் செயலி உங்களது ஸ்மார்ட் போனில் இருக்கும் பட்ச்சத்தில் யாராவது உங்களது போனை திருடி அன்லாக் செய்ய முயற்சித்தால் உங்களது போன் முன்பக்க கேமரா மூலம் குறித்த நபரை போட்டோ எடுப்பதோடு அவர் இருக்கும் இடத்தையும் லோகேசன் செர்வீஸ் மூலம் கண்டுபிடித்து உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விடும்.
குறிப்பு
பொதுவாக அனைவரும் போன் ஒன்றை தங்களது முகத்திற்கு நேராக வைத்து தான் அன்லோக் செய்வார்கள். ஆகவே கண்டிப்பாக அவர்களது முகம் போட்டோ எடுக்கபடுவதட்கான வாய்ப்பு அதிகம்.
மேலும் லோகேசன் விபரம் தெரிய வேண்டும் என்றால் உங்களது போனில் லோகேசன் செர்வீஸ் செயற்பாட்டில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சரி..! இந்த செயலியை எமது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் நிறுவி எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
முதலாவதாக கீலே தறப்பட்டிருக்கும் ட்ரெகிங் செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு பெற்றுகொல்லுங்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து, எக்டிவ் என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து எத்தனை முறை பிழையான கடவுச்சொல்லை வழங்கிய பின் போட்டோ எடுக்க வேண்டும் என்பதை தெரிவு செய்யுங்கள்.
அடுத்து குறித்த போட்டோ மற்றும் இடத்தின் விபரங்கள் எந்த மின்னஞ்சல் கணக்கிற்கு வர வேண்டும் என்பதை தெரிவு செய்யுங்கள்.
அவ்வளவு தான்..! இப்போது உங்களது போனில் என்டி தேப் செயலி ஆரம்பிக்கப்பட்டு விட்டது. இப்போது நீங்களே ஒரு சில முறைகள் போனை அனலாக் செய்வதற்கான கடவுச்சொல்லை பிழையாக டைப் செய்தால், உங்களை போட்டோ எடுத்து உங்களது லோகேசன் விபரங்களுடன் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி விடும்.
ஆகவே ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்களில் இன்றைய கால கட்டத்தில் கட்டாயமாக இருக்க வேண்டிய இந்த என்டி தேப்-ஐ கூகுள் ப்லே ஸ்டோரில் இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும். ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பிலே அதிக விளம்பரங்களும் குறிப்பிட்ட வசதிகளுமே உண்டு. ஆகவே இந்த செயலியின் பணம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பை எப்படி இலவசமாக பெறுவது என்று பார்ப்போம்.
ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.
அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,
'பதிவு 23' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.
எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.
Tech in Tamil
Android
Tips and Tricks
போனை யாரவது திருடினால், திருடியது யார் என்று போட்டோவுடன் தெரிந்து கொள்ள வேண்டுமா?



