உங்களுடைய தனிப்பட்ட கணனியில் இருக்கும் க்ரோம் செட்டிங்க்ஸ்-களை வேறு ஒரு கணனியில் பெறுவது எப்படி?

நான் உட்பட எம்மில் பெரும்பாலானோர் இணையத்தை உலா வர பயன்படுத்துவது கூகுள் க் ரோம் உலாவியை தான்..! இவ்வாறு கணணி மற்றும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் கோடிக்கணக்கான பயனர்களின் நம்பிக்கையை வென்றுள்ள கூகுள் க்ரோம் அறிமுகப்படுத்தி இருக்கும் மற்றுமொரு சிறந்த வசதி பற்றி இன்றைய பதிவிலே பார்ப்போம்.

அதாவது நாம் எமது கணணி அல்லது ஸ்மார்ட் போனில் பயன்படுத்தும் கூகுள் க்ரோமில் எமது பேஸ்புக் கணக்கிற்கான கடவுச்சொல் அல்லது ஜிமெயில் கணக்கிற்கான கடவுச்சொல் என்று ஏராளமான கடவுச்சொட்களை சேமித்து வைத்து இருப்போம்.

கடவுச்சொற்கள் தவிர, க்ரோம் உலாவியில் நாம் சென்ற தளங்களினுடைய ஹிஸ்ட்ரி, புக் மார்க்ஸ், செட்டிங்க்ஸ் என்று பல்வேறு நடவடிக்கைகளை சேமித்து வைத்து இருப்போம். இதற்கு மிக முக்கிய காரணம், நாம்  கூகுள் க்ரோம் உலாவியை பயன்படுத்தும் போது குறிப்பிட்ட தளங்களுக்கு செல்வது குறித்த தளத்தினுடைய கடவுச்சொற்களை கையாள்வது போன்ற செயல்பாடுகளை இலகுபடுத்துவதட்காகும்.


ஆனால் இந்த அனைத்து வசதிகளையுமே எம்முடைய தனிப்பட்ட கணணி அல்லது ஸ்மார்ட் போனில் இருந்து கூகுள் க்ரோமை பயன்படுத்தும் போது மட்டுமே பெற்றுக்கொள்ளகூடியதாய் உள்ளது.

அப்படியல்லாமல் வேறு ஒரு கணனியில் இருந்து, உதாரணமாக எம்முடைய அலுவலக கணணி அல்லது கல்லூரி கணணி ஒன்றில் இருந்து நாம் கூகுள் க்ரோம் மூலம் இணையத்தை பயன்படுத்தும் போது எம்முடைய தனிப்பட்ட கணனியில் இருக்கும் கூகுள் க்ரோமின் செட்டிங்க்ஸ்-களை பெற்றுக்கொள்ள முடியாது.

இனி அந்த கவலை வேண்டாம்..!

நீங்கள் வேறு ஒரு கணனியில் இருந்து கூகுள் க்ரோம் உலாவியினூடாக இணையத்தை பயன்படுத்தும் போதும் உங்களது தனிப்பட்ட கணனியில் இருக்கும் அனைத்து க்ரோம் செட்டிங்க்ஸ்-களையும் பெற்றுக்கொள்ள முடியும்.
முதலாவதாக உங்களது கணனியில் கூகுள் க்ரோம் செட்டிங்க்ஸ்-இற்கு சென்று அங்கே Sign in to Chrome என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.


அடுத்து உங்களது கூகுள் கணக்கிற்கு லொகின் செய்யுங்கள்.

அடுத்து, கீழே படத்தில் காட்டப்பட்டிருப்பது போல் செட்டிங்க்ஸ்-களை தெரிவு செய்து OK என்பதை கிளிக் செய்யுங்கள்.


இப்போது வேறு ஒரு கணனியில் இருந்து உங்களது கூகுள் க்ரோம் செட்டிங்க்ஸ் மற்றும் சேமித்து வைத்து இருந்த கடவுச்சொற்களை அக்சஸ் செய்ய வேண்டுமென்றால் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் தளத்திற்கு சென்று உங்களது கூகுள் கணக்கிற்கு லொகின் செய்யுங்கள்.

http://passwords.google.com/

இப்போது உங்களது தனிப்பட்ட கணனியில் இருந்த அனைத்து க்ரோம் செட்டிங்க்ஸ்-களையும் குறித்த கணனியில் இருந்து பெற்றுக்கொள்ள கூடியதாய் இருக்கும்.