ஏர்டெல் நெட்வொர்கிடம் இருந்து இலவசமாக இன்டர்நெட் டேட்டாவை பெற்றுக்கொள்வது எப்படி?

ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் நாம் எமது டேட்டா தேவைக்கு ஏற்ற மாதிரி ஒரு மொபைல் நெட்வொர்க்-ஐ தெரிவு செய்து அதன் மூலம் இன்டர்நெட்-ஐ பயன்படுத்தி வருகிறோம். ஆனால் ஸ்மார்ட் போன் மூலம் இன்டர்நெட் பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு இருக்கும் ஒரு பொதுவான பிரச்சினை, தங்களுடைய டேட்டா பேக் மிக சீக்கிரமாக தீர்ந்து போவதை கூறலாம்.

ஆகவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் எப்படியாவது இலவசமான முறையில் எமது போனில் இருந்து டேட்டா பயன்படுத்துவது எப்படி என்று தேட தொடங்குவோம். ஆகவே அவ்வாறான தேடல்களுக்கான ஒரு விடையாக எமது தளத்தில் ஏற்கனவே பதிவொன்று எழுதப்பட்டு இருந்தது.


அதாவது நீங்கள் ஏர்டெல் சிம் பாவனையாளர் என்றால் 300 முதல் 1200 MB வரையான டேட்டா பேக்-ஐ இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

உங்களது ஏர்டெல் சிம்-இல் இருந்து இந்த ஒபர்-ஐ பெற்றுக்கொள்வது எப்படி என்ற சிறப்பு பதிவை எமது தளத்தில் ஒரு சில நாட்களுக்கு முன்னர் எழுதி இருந்தேன். அந்த பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

ஏர்டெல் சிம்-இல் 1.2GB அளவான மொபைல் டேட்டாவை இலவசமாக பெற்றுக் கொள்வது எப்படி?

அதே போல் இன்றைய பதிவில் ஏர்டெல் மொபைல் நெட்வொர்கிடம் இருந்து மிக இலகுவாக 1GB அளவான 4G இன்டர்நெட் டேட்டாவை எப்படி இலவசமாக பெற்றுக்கொள்வது என்று பார்ப்போம்.


1GB அளவான 4G இன்டர்நெட் டேட்டாவை இலவசாமாக பெறுவது எப்படி?

உங்களது ஏர் டெல் மொபைல்-இல் இருந்து இலவச டேட்டாவை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் கீலே வழங்கப்பட்ட்டிருக்கும் முறையை பின்பற்றுங்கள்.
உங்களது போனில் இருந்து 52122 என்ற இலக்கத்திற்கு அழைப்பொன்றை மேட்கொல்லுங்கள்.

ரிங் ஆகும் வரை பொறுத்திருங்கள். அழைப்பு இணைந்ததும் சிறிது நேரத்தில் தானாக துண்டிக்கப்படும்.

அவ்வளவு தான்..! சிறிது நேரம் பொறுத்திருங்கள். உங்களுக்கான இலவச டேட்டா உங்களது கணக்கில் வரவு வைக்கப்படும்.


குறிப்பு

இந்த இலவச டேட்டா ஆபர் ஆனது, செயற்படுத்திய நாளில் இருந்து 28 நாட்கள் வரை செல்லுபடியாகும் என்பதும் அதே போல் இந்த ஆபர், ஏர்டெல் 4G பாவனையாளர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆபரை பெற்றுக்கொள்ள உள்ள விதிமுறைகள்.

இந்த ஆபர் ஏர்டெல் 3G யில் இருந்து 4G க்கு தங்களது இணைப்பை மேம்படுத்தியவர்களுக்கு மட்டுமே.

இந்த ஆபர் மூலம் இன்டர்நெட் பயன்படுத்தும் போது 4G அல்லது LTE மொட்-இல் உங்களது நெட்வொர்க்-ஐ வைத்து கொள்ளுங்கள். இல்லையெனில் போன் பேலன்ஸ் குறைவடையும்.