ஆன்ராயிடு N 7.0 இயங்குதளத்தை கணனியில் நிறுவுவது எப்படி?

ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்களுக்கான புதிய இயங்குதளமான ஆன்ராயிடு N இயங்குதளத்தின் டிவலபர் ப்ரீவீவ் ஏற்கனவே வெளிவந்து விட்டது நாம் யாவரும் அறிந்த விடயமே. எமது தளத்தின் ஆன்ராயிடு N இயங்குதளத்தின் டிவலபர் ப்ரீவீவ் பதிப்பை எப்படி உங்களது ஆன்ராயிடு போனுக்கு தரவிறக்கி நிறுவுவது மற்றும் ஆன்ராயிடு N இயங்குதளத்தில் காணப்படும் மிகச்சிறந்த வசதிகள் பற்றிய பதிவுகளை எழுதி இருந்தேன். அந்த பதிவுகளை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து கொள்ள முடியும்.

ஆண்ராயிடு N 7.0 இயங்குதளத்தின் டிவலபர் ப்ரீவீவ்-ஐ உங்களது போனிற்கு டவுன்லோட் செய்வது எப்படி?

ஆண்ராயிடு N 7.0 இயங்குதளத்தின் மிகச்சிறந்த 9 வசதிகள்

ஆனால் இன்றைய பதிவில் ஆன்ராயிடு N இயங்குதளத்தை ஸ்மார்ட் போனில் அல்லாமல் எப்படி உங்களது கணனியில் நிறுவுவது என்று பார்ப்போம்.


உங்களது கணனியில் ஆன்ராயிடு N இயங்குதளத்தை நிறுவ வேண்டும் என்றால், உங்களது கணணி குறைந்தது,

2GB ரேம்

விண்டோஸ் இயங்குதளம் (விண்டோஸ் 7,8,10) கொண்டதாக இருக்க வேண்டும்.

முதலாவதாக இங்கே கிளிக் செய்து ஜாவா மென்பொருளை உங்களது கணணியில் நிறுவுங்கள்.


அடுத்து கீழே வழங்கப்பட்டிருக்கும் ஆன்ராயிடு SDK பைல் -ஐ தரவிறக்கி உங்களது கணனியில் நிறுவி கொள்ளுங்கள்.
ஆன்ராயிடு SDK பைல் -ஐ தரவிறக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.


அடுத்து நிறுவிய SDK அப்ளிகேசன்-ஐ திறந்து Android N (API 23, N Preview) என்பதில் இருக்கும் அனைத்தையும் தெரிவு செய்து (கீழே படத்தில் காட்டப்படிருப்பது போல்) Install Packages என்பதை கிளிக் செய்யுங்கள்.


சிறிது நேரம் பொறுத்திருங்கள். அடுத்து குறித்த மென்பொருள், நிறுவப்பட்ட பின்னர், Tools என்பதில் இருக்கு Manage AVD என்பதை கிளிக் செய்யுங்கள்.

AVD (Android Virtual Device) என்பது ஆன்ராயிடு வர்சுஅல் டிவைஸ் ஆகும்.

பரிந்துரைக்கப்படும் பதிவு

சிறிது நேரம் பொறுத்திருங்கள். இப்போது உங்களது கணனியில் ஆன்ராயிடு வர்சுஅல் டிவைஸ் நிறுவப்பட்ட பின்னர், குறித்த வர்சுஅல் டிவைஸ்-ஐ ஆரம்பியுங்கள்.

அவ்வளவு தான். இப்போது உங்கள் கணனியில் ஆன்ராயிடு N இயங்குதளம் வெற்றிகரமாக நிறுவப்பட்டு விட்டது.

இப்போது ஆன்ராயிடு N என்ற லோகோ-வுடன் ஆன்ராயிடு இயங்குதளம், உங்களது கணனியில் வர்சுஅல் டிவைஸ் மூலம் ஆரம்பிக்கப்படும்.