ஆன்ராயிடு போன் டிஸ்ப்ளே-யில் இருந்து வரும் வெளிச்சத்திலிருந்து கண்களை பாதுகாப்பது எப்படி?

இன்றைய சமூதாயத்தினர் தமது நேரத்தில் பெரும்பாலான அளவை ஸ்மார்ட் போன் களிலேயே செலவிடுகின்றனர். இவ்வாறு ஸ்மார்ட் போனிலேயே மூழ்கி கிடக்கும் நாம் ஸ்மார்ட் போன் மூலம் எமது கண்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி பெரிதாக கண்டுகொள்வதில்லை.

ஆனால் இன்று சந்தைக்கு அறிமுகமாகும் ஸ்மார்ட் போன்களும்/ அவற்றின் இயங்குதளங்களும் அவற்றை பயன்படுத்தும் பயனர்களின் நன்மையையும் கருத்தில் கொள்ள தொடங்கி உள்ளது. அதாவது அதிக நேரம் ஸ்மார்ட் போன்களை உபயோகிப்பதால், எமது கண்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை கருத்திற்கொண்டு அன்ராயிடு மற்றும் ஐபோன் நிறுவனங்கள் தங்களுடைய இயங்குதளங்களில் புதிய பதிப்பில் 'நைட் மொட்' வசதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இது என்னவென்றால், எமது ஸ்மார்ட் போன் டிஸ்ப்ளே-யில் இருந்து வெளியாகும் அதிகளவான வெளிச்சைத்தை எமது கண்களின் தேவைக்கு ஏற்ப கட்டுப்படுத்துவதாகும்.


விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாக உள்ள ஆன்ராயிடின் புதிய இயங்குதளமான ஆன்ராயிடு N 7.0 பதிப்பில் இந்த வசதி பல்வேறு மெருகூட்டல்களுடன் அறிமுகமாக உள்ளது என்பது  குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பரிந்துரைக்கப்படும் பதிவு

ஆண்ராயிடு N 7.0 இயங்குதளத்தின் மிகச்சிறந்த 9 வசதிகள்

ஆனால் இந்த பயனுள்ள வசதி, தற்போது பெரும்பாலோனோரால் பயன்படுத்தப்பட்டு வரும் ஆன்ராயிடு லொலிபோப் மற்றும் மார்ஸ்மலோ இயங்குதளங்களில் இல்லை.

ஆகவே இந்த குறையை தீர்க்கும் முகமாக, அதிகளவான நேரம்/ இரவு நேரங்களில் எமது ஸ்மார்ட் போனை உபயோகிக்கும் போது எமது கண்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தடுக்கும் வகையில் அறிமுகமாகி இருக்கும் ஒரு சூப்பரான செயலியை இன்று உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

போன் டிஸ்ப்ளே வெளிச்சத்தில் இருந்து கண்களை பாதுகாப்பது எப்படி?

முதலாவதாக கீலே தரப்பட்ட்டிருக்கும் ஆன்ராயிடு போன் டிஸ்ப்ளே-யில் இருந்து வெளியாகும் வெளிச்சை கட்டுப்படுத்தி கண்களை பாதுகாக்க உதவும் செயலியை பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை ஆரம்பித்து, உங்களது கண்களுக்கு பொருத்தமான ஒரு நிறத்தை தெரிவு செய்து கொள்ளுங்கள்.

மேலும் உங்களது கண்களின் தேவைக்கு ஏற்ற மாதிரி ஆட்டோ அல்லது மனுஅல் ஆக கூட இந்த செயலியை கட்டுப்படுத்த முடியும்.


மிக இலகுவாக போன் டிஸ்ப்ளே வெளிச்சத்தை கட்டுப்படுத்தி எமது கண்களை பாதுகாக்க உதவும் இந்த ஆன்ராயிடு செயலியை இங்கே கிளிக் செய்து கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும். ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பிலே அடிக்கடி விளம்பரங்கள் வந்து தொல்லை தருகின்றன.

ஆகவே இந்த செயலியின் விளம்பரம் நீக்கப்பட்ட இலவச பதிப்பை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 50' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடன் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

ஆன்ராயிடு மற்றும் ஐபோனில் வாட்ஸ்அப் ப்ரொபைல் போட்டோவை க்ரொப் செய்யாமல் மாற்றுவது எப்படி?

வாட்ஸ்அப் சம்மந்தமான பதிவுகள் எமது தளத்தில் அடிக்கடி எழுதப்படுவது வழக்கம்..! இந்த வகையில் இன்றும் மற்றுமொரு வாட்ஸ்அப் சம்மந்தமான பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்.

ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமான செயலியாக கருதப்படும் வாட்ஸ்அப் குறித்த ஒரு பதிவை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதாவது நாம் எம்முடைய வாட்ஸ்அப் கணக்கின் ப்ரோபைல் போட்டோ போடும் போது, குறித்த போட்டோவை க்ரொப் செய்யாமல் ப்ரோபைல் போட்டோ ஆக வைப்பது எப்படி என்பது பற்றி இன்றைய பதிவில்  தெரிந்து கொள்வோம்.


வாட்ஸ்அப்-இல் ஆன்லைன் செல்லாமல் மெசேஜ்-களை வாசிப்பது எப்படி என்ற பதிவொன்று எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்டு இருந்தது. அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

ஆன்லைன் செல்லாமல் வாட்ஸ் அப் மெசேஜ்-களை வாசிப்பது எப்படி?

குறிப்பிட்ட சில போட்டோகளை எமது வாட்ஸ்அப் ப்ரோபைல் போட்டோ ஆக வைக்க வேண்டுமென்றால், குறித்த போட்டோவின் ஒரு பகுதியை க்ரொப் செய்து தான் வாட்ஸ்அப் ப்ரோபைல் போட்டோ ஆக வைக்க வேண்டும். இந்த முறையில் தான் வாட்ஸ்அப் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதனால் சில சந்தர்ப்பங்களில் எமக்கு மிகவும் பிடித்த ஒரு போட்டோவை முழுமையாக வாட்ஸ்அப்-இல் ப்ரோபைல் போட்டோ ஆக வைக்க முடியலாம் போகலாம். ஆகவே குறித்த ஒரு போட்டோவை க்ரொப் செய்யாமல் ஆன்ராயிடு மற்றும் ஐபோன்-களில் வாட்ஸ்அப் ப்ரொபைல் போட்டோ ஆக வைப்பது எப்படி என்று பார்ப்போம்.

க்ரொப் செய்யாமல் ப்ரொபைல் பிக்சர் வைப்பது எப்படி?

முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் 'வாட்ஸ்அப் புல்-சைஸ் போட்டோ' செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து 'பிக் போட்டோ' என்பதை தெரிவு செய்யுங்கள்.


இப்போது உங்கள் போன் கேலரி-யில் இருக்கும் போட்டோகளில் எதை க்ரொப் செய்யாமல் ப்ரொபைல் பிக்சர் ஆக வைக்க நினைக்கிறீர்களோ அந்த​ போட்டோ வை தெரிவு செய்யுங்கள்.


இப்போது உங்கள் தேவைக்கு ஏற்ப​ குறித்த போட்டோவை சாதாரண​ போட்டோவின் தரத்திலும் அளவிலும் குறையாமல் வாட்ஸ்அப் ப்ரொபைல் போட்டோவுக்காக க்ரொப் செய்து கொள்ள முடியும்.


அவ்வளவு தான்..! மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது ஆன்ராயிடு மற்றும் ஐபோன் மூலம் குறித்த போட்டோவை க்ரொப் செய்யாமலேயே வாட்ஸ்அப் ப்ரொபைல் போட்டோ ஆக வைக்க முடியும்.

ஆகவே மிக இலகுவாக எமக்கு தேவையான போட்டோவை க்ரொப் செய்யாமல் வாட்ஸ்அப் ப்ரொபைல் போட்டோ ஆக வைக்க உதவும் இந்த செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

ஆன்ராயிடு செயலி

குறிப்பு

ஐபோனில் வாட்ஸ்அப் ப்ரொபைல் போட்டோ க்ரொப் செய்யாமல் மாற்றுவதும் மேலே குறிப்பிட்ட  இதே வழிமுறையில் தான். ஐபோனிற்கான செயலியை டவுன்லோட் செய்து அதில் வரும் அறிவுறுத்தல்களை பின்பற்றி உங்களுக்கு தேவையான​ குறித்த போட்டோவை க்ரொப் செய்யாமல் ப்ரொபைல் போட்டோ ஆக வைக்க முடியும்.

ஏர்டெல் நெட்வொர்கிடம் இருந்து இலவசமாக இன்டர்நெட் டேட்டாவை பெற்றுக்கொள்வது எப்படி?

ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் நாம் எமது டேட்டா தேவைக்கு ஏற்ற மாதிரி ஒரு மொபைல் நெட்வொர்க்-ஐ தெரிவு செய்து அதன் மூலம் இன்டர்நெட்-ஐ பயன்படுத்தி வருகிறோம். ஆனால் ஸ்மார்ட் போன் மூலம் இன்டர்நெட் பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு இருக்கும் ஒரு பொதுவான பிரச்சினை, தங்களுடைய டேட்டா பேக் மிக சீக்கிரமாக தீர்ந்து போவதை கூறலாம்.

ஆகவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் எப்படியாவது இலவசமான முறையில் எமது போனில் இருந்து டேட்டா பயன்படுத்துவது எப்படி என்று தேட தொடங்குவோம். ஆகவே அவ்வாறான தேடல்களுக்கான ஒரு விடையாக எமது தளத்தில் ஏற்கனவே பதிவொன்று எழுதப்பட்டு இருந்தது.


அதாவது நீங்கள் ஏர்டெல் சிம் பாவனையாளர் என்றால் 300 முதல் 1200 MB வரையான டேட்டா பேக்-ஐ இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

உங்களது ஏர்டெல் சிம்-இல் இருந்து இந்த ஒபர்-ஐ பெற்றுக்கொள்வது எப்படி என்ற சிறப்பு பதிவை எமது தளத்தில் ஒரு சில நாட்களுக்கு முன்னர் எழுதி இருந்தேன். அந்த பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

ஏர்டெல் சிம்-இல் 1.2GB அளவான மொபைல் டேட்டாவை இலவசமாக பெற்றுக் கொள்வது எப்படி?

அதே போல் இன்றைய பதிவில் ஏர்டெல் மொபைல் நெட்வொர்கிடம் இருந்து மிக இலகுவாக 1GB அளவான 4G இன்டர்நெட் டேட்டாவை எப்படி இலவசமாக பெற்றுக்கொள்வது என்று பார்ப்போம்.


1GB அளவான 4G இன்டர்நெட் டேட்டாவை இலவசாமாக பெறுவது எப்படி?

உங்களது ஏர் டெல் மொபைல்-இல் இருந்து இலவச டேட்டாவை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் கீலே வழங்கப்பட்ட்டிருக்கும் முறையை பின்பற்றுங்கள்.
உங்களது போனில் இருந்து 52122 என்ற இலக்கத்திற்கு அழைப்பொன்றை மேட்கொல்லுங்கள்.

ரிங் ஆகும் வரை பொறுத்திருங்கள். அழைப்பு இணைந்ததும் சிறிது நேரத்தில் தானாக துண்டிக்கப்படும்.

அவ்வளவு தான்..! சிறிது நேரம் பொறுத்திருங்கள். உங்களுக்கான இலவச டேட்டா உங்களது கணக்கில் வரவு வைக்கப்படும்.


குறிப்பு

இந்த இலவச டேட்டா ஆபர் ஆனது, செயற்படுத்திய நாளில் இருந்து 28 நாட்கள் வரை செல்லுபடியாகும் என்பதும் அதே போல் இந்த ஆபர், ஏர்டெல் 4G பாவனையாளர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆபரை பெற்றுக்கொள்ள உள்ள விதிமுறைகள்.

இந்த ஆபர் ஏர்டெல் 3G யில் இருந்து 4G க்கு தங்களது இணைப்பை மேம்படுத்தியவர்களுக்கு மட்டுமே.

இந்த ஆபர் மூலம் இன்டர்நெட் பயன்படுத்தும் போது 4G அல்லது LTE மொட்-இல் உங்களது நெட்வொர்க்-ஐ வைத்து கொள்ளுங்கள். இல்லையெனில் போன் பேலன்ஸ் குறைவடையும்.

ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் மூலம் வைபை நெட்வொர்க்-ஐ ஹேக் செய்யக்கூடிய வைபை ஹேகர் அப்ஸ் (புதிய பதிப்பு)

ஸ்மார்ட் போன்கள் மூலம் வைபை நெட்வொர்க் ஒன்றை ஹேக் செய்யும் அளவு வல்லமை கொண்ட பல்வேறு செயலிகள் இன்று அறிமுகமாகி விட்டன. அதிலும் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் மூலம் வைபை நெட்வொர்க் ஒன்றை ஹேக் செய்து கொள்வதற்கான பல்வேறு இலவச செயலிகள் கூகுள் ப்லே ஸ்டோரிலே காணப்படுகின்றன. எமது தளத்திலும் ஆன்ராயிடு ஸ்மார்ட் மூலம் வைபை நெட்வொர்க்-களை ஹேக் செய்யக்கூடிய செயலிகள் பற்றி பதிவுகள் எழுதப்பட்டு இருந்தது. அதிலே சிறந்த ஒரு பதிவை உங்களது பார்வைக்காக கீழே தந்துள்ளேன். இந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் லின்க்கை கிளிக் செய்து வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு போன் மூலம் வைபை நெட்வொர்க்-ஐ ஹேக் செய்யும் ஒரு சூப்பர் செயலி

அதே போல் இன்றைய பதிவில் எமது தளத்தில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வைபை ஹேகர் செயலியின் புதிய பதிப்பை உங்களுக்கு தருகிறேன். நம் அனைவருக்குமே தெரிந்தது போல் குறித்த ஒரு செயலியின் புதிய பதிப்பானது சிறந்த பல முன்னேற்றங்கள் மற்றும் முன்னைய பதிப்பில் உள்ள பிழைகள் திருத்தப்பட்டு தான் வெளியிடப்படும்.


அந்த வகையில் இன்று நான் உங்களுக்கு தரும் இந்த வைபை ஹேகர் செயலியின் புதிய பதிப்பிலே பல்வேறு முன்னேற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இவை ஹெகிங் செயலிகள் என்பதால், இந்த செயலிகளை உங்களது போனில் நிறுவுவதால் ஏதேனும் பின் விளைவுகள் ஏற்பட்டால், அதற்கு நான் பொறுப்பல்ல என்பதை இப்போதே தெரிவுத்து கொள்கிறேன்.

மேலும் இந்த செயலிகளை பயன்படுத்த உங்களது போன் ரூட் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் உங்களது போன் ரூட் செய்யப்பட்டிருந்தால், இந்த ஹேகிங் முறையின் உச்ச பயனை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்படித்தக்கது.

ஆன்ராயிடு போனை ரூட் செய்வது எப்படி?

ஆன்ராயிடு ரூட் செய்வது எப்படி என்ற சிறப்பு பதிவை மேலே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு போன் மூலம் வைபை நெட்வொர்க்-ஐ ஹேக் செய்வது எப்படி?

முதலாவதாக கீலே தறபட்ட்டிருக்கும் ஆன்ராயிடு வைபை ஹெகிங் செயலியின் புதிய பதிப்பை போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை ஆரம்பித்து, குறித்த வைபை நெட்வொர்க்-ஐ தெரிவு செய்து, 'கனெக்ட் ஆட்டோ பின்' என்று இருப்பதை தெரிவு செய்யுங்கள்.


இப்போது குறித்த வைபை நெட்வொர்க்-இன் கடவுச்சொல்லை உங்களால் தெரிந்து கொள்ள முடியுமாக இருக்கும்.


ஆகவே மிக இலகுவாக வைபை நெட்வொர்க்-களை ஹேக் செய்ய உதவும் இந்த ஆன்ராயிடு செயலியின் இலவச பதிப்பை கூகுள் ப்லே ஸ்டோரிலே பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பிலே குறிப்பிட்டளவான வசதிகள் மட்டுமே காணப்படுகின்றன.

அதனால் இந்த செயலியின் அனைத்து ஹெகிங் வசதிகளையும் உள்ளடக்கிய புதிய பதிப்பை கீழே குறிப்பிட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது போனுக்கு தரவிறக்கி கொள்ள முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 49' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடன் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

ஆன்ராயிடு போனை ரூட் செய்வது எப்படி? (கிங் ரூட் புதிய பதிப்பு)

ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாக பேசப்படும் ஒரு வார்த்தை ஆன்ராயிடு ரூடிங். ஆன்ராயிடு ரூட் பற்றி எமது தளத்தில் விளக்கமான பதிவுகள் ஏற்கனவே எழுதப்பட்டு விட்டன. அந்த பதிவுகளை வாசிக்க தவறிய வாசகர்களுக்காக ஆன்ராயிடு ரூட் என்றால் என்ன அதன் நன்மை தீமைகள் என்ன என்பதை சுருக்கமாக பார்ப்போம்.

ஆன்ராயிடு ரூட்டிங் என்றால் என்ன?

ஆன்ராயிடு ரூட்டிங் என்றால், உங்களது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனிட்கான சூப்பர் யூசர் அக்சஸ்-ஐ வழங்குவதாகும்.


அதாவது சாதாரண நிலையில் இருக்கும் உங்களது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனை ரூட் செய்வதன் மூலம், பல்வேறுவகையான வசதிகளை .பெற்றுக்கொள்ள முடியும். உங்களது ஆன்ராயிடு போனிற்கு எதுவெல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி இருந்தீர்களோ, அவற்றில் பெரும்பாலான சேவைகளை பெற்று கொள்ள கூடியதாய் இருக்கும். உதாரணமாக கஸ்டம் ரோம் வசதி, கஸ்டம் தீம், வேகமான செயல்பாடு, பேட்டரி வாழ்க்கை நீடிப்பு, இயங்குதளத்தை அப்டேட் செய்துகொள்வது என்று மேலும் பல்வேறு வசதிகளை செய்து கொள்ள முடியும்.

ஆன்ராயிடு ரூட் பற்றி அனைத்து தகவல்களையும் உள்ளடக்கி எமது தளத்தில் எழுதப்பட்ட சிறப்பு பதிவை வாசிப்பதன் மூலம், ஆன்ராயிடு ரூட் செய்வதன் நன்மை தீமை உள்ளடங்கிய பல்வேறு விடயங்களை தெரிந்து கொள்ள கூடியதாய் இருக்கும். ஆகவே கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று குறித்த பதிவை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு ரூட் பற்றி அனைத்தும் - சிறப்பு பதிவு

ஆன்ராயிடு ஸ்மார்ட் போனை ரூட் செய்ய தேவையானவை

பேட்டரி சார்ஜ் ஆனது 50%-இற்கு அதிகமாக இருக்க வேண்டும்.
இன்டர்நெட் இணைப்பு இருக்க வேண்டும்.

ஆன்ராயிடு போனை ரூட் செய்வது எப்படி?

முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் ஆன்ராயிடு ரூடிங் செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து உங்களது போனில் செட்டிங்-இற்கு சென்று Security என்பதை கிளிக் செய்யுங்கள். அங்கே Unknown Sources என்று இருப்பதில் டிக்-ஐ செயட்படுத்துங்கள்.


அடுத்து உங்களது போனில் நிறுவிய ரூட் செயலியை ஆரம்பித்து, அதிலே "வன் கிளிக் ரூட்" என்பதை க்ளிக் செய்யுங்கள்.


அவ்வளவு தான் இப்போது உங்களது ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் ஆனது ரூட் ஆக தயாராகிவிடும்.


ஆகவே மிக இலகுவாக ஆன்ராயிடு ஸ்மார்ட் போனை ரூட் செய்ய உதவும் ரூடிங் செயலியின் புதிய பதிப்பை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பின்பற்றி உங்களது போனுக்கு பெற்றுகொல்லுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 48' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடன் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

ஆன்ராயிடு மற்றும் ஐபோனில் இருக்கும் எல்.ஈ.டீ ப்லேஷ் லைட்-ஐ நொடிபிகேஷன் லய்ட்டாக பயன்படுத்துவது எப்படி?

ஆன்ராயிடு மற்றும் ஐபோன்களில் காணப்படும் ப்லேஷ் லைட்-ஐ குறித்த ஸ்மார்ட் போனில் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்துகிறோம். உதாரணமாக எமது போனில் இருந்து வெளிச்சைத்தை ஏற்படுத்துவதற்கு, இருள் சூழ்ந்த சந்தர்ப்பத்தில் தெளிவான போட்டோகளை எடுத்து கொள்வதற்கு என்று பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்துகிறோம்.

ஆனால் இன்றைய பதிவில் இதற்கேல்லாம் ஒரு படி மேலே சென்று, எமது ஆன்ராயிடு மற்றும் ஐபோனில் இருக்கும் ப்லேஷ் லைட்-ஐ நோடிபிகேசன்-களுக்கு பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.


நமது போனுக்கு ஏதேனும் நொடிபிகேஷன் வரும் போது எப்பவும் போல் ஒரு சிறிய சத்தத்தை கொண்டு அறிந்து கொள்வோம். ஆனால் இந்த சத்தத்தையும் தாண்டி இன்னொரு பிரகாசமான முறை ஒன்றின் மூலம் எமது நோடிபிகேசன்களை பெற்றுக்கொள்ள ஒரு வழி இருக்கிறது. அது என்னவென்றால் எமது போனில் நாம் கெமராவுக்கு பாவிக்கும் ப்லேஷ் லைட்-ஐ போனுக்கான நொடிபிகேஷன் வரும் போது மிளிர வைக்க முடியும்.

எல். ஈ. டீ நொடிபிகேஷன் ஒரு ஸ்மாட் போனுக்கு மிகவும் பயனுள்ள ஒரு வசதியாகும். எதாவது மெசேஜ், கோல் அல்லது எதாவது ஒரு நொடிபிகேஷன் வரும் போது நமது போனில் உள்ள எல். ஈ. டீ லைட் மிளிர்ந்து குறித்த நோடிபிகேசன் வந்திருப்பதை எமக்கு தெரிவிக்கும். ஒரு சில ஸ்மார்ட் போன்களில் இந்த வசதி போனுடனேயே தரப்பட்டிருக்கின்ற போதிலும், சில ஸ்மார்ட் போன்களில் இந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியால் இருக்கும்.

அவ்வாறான போன்களில் குறிப்பிட்ட செயலிகளின் உதவியுடன் இந்த எல். ஈ. டீ நொடிபிகேஷன் வசதியை பெற்றுக்கொள்வது எப்படி என்று இன்றைய பதிவில் பார்ப்போம்.

ஆன்ராயிடு போனில் எல். ஈ. டீ நொடிபிகேஷன் வசதியை பெறுவது எப்படி?

முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் ஆன்ராயிடு எல். ஈ. டீ நொடிபிகேஷன் செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து உள்வரும் அழைப்பு , எஸ்.எம்.எஸ் போன்ற அம்சங்களுக்கு ப்லேஷ் நொடிபிகேஷனை செயற்படுத்திக்கொள்ளலாம். இந்த செயலியின் சிறந்த விஷயம் என்னவென்றால் வைபர், பேஸ்புக் மெசேன்ஜர், வட்ஸ்ஆப் போன்றவற்றிற்கு ஃபிளாஷ் அறிவிப்பை பெற முடியும்.


ஆகவே ஆன்ராயிடு போனுக்கான எல். ஈ. டீ நொடிபிகேஷன் செயலியை இங்கே கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

ஐபோனில் எல். ஈ. டீ நொடிபிகேஷன் வசதியை பெறுவது எப்படி?

உங்களது ஐபோனில் "எக்ஸஸிபிலிடி" வசதி என ஒன்று போன் செட்டிங்க்ஸ்-இல் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதனால் எந்தவிதமான செயலிகளின் உதவியுமின்றி எல். ஈ. டீ நொடிபிகேஷன் வசதியை பெற்றுக்கொள்ள முடியும். இந்த வசதியை செயற்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.

உங்களது ஐ போனில் செட்டிங்க்ஸ் பகுதிக்கு சென்று அதிலே,
General > Accessibility என்பதை தெரிவு செய்யுங்கள்.
Hearing என்ற பகுதி வறை ஸ்க்ரோல் செய்யவும், அதில் எல். ஈ. டீ ப்லேஷ் எனும் வசதியை செயட்படுத்துங்கள்.


அவ்வளவு தான்! இப்போது உங்கள் ஐபோனில் ஒரு நோடிபிகேசன் வரும் போது போனில் இருக்கும் எல். ஈ. டீ லைட் மிளிறும்.

ஆன்ராயிடு மெமரி கார்ட்-ஐ ரேம் ஆக மாற்ற உதவும் அப்ஸ் (செயலி)

ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் பொதுவான ஒரு பிரச்சினை, தமது போன் மெதுவாக செயற்படுவது. குறித்த ஒரு ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் மெதுவாக செயற்படுகிறது என்றால், அதற்கு மிக முக்கிய காரணம் அந்த ஸ்மார்ட் போனில் இருக்கும் செயலிகளுக்கு போதுமான ரேம் இல்லாமையே..!

ஆகவே இன்றைய பதிவில் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மிகச்சிரந்ததொரு செயலியை அறிமுகப்படுத்த போகிறேன். அதாவது உங்களது ஸ்மார்ட் போனில் நீங்கள் பயன்படுத்தும் மெமரி கார்ட்-ஐ ரேம் ஆக மாற்ற உதவும் செயலி.


எமது தளத்தில் ஏற்கனவே கணனிகளில் நாம் பயன்படுத்தும் ஹார்ட் டிஸ்க்-இன் ஒரு பகுதியை கணனிக்கான ரேம் ஆக பயன்படுத்தி,கணனியின் வேகத்தை அதிகரித்து கொள்வது எப்படி என்ற பதிவை எழுதி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

கணனியின் ஹார்ட் டிஸ்க்-இன் ஒரு பகுதியை ரேம் ஆக மாற்றுவது எப்படி?

ஆகவே மேலே குறிப்பிட்டது போன்று, இன்றைய பதிவில் ஆன்ராயிடு போனில் பயன்படுத்தும் மெமரி கார்ட்-ஐ ரேம் ஆக மாற்றுவது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

குறிப்பு

இந்த உபாயத்தை உங்களது போனில் செயற்படுத்தும் போது, உங்களது போனுக்கோ அல்லது மெமரி கார்ட்-இற்கோ ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்பட்டால், அதற்கு நாம் பொறுப்பல்ல என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

ஏனெனில் இது ஒரு ஆன்ராயிடு அட்வான்ஸ் உபாயம் என்பதால், உங்களுக்கு இது குறித்தான தெளிவான அறிவு இல்லாத சந்தர்ப்பத்தில், இந்த உபாயம் பிழையாக செல்ல வாய்ப்பு உள்ளது.

ஆகவே இதை உங்களது சொந்த முயற்சியில் செய்து பாருங்கள்.

சரி..! இப்போது எமது போனில் பயன்படுத்தும் மெமரி கார்ட்-ஐ ரேம் ஆக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.

முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் மெமரி கார்ட்-ஐ ரேம் ஆக மாற்றக்கூடிய செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து, கீழே படத்தில் குறித்து காட்டப்பட்டிருப்பதை கிளிக் செய்யுங்கள்.


இப்போது உங்களது மெமரி கார்ட்-ஐ ரேம் ஆக மாற்றும் செயற்பாடு நடைபெற்றுக்கொண்டு இருக்கும். இது கிட்டத்தட்ட 20-30 நிமிடம் வரை எடுத்தும் கொள்ளும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.


குறித்த செயற்பாடு முடிவடைந்ததும், உங்களது மெமரி கார்ட்-இல் எவ்வளவு அளவை ரேம் ஆக மாற்ற வேண்டும் என்பதை தெரிவு செய்யுங்கள். (4GB வரை தெரிவு செய்ய முடியும்)

ஆகவே மிக இலகுவாக ஆன்ராயிடு போனில் இருக்கும் மெமரி கார்ட்-ஐ ரேம் ஆக மாற்றும் இந்த செயலியை கூகுள் ப்லே ஸ்டோரிலே பணம் செலுத்தி தான் பெற வேண்டும்.

ஆனால் எமது தளத்தின் வாசகர்கள், எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்

'பதிவு 37' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

இந்த செயலியை பயன்படுத்த உங்களது போன் ரூட் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே உங்களது போனை ரூட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்த செயலி மூலம் உங்களது மெமரி கார்ட்-ஐ ரேம் ஆக மாற்றுவதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால், மெமரி கார்ட்-ஐ ரேம் ஆக மாற்றும் இரண்டாவது முறை பற்றி இங்கே கிளிக் செய்து வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு போனில் இருந்து அழிந்த பைல்-களை அடுத்த நொடியே மீட்டெடுப்பது எப்படி?

ஸ்மார்ட் போன் களை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு இருக்கு ஒரு பொதுவான பிரச்சினை, தமது போனில் இருந்து தவறுதலாக அழிந்து போன பைல்-களை எப்படி மீட்டெடுத்து கொள்வது என்பதாகும். எமது போனில் இருந்து குறிப்பிட்ட சில பைல்-கள் அழிந்தால் அவற்றை மீட்டெடுக்கும் வல்லைமை கொண்ட ஒரு சில ஆன்ராயிடு செயலிகள் காணப்படுகின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலான செயலிகளை நாம் பணம் கொடுத்தே பெற்றுக்கொள்ள வேண்டியதை உள்ளது.

ஆனால், வருமுன் காப்பது என்றுமே சிறந்தது என்று கூறுவதற்கு அமைய இன்றைய பதிவில் உங்களது ஆன்ராயிடு போனில் இருக்கும் பைல்கள் தவறுதால அழிந்து விட்டால் அதை போனில் இருக்கும் 'ரீசைக்கிள் பின்'-ஐ பயன்படுத்தி எப்படி மிக இலகுவாக அடுத்த நொடியே மீட்டெடுத்து கொள்வது என்று பார்ப்போம்.


ஆகவே விண்டோஸ் கணனிகளில் காணப்படும் ரீசைக்கிள் பின்-ஐ போலவே
இந்த உபாயமும் உங்களது ஆன்ராயிடு போனில் தொழிற்படும். எம் அனைவருக்குமே தெரிந்தது போல், நாம் எமது கணனியில் இருந்து ஏதாவது குறிப்பிட்ட ஒரு பைல்-ஐ அழித்து விட்டால், அது ரீசைக்கிள் பின்-இல் தற்காலிகமாக தங்கி இருக்கும். குறிப்பிட்ட அந்த பைல் எமக்கு தேவையென்றால் ரீசைக்கிள் பின்-இல் சென்று மறுபடியும் மீட்டெடுத்து கொள்ள முடியும்.

அதே உபாயத்தை தான், இன்று நாம் எமது ஆன்ராயிடு போனிலும் செயற்படுத்த போகிறோம்.

முதலாவதாக கீலே தரப்பட்டிருக்கும் ஆன்ராயிடு சைக்கிள் பின் செயலியை உங்களது போனுக்கு பெற்றுக்கொள்ளுங்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து போனில் இருந்து அழிக்கப்படும் எந்த வகையான பைல்-கள் இந்த செயலியில் தங்க வேண்டும் என்பதை செட்டிங்க்ஸ்-இற்கு சென்று தெரிவு செய்து கொள்ள முடியும்.


அத்தோடு நீங்கள் உங்களது போனில் இருந்து அழிக்கும் பைல்-கள் எவ்வளவு காலம் இந்த செயலில் தங்கி இருக்க வேண்டும் என்பதை கூட தெரிவு செய்து கொள்ள முடியும்.



ஆகவே இந்த பயனுள்ள செயலியை இங்கே கிளிக் செய்து கூகுள் ப்லே ஸ்டோரிட்கு சென்றால் இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும். ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பில் குறிப்பிட்ட அளவான வசதிகள் மட்டுமே எமக்கு கிடைக்கும். ஆகவே இந்த செயலியின் பணம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பை எப்படி எமது போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்வது என்று பார்ப்போம்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 17' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.
எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்... :)

தொலைந்து போன ஆன்ராயிடு போன் சைலண்ட் மோட்டில் இருக்கிறதா? மெசேஜ் அனுப்பி ரிங் செய்ய வைப்போம்.

பயனர்களின் நலம் கருதி, ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பல்வேறு அம்சங்களுடன் அறிமுகமாகிறது. உலகில் அதிகளவோரால் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பயன்படுத்தப்படுவதட்கான காரணம். அதன் இலகுத்தன்மை தான். இவை தவிர ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் மூலம் எமது வேலைகளை மிக இலகுவாக செய்து கொள்ள ஆன்ராயிடு கூகுள் ப்லே ஸ்டோரில் காணப்படும் மிகச்சிறந்த செயலிகளும் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பலராலும் விரும்பப்படுவதட்கு ஒரு முக்கிய காரணம்.

ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் தொலைந்து போனால் அல்லது திருட்டு போனால் மிக இலகுவாக ட்ரேக் செய்து திருடியது யார் என்று போடோவுடன் தெரிந்து கொள்வது எப்படி என்பது பற்றிய பதிவு எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்டு இருந்தது. அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

போனை யாரவது திருடினால், திருடியது யார் என்று போட்டோவுடன் தெரிந்து கொள்ள வேண்டுமா?


திருட்டை விடுங்கள்..! நமது போனை நாமே எங்கேயாவது வைத்து விட்டு தேடும் போது சில​ வேலையில் போன் சைலன்ட் மோட்-இல் இருக்கும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் போன் ரிங் ஆகினாலும் கூட, போன் இருக்கும் இடத்தை தேடிக்கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்வோம். ஆகவே இன்றைய பதிவில் உங்கள் ஸ்மார்ட் போன் சைலன்ட் மொட்-இல் இருந்தாலும் கூட எப்படி ரிங் செய்ய​ வைத்து மிக இலகுவாக போன் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.

இதில் இருக்கும் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், நாம் குறித்த ஒரு குறும் செய்தியை எமது போனுக்கு அனுப்பியே, போன் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள போகிறோம்.

போன் சைலண்ட்-இல் இருக்கும் போது குறும்செய்தி அனுப்பி ரிங் செய்ய வைப்பது எப்படி?

முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் சைலண்ட்-இல் இருக்கும் போனை ரிங் செய்யவைக்க கூடிய ஆன்ராயிடு செயலியை பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து, உங்களுக்கு தேவையான வாசகம் ஒன்றை டைப் செய்து Set என்பதை கிளிக் செய்யுங்கள்.


இப்போது இன்னுமொரு போனில் இருந்து நீங்கள் ஏற்கனவே உங்களது போனில் சேமித்து வைத்த குறித்த வாசகத்தை மெசேஜ்-இல் டைப் செய்து உங்களது இலக்கத்திற்கு அனுப்புங்கள்.


அவ்வளவு தான்..! சைலண்ட்-இல் இருந்த உங்களது போன் இப்போது ரிங் ஆக ஆரம்பித்து இருக்கும்.


உங்களது போன் இருக்கும் இடம் தெரிந்ததும், போனில் காட்டப்படும் Phone Found என்பதை கிளிக் செய்து ரிங் ஆக்குவதை நிறுத்தி கொள்ள முடியும்.

ஆகவே மிக இலகுவாக சைலண்ட்-இல் இருக்கும் ஆன்ராயிடு போனை ரிங் செய்ய வைக்கும் இந்த சைலண்ட் ரிங்கர் செயலியை இங்கே கிளிக் செய்து கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் தவறுதலாக நீக்கப்பட்ட நொடிபிகேஷன்களை மீளப்பெறுவது எப்படி?

இன்றைய​ காலத்தில் அதிகமானோரால் பாவிக்கப்படும் ஸ்மார்ட் போன் இயங்குதளமாக ஆன்ராயிடு காணப்படுகிறது. ஆன்ராயிடு போனில் பயனர்கள் நலன் கருதி பல சலுகைகள் காணப்படுகின்றன. அதில் ஒன்றாக இந்த நொடிபிகேஷன் பெனலை கூறலாம். நொடிபிகேஷன் பெனல் ஆனது நம் போணுக்கு வரும் அனைத்து அறிவிப்புக்களையும் அவ்வப்போதே உடனடியாகவும் இலகுவாகவும் பார்ப்பதற்கு வசதியாக நிர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சில வேளைகளில் நம் கையால் குறித்த சில அறிவிப்புக்களை பார்க்க முன்பே கிளியர் ஆகி விடும். அவ்வாறான் நேரத்தில் கிளியர் செய்யப்பட்ட நோடிபிகேசன்-களை  திரும்ப பார்க்க முடியாது என்று நினைத்து வருந்தி சும்மா இருந்துவிடிவோம்.


ஆனால் எப்படி அழிந்த போட்டோ, வீடியோ, மெசேஜ், கான்டெக்ட் நம்பர் போன்றவற்றை மீளப்பெறுகிறோமோ அதே போல் கிளியர் செய்யப்பட்ட நொடிபிகேஷன்களையும் மீளப்பெறலாம்.

ஆன்ராயிடு போனில் இருந்து அழிந்த போட்டோ, வீடியோ, மெசேஜ், கான்டெக்ட் நம்பர் போன்றவற்றை ரிகவர் செய்வது எப்படி என்பதை நாம் ஏற்கனவே பதிவு செய்துள்ளோம். அதை வாசிக்காதிருந்தால் கீழே உள்ள லின்கிற்கு சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.


போட்டோ, வீடியோகள் தெரியாமல் டிலீட் ஆகுவது போல, சில வேலைகளில் மிக​ முக்கியமான​ சில​ நொடிபிகேஷன்களும் நம்மாள் தினமும் தெறியாமல் கிளியர் செய்யப்படுகின்றன. அப்படி கிளியர் செய்யப்படும் நொடிபிகேஷன்களை மீளப்பெறுவது எப்படி என்பதை இன்றைய பதிவில் பார்ப்போம்.

க்ளியர் செய்யப்பட்ட நொடிபிகேஷன்களை மீளப்பெறுவது எப்படி?

முதலில் உங்கள் போனில் ஹோம் ஸ்கிரீனுக்கு சென்று வெற்றிடம் ஒன்றில் லோங் ப்ரஸ் (சிறிது நேரத்திற்கு) செய்யுங்கள்.


அதில் விட்ஜட் எனும் ஆப்ஷ்னை தெறிவு செய்து அதில் ஷோட்கட்ஸை டெப் செய்யுங்கள்.
அடுத்து அதிலே செடிங்ஸ் வரும் வறை ஸ்க்ரோல் செய்து, செட்டிங்க்ஸ்-ஐ தெரிவு செய்யுங்கள்.


இப்பொழுது செடிங்ஸ் ஷோட்கட்ஸ் என​ ஒரு புதிய ஸ்கிரீன் வரும். அதில் நொடிபிகேஷன் லொக்கை செலெக்ட் செய்யுங்கள்.


இப்போது நொடிபிகேஷன் லொக் என ஒரு ஷோட்கட் உங்கள் ஹோம் ஸ்கிரீனில் வரும்.


இப்போது நீக்கப்பட்ட​ நொடிபிகேஷன்களை இந்த​ ஷோட்கட்டின் மூலம் மறுபடியும் பார்த்துக்கொள்ளலாம்.


குறிப்பு

இந்த வசதியானது, ஆன்ராயிடு கிட்கட் இயங்குதளத்திட்கு மேற்பட்ட பதிப்புக்களில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோனை கணனிக்கான வெப்கேமரா ஆக பயன்படுத்துவது எப்படி?

முன்னைய காலத்தில் போன்-களை நாம் அழைப்புக்களை மேட்கொல்வதட்கும் மெசேஜ்-களை பரிமாரிக்கொல்வதட்கும் மட்டுமே பயன்படுத்தி வந்தோம். ஆனால் இன்றைய காலமோ அதற்கு எதிர் மாற்றம். நாம் பாவிக்கும் போனை பாவித்து செய்ய முடியாதது என்று ஒன்று இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஸ்மார்ட் போன்-கள் வளர்ச்சியடைந்து காணப்படுகின்றன.

ஆகவே இன்றைய பதிவில் நாம் பாவிக்கும் ஐபோனை எப்படி ஒரு கணணியின் வெப்கெம் ஆக பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

எமது தளத்தில் ஏற்கனவே ஆன்ராயிடு ஸ்மார்ட் போனை கணனிக்கான வெப் கேமரா ஆக பயன்படுத்துவது எப்படி என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு போனை கணனிக்கான வெப் கேமரா ஆக உபயோகிப்பது எப்படி?


வெளிநாடுகளில் இருக்கும் எமது நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு பேசுவதென்றாலே நாம் உபயோகிப்பது ஸ்கைப் தான். ஆனால் நம்மில் சிலரிடம் வீடியோ அழைப்புக்களை பேசுவதற்கு வெப்கெம் இருக்க மாட்டாது. இவ்வாறான சூழ்நிலையில் இனிமேல் நாம் வெப்கெம் தனியாக வாங்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் பாவிக்கும் எமது ஐபோனை-யே ஒரு வெப்கெம் ஆக பயன்படுத்தலாம். கடையில் வாங்கும் வெப்கெம்மை விட இது தரத்திலும் நன்றாகவே இருக்கும்.

சரி.. ஐபோனை வெப்கெம் ஆக பயன்படுத்துவது எப்படி என்பதை விளக்கமாக பார்ப்போம்.

ஐபோனை வெப்கேமரா ஆக பயன்படுத்துவது எப்படி?

முதலாவதாக உங்களது ஐபோனிற்கு கீலே தறப்பட்ட்டிருக்கும் வெப்-கேமரா செயலியை பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து நீங்கள் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ள நினைக்கும் கணனியில் வெப்கேமரா டிரைவர் மென்பொருளை தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள்.


அடுத்து உங்கள் ஐபோனயும் கணணியையும் ஒரே வைபை நெட்வொர்க்-இல் இணைத்து கொள்ளுங்கள்.


இறுதியாக குறித்த வெப் கேமரா மென்பொருளை கணனியில் ஆரம்பித்து உங்களது ஐபோனையும் கணனியையும் பெயார் செய்யுங்கள்.

அவ்வளவு தான்! இப்போது ஸ்கைப்-பை ஓபன் செய்து வீடியோ அழைப்பொன்றை எடுத்து டெஸ்ட் செய்து பாருங்கள். சாதாரண வெப் கேமரா தரும் தரத்தை விட சிறந்த தரத்தில் உங்களது ஐபோன் வெப் கேமரா மூலம் கணணியினூடாக வீடியோ அழைப்புக்களை பேச முடியும்.

ஆகவே எமது ஐ போனை கணனிக்கான வெப் கேமரா ஆக மாற்றக்கூடிய வெப்கேம் செயலியை இங்கே கிளிக் செய்து உங்களது ஐ போனிற்கு தரவிரக்கி கொள்ளுங்கள்.

இந்த பதிவின் மூலம் இலகுவான ஒரு செயன்முறையை பின்பற்றி நமது ஐபோனை கணனிக்கான வெப்கெம் ஆக பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொண்டீர்கள்.

உங்களது கணனியில் அழிக்க முடியாமல் எரர் வரும் பைல்-களை அழிப்பது எப்படி?

தற்போதைய காலகட்டத்தில் கணணியை பயன்படுத்தும் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சினையாக கணனிகளுக்கான வைரஸ் தாக்குதை கூறலாம். இந்த பிரச்சினையில் இருந்து எமது கணணியை பாதுகாத்து கொள்ள நாம் ஏதேனும் சிறந்த ஒரு வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை பயன்படுத்தி வருகிறோம். என்ன தான் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் எமது கணனியில் இருந்தாலும், வைரஸ்-கள் எப்படியாவது கணனியில் வந்து தொற்றிக்கொள்கின்றன.

ஏற்கனவே எமது தளத்தில் நீங்கள் கணனியில் நிறுவி இருக்கும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் சரியாக தொழிட்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ள ஒரு உபாயத்தை கூறி இருந்தேன். அந்த பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

கணனியில் நிறுவப்பட்டிருக்கும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் சரியாக செயற்படுகிறதா என்று தெரிந்து கொள்வது எப்படி?


ஆகவே இவ்வாறான சூழலில் வைரஸ் காரணமாகவோ அல்லது வேறு சில​ காரணங்களால் நமது கணனியில் இருக்கும் சில​ பைல்களை அழிக்க​ முடியாமல் போகும் சந்தர்ப்பங்கள் ஏற்படும். அவ்வாறான நேரத்தில் எந்தவிதமான மென்பொருளையும் உபயோகிக்காமல் எமக்கு தேவையான​குறித்த பைல்-ஐ அழிப்பது எப்படி என்று பார்ப்போம்.

இந்த வேலையை செய்து கொள்ள நாம் கணனியில் இருக்கும் CMD-ஐ பயன்படுத்த போகிறோம். ஆகவே கணனியில் இருக்கும் CMD மூலம் அழிக்க முடியாமல் இருக்கும் பைல்-களை அழிப்பது எப்படி என்று பார்ப்போம்.

இவ்வாறான சந்தர்ப்பமொன்றில் முதலாவதாக உங்களது கணணியை ஒரு முறை ரீ ஸ்டார்ட் செய்து விட்டு குறித்த பைல்-ஐ அழிக்க முயற்சித்து பாருங்கள். அது வெற்றிபெறாவிட்டால் அடுத்த​ படிமுறைக்கு செல்லுங்கள்.
உங்களது கணனியில் ஸ்டார்ட் மெனுவிற்கு சென்று cmd-ஐ ரைட் கிளிக் செய்யுங்கள். அடுத்து "ரன் ஏஸ் எட்மினிஸ்டேடர்" என்பதை தெரிவு செய்து cmd-யை ஆரம்பியுங்கள்.


அடுத்து உங்களது கணனியில் cmd ஆரம்பிக்கப்படும்.


அதிலே DEL /F /Q /A C:\\Users\\உங்கள் யூசர்நேம்\\பைல் இருக்கும் இடம் (லொகேஷன்)\\அழிக்க​ வேண்டிய​ பைலின் பெயர்.
இவ்வாறு டைப் செய்து என்டர் பட்டன்-ஐ அழுத்துங்கள். இப்போது குறித்த பைல் எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் டிலீட் செய்யப்பட்டு விடும். உதாரணமாக : DEL /F /Q /A C:\\Users\\Tech\\Desktop\\Test.txt

ஆகவே இந்த இலகுவான முறை மூலம் உங்களது கணனியில் குறிப்பிட்ட எதோ ஒரு காரணத்தினால் அழிக்க முடியாமல் இருக்கும் பைல்-ஐ அழித்து விட முடியும்.

விண்டோஸ் சீடீ-யில் இருக்கும் பைல்-களை பென்டிரைவ் ஒன்றிற்கு கோபி செய்து பூடபல் டிவைஸ் ஆக மாற்றுவது எப்படி?

பென் டிரைவ் ஒன்றை வெறும் கோப்புக்களை மட்டும் பரிமாரிக்கொல்வதட்கு பயன்படுத்திய காலம் மாறி தற்போது பென் டிரைவ் ஒன்றை எமது பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி கொண்டு இருக்கிறோம். இதற்கு சிறந்த உதாரணமாக எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்ட கீழுள்ள பதிவை குறிப்பிடலாம்.

பென்டிரைவ் ஒன்றை கணனிக்கான ரேம் ஆக பயன்படுத்துவது எப்படி?

அதே போல் எமது தளத்தில் ஏற்கனவே பென்டிரைவ் ஒன்றை பயன்படுத்தி கணனிக்கான விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவுவது எப்படி என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த  பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கை கிளிக் செய்து வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

பெண்டிரைவ் ஒன்றை பயன்படுத்தி கணனிக்கு விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவுவது எப்படி?


ஆகவே அதன் தொடர்ச்சியாக இன்றைய பதிவில் விண்டோஸ் சி.டீ ஒன்றில் இருக்கும் விண்டோஸ் இயங்குதளத்தை நேரடியாக பெண் டிரைவ் ஒன்றில் இருந்து நிறுவிக்கொள்ள பென் டிரைவ்-ஐ பூடபல் டிவைஸ் ஆக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.

விண்டோஸ் சீடீ-யை முற்றாக காபி பேஸ்ட் செய்து ஒரு பென் டிரைவ் ஒன்றை பூட்பல் டிவைஸ் ஆக மாற்ற  முடியாது. அதற்கு உங்களது கணனியில் சில வேலைகளை செய்ய வேண்டும். அதாவது கணனியின் CMD மூலமாக இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான விடயங்கள்

இயங்கும் நிலையில் உள்ள கணணி
விண்டோஸ் சீ.டீ/ டீ.வீ.டீ
பென் டிரைவ் குறைந்தது 8 GB இடமிருத்தல் வேண்டும்

செயன்முறை

உங்களது கணனியில் ஸ்டார்ட் மெனுவிற்கு சென்று CMD ஐ Run as Administator முறையில் ஆரம்பியுங்கள்.


இப்போது உங்களது கணனியில் CMD திறக்கப்படும். அதிலே diskpart என டைப் செய்து என்டர் பட்டன்-ஐ அழுத்துங்கள்.
அதனை தொடர்ந்து list disk என டைப் செய்து என்டர் பட்டன்-ஐ அழுத்துங்கள்.


இப்பொழுது உங்கள் பென் டிரைவ் இதில் காட்டும். பென் டிரைவ்-இன் GB கணக்கை வைத்து உங்களது பென் டிரைவ்-ஐ இணங்கண்டு கொள்ளுங்கள்.

உதாரணத்திற்கு disk 2 ஐ எடுப்போம்.

அடுத்து கீழே சிவப்பு நிறத்தில் குறித்து காட்டப்பட்டுள்ள கமாண்ட்-களை ஒவ்வொன்றாக டைப் செய்து என்டர் பட்டன்-ஐ அழுத்துங்கள்.


இப்போது -ஐ மூடிவிட்டு உங்களது விண்டோஸ் டீ வீ டீ-யை திறந்து அதிலே உள்ள பைல்-களை நேரடியாக பெண் டிரைவ்-இதுக்கு கோப்பி செய்யுங்கள். அவ்வளவு தான்..! இப்போது உங்களது பென் டிரைவ் பூடபல் டிவைஸ் ஆக மாறி விட்டது.

குறிப்பு

இந்த செயற்பாட்டை செய்தும் போது உங்களது பெண் டிரைவ்-இல் இருக்கும் தரவுகள் அளிக்கப்படும். ஆகவே இந்த செயற்பாட்டை செய்ய முன்னர்,உங்களது பென் டிரைவ்-இல் இருக்கும் முக்கியமான பைல்-களை கணனியில் கோபி செய்து கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு போனில் இருந்து அழிந்த போட்டோ, வீடியோ, மெசேஜ், காக்டெக்ட் நம்பர் போன்றவற்றை ரிகவர் செய்வது எப்படி?

ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் இருந்து அழிந்த பைல்-களை ரிகவர் செய்து கொள்வது என்பது பலபேருக்கு சிரமமான காரியமாகவே காணப்படுகிறது.

நமது அன்றாட வாழ்வில் முக்கியமான ஒரு பங்கை வகிக்கும் இந்த ஸ்மார்ட் போன்களிலேயே நாம், பல்வேறு தரவுகளை சேமித்து வைத்து இருக்கிறோம். இதில் அன்றாடம் நீங்கள் எடுத்து கொள்ளும் போட்டோ முதல் வங்கி கணக்கு கடவுச்சொல் வரை உள்ளடங்கும். இவ்வாறு நாம் எமது ஸ்மார்ட் போனில் சேமித்து வைக்கும் முக்கியமான பைல்-கள் ஏதேனும் குறிப்பிட்ட ஏதோ ஒரு காரணத்தினால் அழிந்து போக வாய்ப்பு உள்ளது.


ஆகவே இதை கருத்தில் கொண்டு எமது தளத்தில் ஏற்கனவே ஆன்ராயிடு போன்-களில் எப்படி 'ரீசைக்கில் பின்' ஒன்றை உருவாக்குவது என்ற பதிவை எழுதி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு போனில் 'ரீசைக்கில் பின்' உருவாக்குவது எப்படி?

ஆனால் மேலே குறிப்பிட்டபடி உங்களது போனிலே அழிந்த பைல்-களை ரிகவர் செய்யக்கூடிய முன்னேற்பாடு நடவடிக்கை எதுவுமே செயற்படுத்தி இல்லாத சந்தர்ப்பமொன்றில், உங்களது போனில் இருந்து அழிந்த போட்டோ-களை ரிகவர் செய்து கொள்ள உதவும் ஆன்ராயிடு செயலி ஒன்று பற்றியும் பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

ஆன்ராயிடு போன்/ மெமரி கார்ட்-இல் இருந்து அழிந்த பைல்-களை ரிகவர் செய்வது எப்படி?

ஆகவே இன்றைய பதிவிலும் ஆன்ராயிடு போனில் இருந்து அழிந்த போட்டோ, வீடியோ, காண்டேக்ட் லிஸ்ட் மட்டும் மெசேஜ்-களை ரிகவர் செய்து கொள்ள உதவும் மற்றுமொரு சூப்பரான செயலியை அறிமுகப்படுத்துகிறேன்.

ஆன்ராயிடு போனில் இருந்து அழிந்த பைல்-களை ரிகவர் செய்வது எப்படி?

முதலாவதாக கீலே தரப்பட்ட்டிருக்கும் ஆன்ராயிடு ரிகவர் செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து, ரிகவர்  செய்ய தேவையான பைல் டைப்-ஐ தெரிவு செய்யுங்கள்.


அடுத்து நீங்கள் ரிகவர் செய்ய நினைக்கும் பைல்-ஐ தெரிவு செய்யுங்கள்.


அடுத்து இந்த செயலியால் கேட்கப்படும் ஆன்ராயிடு ரூட் அனுமதியை வழங்குங்கள்.

உங்களது போன் இன்னும் ரூட் செய்யப்படவில்லை என்றால், ரூட் செய்வது எப்படி என்பதை இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

அவ்வளவு தான்..! சிறிது நேரத்தில் உங்களது போனில் இருந்து தவறுதலாக அழிந்த பைல்-கள் மீட்கப்பட்டுவிடும்.

ஆகவே மிக இலகுவாக ஆன்ராயிடு போனில் இருந்து அழிந்த பைல்-களை ரிகவர் செய்ய உதவும் இந்த அதிசக்தி வாய்ந்த ரிகவர் செயலியின் இலவச பதிப்பை கூகுள் ப்லே ஸ்டோரிலே பெற்றுக்கொள்ள முடியும்.

ஆனால் இலவச பதிப்பிலே குறிப்பிட்டளவான வசதிகள் மட்டுமே உண்டு. ஆகவே இந்த செயலியின் பனம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பை கீழே குறிப்பிட்டிருக்கும் முறை மூலம் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று, பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 46' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

இந்திய விலையில் வெறும் 99 ரூபாய்க்கு அறிமுகமாகி இருக்கும் Namotel ஸ்மார்ட் போன்

இந்திய நாட்டில் கடந்த சில மாதங்களாக மிகக்குறைந்த விலையில் அறிமுகமாகும் ஸ்மார்ட் போன் என்ற தலைப்பு பரவலாக பேசப்பட்ட ஒரு விடயமாகும். நம் அனைவருக்குமே தெரிந்தது போல பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ரிங்கிங் பெல் எனும் நிறுவனம் அறிமுகப்படுத்திய ப்ரீடம்-251 எனும் ஸ்மார்ட் போன் இந்திய விலையில் வெறும் 251 ரூபாய்க்கு அறிமுகமாகியது.

இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு பிரபல்ய இணையத்தளங்களிலும் காரசாரமான விடயங்கள் விவாதிக்கப்பட்டன. இது குறித்து எமது தளத்தில் எழுதப்பட்ட பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

251 ரூபாய் ரிங்கிங் பெல் ஸ்மார்ட் போன். உண்மையிலே இந்த ஸ்மார்ட் போன் ரிங் ஆகுமா?


இதை தொடர்ந்து சென்ற மாதத்தில் (ஏப்ரல்) Docoss எனும் நிறுவனத்தின் 888 ரூபாய்க்கு ஒரு ஸ்மார்ட் போன் அறிமுகமாகி இருந்தது. ஸ்மார்ட் போன் ஒன்றின் அனைத்து வசதிகளையும் கொண்ட Docoss X1 என்று பெயரிடப்பட்ட 888 ரூபாய் ஸ்மார்ட் போன் இந்தியா முழுவதும், எஸ்.எம்.எஸ் மூலம் தனது முன்பதிவுகளை ஆரம்பித்து இருந்தது. இது குறித்து எமது தளத்தில் எழுதப்பட்ட பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

இந்திய விலையில் வெறும் 888 ரூபாய்க்கு அறிமுகமாகி இருக்கும் Docoss X1 ஸ்மார்ட் போன்

ஆனால் இதற்கேல்லாம் மூத்த சகோதரனாக தற்போது வெறும் 99 ரூபாய்க்கு ஒரு ஸ்மார்ட் போன் அறிமுகமாகி இருக்கிறது.  Namotel எனப்படும் பெங்களூர்-இல் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்று இந்திய பெறுமதியில் வெறும் 99 ரூபாய்க்கு Namotel Acche Din எனப்படும் ஸ்மார்ட் போன் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

ஆன்ராயிடு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட் போன் கீலே குறிப்பிட்டுள்ள வசதிகளை கொண்டுள்ளது.
4 இன்ச் டிஸ்ப்ளே
ஆன்ராயிடு 5.1 லொலிபொப் இயங்குதளம்.
1.3GHz க்வாட் கோர் ப்ரோசெஸ்சர்
1 GB ரேம்
இரண்டு சிம் வசதி (3G)
VGA முன்பக்க கேமரா
2MP பின்பக்க கேமரா

இந்த ஸ்மார்ட் போன் பற்றி குறித்த நிறுவனம் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து கீழே..

"இந்த ஸ்மார்ட் போனை நாங்கள் உருவாக்கியது இந்தியா மீதான அன்பை காட்டுவதற்காக இந்தியாவிலே தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் போன். மேலும் இந்த ஸ்மார்ட் போனை ஆதர் கார்ட் வைத்துள்ள இந்திய மக்கள் மட்டுமே வாங்க முடியும்"

ஆகவே நீங்களும் இந்த 99 ரூபாய் ஸ்மார்ட் போனை வாங்க வேண்டுமென்றால் இங்கே கிளிக் செய்து குறித்த நிறுவனத்தின் அதிகாரபூர்வ தளத்தில் சென்று முன்பதிவுகளை செய்து கொள்ள முடியும்.

அத்துடன் இந்த ஸ்மார்ட் போனை டிலிவரி செய்யும் போது பணத்தை செலுத்துவதற்கான வசதியையும் ஏற்படுத்தி தந்து இருக்கிறது குறித்த நிறுவனம்.

மேலும் இந்த ஸ்மார்ட் போனின் விலை ஆரம்பத்தில் 2,999 ரூபாய் ஆக இருந்த போதிலும் தற்போது வெறும் 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக குறித்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Kategori

Kategori