நம் அனைவருக்குமே தெரிந்தது போல, இந்த வருடமும் எமது இஸ்லாமிய நண்பர்கள் அவர்களுடைய புனித மாதாமாக கருதப்படும் ரமழான் மாதத்தை அடைந்து இருக்கிறார்கள். ரமழான் மாதம் என்பது முஸ்லிம் கலண்டரில் வரும் ஒரு புனிதமான மாதம் ஆகும். இதில் முஸ்லிம்கள் தீமைகளை விட்டும் ஒதுங்கி நன்மைகள் பக்கம் திரும்பி இருப்பார்கள். 29 அல்லது 30 நாட்கள் நோன்பு நோற்று இறை வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு நன்மைகளை அதிகளவில் சேர்க்கும் மாதம் இதுவாகும்.
மேலும் நோன்பு நோற்கும் நேரங்களில் புனித குர்ஆனை ஓதுவதிலும், நேரத்திற்கு தொழுவதிலும், திக்ருகள் செய்வதிலும் ஈடுபட்டு இருப்பார்கள். ஆகவே இவ்வாறு நன்மையான காரியங்களை செய்யும் இந்த காலத்தில் சில இளைஞர்கள் தமது ஸ்மார்ட் போனிலே வீணாக காலத்தை வீணடிப்பதை தடுக்கும் வகையில் இன்று நோன்புடன் சம்மந்தப்பட்ட ஆன்ராயிடு மற்றும் ஐபோன் செயலி ஒன்றை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.
இந்த செயலியை பாவித்து சில நண்மையான காரியங்களை செய்து கொள்ள முடியுமாகும் அதே வேலை பயணங்களில் ஈடுபடிவோறுக்கும் இது பயனுள்ளதாய் அமையும்.
ரமழான் 2016 செயலியின் மூலம் என்ன பயன்களை பெற முடியும்?
முதலாவதாக கீலே தறப்பட்டிருக்கும் ரமழான் மாதத்திற்கான செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.இந்த செயலியிலுள்ள முக்கிய சில அம்சங்களைப்பற்றி பார்ப்போம்.
புனித குர்ஆனை தமிழ் உற்பட இன்னும் 39 மொழிகளின் மொழிப்பெயர்ப்புடன் பார்க்கலாம்.
புனித குர்ஆனில் உள்ள வசனங்களை அழகிய படங்களாக மாற்றி நண்பர்களுக்கிடையே பகிரலாம்.
ஆகவே நோன்பு காலங்களில் மிகவும் பயனுள்ள ஒரு செயலியாக காணப்படும் இந்த ரமழான் 2016 செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று உங்களது ஸ்மார்ட் போனுக்கு தரவிறக்கி கொள்ள முடியும்.
ஆன்ராயிடு செயலி
ஐபோன் செயலி
மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் வசதிகள் தவிர மேலும் பல நன்மையான விடயங்களை இந்த ரமழான் 2016 செயலியின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.



