ஆன்ராயிடு செயலிகளை க்ளோன் செய்து இரண்டாக உபயோகிப்பது எப்படி?

ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் களுடன் சம்மந்தப்பட்ட மற்றுமொரு சுவாரஸ்யமான பதிவொன்றுடன் இன்று உங்களை சந்திக்கிறேன். ஒரு சில தினங்களுக்கு முன்னர், எமது தளத்தில் நீங்கள் பணம் செலுத்தி வாங்கிய அல்லது உங்களுக்கு வேறு ஏதேனும் வழிகளில் கிடைத்த சிறப்பு ஆன்ராயிடு செயலிகளை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களையும் குறித்த செயலியை பயன்படுத்த வைப்பது எப்படி என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன்.

இந்த முறையை மூலம் நீங்கள் பணம் செலுத்தி வாங்கிய ஒரு செயலியை உங்களது நண்பரும் பணம் செலுத்தி வாங்க தேவையில்லை. நீங்கள் பணம் செலுத்தி வாங்கிய செயலியை உங்களது நண்பரும் இலவசமாக பயன்படுத்த முடியும். இந்த உபாயம் குறித்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

உங்களது போனில் நிறுவி இருக்கும் செயலியை உங்களுடைய நண்பரின் போனுக்கு அனுப்புவது எப்படி?


ஆகவே இன்றும் ஆன்ராயிடு செயலிகளுடன் சம்மந்தப்பட்ட ஒரு விடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன். அதாவது ஸ்மார்ட் போனை உபயோகிக்கும் அனைவருக்குமே இருக்கும் ஒரு பொதுவான ஒரு தேவை தான், ஒரே ஸ்மார்ட் போனில் தங்களுடைய ஆன்லைன் கணக்குகளை 2 ஆக உபயோகிப்பது. அதாவது ஓரே ஸ்மார்ட் போனில் 2 பேஸ்புக் கணக்குகள் பயன்படுத்துவது, 2 வாட்ஸ்அப் கணக்குகள் பயன்படுத்துவது, அல்லது 2 வைபர் கணக்குகள் பயன்படுத்துவது அல்லது வேறு ஏதேனும் ஒரு செயலியை இரண்டாக பயன்படுத்த வேண்டும் என்பதாகும்.

சாதாரணமாக எம்முடைய ஆன்ராயிடு போனில் இந்த தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியாது. அதாவது குறிப்பிட்ட ஓரே செயலியை ஒன்றுக்கு மேற்பட்ட முறை உபயோகிக்க முடியாது. ஆனால் இனி அந்த கவலை வேண்டாம். ஏனெனில் இன்று நான் உங்களுக்கு செயலிகளை பிரதி செய்து க்ளோன் அப்ஸ் ஒன்றை உங்களுக்கு அறிமுகப்படுத்த போகிறேன்.

ஆன்ராயிடு போனில் ஒரே செயலியை இரண்டாக உபயோகிப்பது எப்படி?

முதலாவதாக கீலே தறபட்டிருக்கும் ஆன்ராயிடு க்ளோன் செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்தால், க்ளோன் செய்ய முடியுமான அனைத்து செயலிகளும் அங்கே பட்டியலிடப்பட்டு காட்டப்படும்.



அதிலே நீங்கள் இரண்டாக உபயோகிக்க நினைக்கும் செயலியை தெரிவு செய்து சரி அடையாளத்தை கிளிக் செய்யுங்கள்.



அவ்வளவு தான்...! இப்போது குறித்த செயலியை பிரதி செய்தும் செயட்பாடு நடைபெற்றுக்கொண்டு இருக்கும். குறித்த செயலி க்ளோன் செய்யப்பட்டதும் அதை உங்களது போனில் நிறுவுங்கள்.

 

ஆகவே மிக இலகுவாக உங்களுக்கு தேவையான செயலியை ஆன்ராயிடு போனில் இரண்டாக பயன்படுத்த உதவும் இந்த செயலிகளை க்ளோன் செய்யும் அப்-ஐ இங்கே கிளிக் செய்து கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்க முடியும். ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பிலே குறிப்பிட்டளவான வசதிகள் மட்டுமே காணப்படுவதோடு விளம்பரங்களும் காணப்படுகின்றன. ஆகவே இந்த செயலியின் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய பதிப்பை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது போனுக்கு இலவசமாக பெற முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் 'பதிவு 64' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.