ஒரு சில நாட்களுக்கு முன்னர் எமது தளத்தில் பேஸ்புக் மெசஞ்சர் செயலி மூலம் கூடைப்பந்து விளையாடுவது எப்படி என்பது பற்றி பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
பேஸ்புக் மெசஞ்சர்-இல் கூடைப்பந்து கேம் விளையாடுவது எப்படி?
ஆகவே இன்றைய பதிவிலும் இதே மாதிரியான பேஸ்புக் மெசஞ்சர் விளையாட்டை பற்றி பார்ப்போம். அதாவது பேஸ்புக் மெசஞ்சர் மூலம் உங்களது குறித்த நண்பர் ஒருவருடன் கால்பந்து விளையாடுவது எப்படி என்று பார்ப்போம். ஒரே மாதிரியான கேம்ஸ்-களை விளையாடி விளையாடி அலுப்பாகி போனவர்களுக்கு இது ஒரு புது அனுபவமாக இருக்கும்.
பேஸ்புக் மெசஞ்சர்-இல் கால்பந்து விளையாடுவது எப்படி?
முதலாவதாக கீலே தறபட்டிருக்கும் ஆன்ராயிடு மற்றும் ஐபோணுக்கனாக மெசஞ்சர் செயலியின் புதிய பதிப்பை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.இப்போது உங்களது மெசஞ்சர் செயலியில் குறித்த நண்பர் ஒருவரின் செட்-ஐ ஆரம்பியுங்கள்.
அங்கே காணப்படும் எமோஜி-களில் கால்பந்து எமோஜி-யை தெரிவு செய்து உங்களது நண்பருக்கு அனுப்புங்கள்.
அவ்வளவு தான்..! இப்போது உங்களால் மெசஞ்சர் மூலம் கால்பந்து விளையாடுவதட்கான ஆப்ஷன் கிடைக்கும்.
ஆகவே மிக இலகுவாக ஆன்ராயிடு மற்றும் ஐபோன் மெசஞ்சர் செயலி மூலம் கால்பந்து விளையாட உதவும் பேஸ்புக் மெசஞ்சர்- இன் புதிய பதிப்பை கீழுள்ள லிங்க்கில் சென்று உங்களது போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.
பேஸ்புக் மெசஞ்சர் - ஆன்ராயிடு
பேஸ்புக் மெசஞ்சர் - ஐபோன்
இது மாதிரியான புதுப்புது தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள தொடர்ந்தும் எமது தளத்துடன் இணைந்து இருங்கள்.


