தமது ஸ்மார்ட் போனில் மட்டுமல்லாது அதற்கான புதிய இயங்குதள பதிப்பிலும் பல்வேறு பயனுள்ள வசதிகளை ஆன்ராயிடு மற்றும் ஐபோன் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் களுக்கான அடுத்த இயங்குதளமான ஆன்ராயிடு N 7.0 இயங்குதளத்தில் அறிமுகமாக உள்ள சிறந்த பல வசதிகள் பற்றி எமது தளத்தில் ஏற்கனவே பதிவொன்று எழுதப்பட்டது. அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கை கிளிக் செய்து வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
ஆண்ராயிடு N 7.0 இயங்குதளத்தின் மிகச்சிறந்த 9 வசதிகள்
இதே போல ஆப்பிள் ஐபோன்-இல் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட வசதி தான் இந்த லைவ் போட்டோ. ஆப்பிள் ஐபோன் 6S-இல் தான் இந்த வசதி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த லைவ் போட்டோ வசதி மூலம் GIF முறையில் சிறிய வீடியோ ஒன்றை போல் உங்களது படங்களை மாற்றிக்கொள்ள முடியும். ஐபோன் பாவனையாளர்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்ட இந்த வசதி தற்போது ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியிலும் பெற்றுக்கொள்ள கூடியதாய் உள்ளது.
ஆப்பிளின் லைவ் பொடோஸ் வசதியை ஆன்றாயிடில் பெறுவது எப்படி?
முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் ஆன்ராயிடு லைவ் கேமரா செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பியுங்கள். இப்போது உங்களது போன் கேமரா தானாக திறக்கப்படும்.
இப்போது ஐபோனில் இருப்பது போல லைவ் போட்டோஸ் வசதியை இந்த செயலியில் பார்ப்பீர்கள். அடுத்து மேலே அம்புக்குறியால் காட்டப்பட்டிருக்கும் இடத்தை கிளிக் செய்து உங்களது விருப்பம் போல லைவ் போட்டோகளை படம் பிடித்து கொள்ள முடியும்.
நீங்கள் லைவ் ஆக படம் பிடித்த போட்டோகளை மேலே படத்தில் அம்புக்குறியால் காட்டப்பட்டிருக்கும் ஐகான்-ஐ கிளிக் செய்து பார்வையிட முடியும்.
ஆகவே மிக இலகுவாக ஐபோனில் போல் லைவ் போட்டோ களை ஆன்ராயிடு போனில் இருந்து படம் பிடிக்க உதவும் இந்த லைவ் கேமரா செயலியை இங்கே கிளிக் செய்து உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.
அவ்வளவு தான்..! இப்போது ஐபோன் வைத்து இருக்கும் உங்களது நண்பர்களையும் ஆன்ராயிடு லைவ் போட்டோஸ் மூலம் ஆச்சிரியப்படுத்த முடியும்.


