ஆன்ராயிடு போனில் அழைப்பவர் பெயரை அறிவிக்க வைப்பது எப்படி?

ஸ்மார்ட் போன் களை வைத்திருக்கும் நாம் தினமும் பல்வேறு தேவைகளுக்காக எமது ஸ்மார்ட் போனை பயபண்டுத்தி வருகிறோம். ஸ்மார்ட் போன் ஒன்றை வைத்திருப்பதன் முக்கிய காரணமாக காணப்படும் அழைப்புக்களை மேற்கொள்ளும் வசதியுடன் சம்மந்தப்பட்ட மற்றுமொரு விடயத்தை பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம். ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் இருக்கும் பல பயனுள்ள செயலிகளை எப்படி இயக்குவது என்று பார்த்திருக்கிறோம்.ஆகவே இன்றும் அவ்வாறு ஒரு செயலியை எப்படி செயல்படுத்துவது என்று பார்ப்போம்.

ஸ்மார்ட் போன் ஒன்றை வைத்துக்கொண்டு காலத்தையும் நேரத்தையும் வீண் அடிக்கும் சிலருக்கிடையே காலத்தை சேமிப்பதற்கும் சிலர் பார்த்துக்கொண்டிருக்கின்றர். ஆகவே இவ்வாறு தமது நேரத்தை சேமிக்க நினைக்கும் ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கான ஒரு பதிவு பற்றி இன்று பார்ப்போம்.


நீங்கள் ஒரு முக்கிய​ வேலையில் ஈடுபட்டிருக்கும் போது உங்களுக்கு வரும் அழைப்பு யாரிடம் இருந்து வருகிறது என்பது பற்றி அறிந்து கொள்வதற்கு போனை பார்க்காமல் போனில் இருந்து வரும் அறிவித்தலை வைத்து அறிந்து அறிந்து கொள்ள முடியும்.

சில​ வேலைகளில் நாம் அட்டன்ட் பண்ண விரும்பாத அழைப்புகள் வரும் போது அது யார் என்று தெறியாமல் போனை பார்த்துவிட்டு வைத்து விடுவோம்.

ஆனால் இனி அவ்வாரான சந்தர்ப்பங்களில் மேலும் ஸ்மார்ட் ஆக செயற்படும் வகையில், அழைப்பு ஒன்று வரும் போது உங்களுக்கு பெயர் அறிவிக்கப்படும். ஆகவே போனை எடுத்து பார்த்துவிட்டு வைக்க வேண்டிய​ தேவை இருக்காது. எமக்கு வரும் அழைப்புகள் மாத்திரமின்றி எமக்கு வருகின்ற குருங்செய்திகளை அனுப்புவரின் பெயரையும் அறிந்து கொள்ள முடியும். அதுமட்டுமில்லாது உங்களுக்கு வரும் குருங்செய்தியில் உள்ள தகவலையும் வாசிக்க​ வைக்க முடியும்.

ஆன்ராயிடில் அழைப்பாளர் பெயரை அறிவிக்க​ வைப்பது எப்படி?

முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் அழைப்பவர் பெயரை அறிவிக்கும் செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பியுங்கள்.


இப்போது உங்களது தேவைக்கு ஏற்ப அழைப்பவர் பெயரை அறிவிப்பதற்கான செட்டிங்க்ஸ்-களை செய்து கொள்ள முடியும்.


மேலும் குறித்த நபரின் பெயரை எவ்வளவு வேகத்தில் உச்சரிக்க வேண்டும், எத்தனை தடவைகள் உச்சரிக்க வேண்டும் என்பது பற்றிய செட்டிங்க்ஸ்-களை கூட செய்து கொள்ள முடியும்.


மிக இலகுவாக உங்களது போனுக்கு அழைப்பவர்களின் பெயரை அறிவிக்க உதவும் இந்த ஆன்ராயிடு செயலியை இங்கே கிளிக் செய்து கூகுள் ப்லே ஸ்டோரில் இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

ஆகவே ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்களுக்கு அறிமுகாமாகி இருக்கும் இந்த அழைப்பவர் பெயரை அறிவிக்கும் இந்த செயலின் பயனை நீங்களும் பெற்றுக்கொள்ளுங்கள்.