இவ்வாறு தினமும் பல்வேறு இணையத்தளங்களை பயன்படுத்தும் போது அதிகளவான மொபைல் டேட்டா வீண்டகிக்கப்படுவதை அவதானித்து இருப்பீர்கள். ஆகவே இன்றைய பதிவில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் இணையத்தளங்களில் இருக்கும் பதிவுகளை இன்டர்நெட் இல்லாமல் வாசிப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
ஒரு சில நாட்களுக்கு முன்னர், எமது தளத்தில் கூகுள் மேப்-ஐ இன்டர்நெட் இல்லாமல் பயன்படுத்துவது எப்படி என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீலே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கை கிளிக் செய்து வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
இன்டர்நெட் இல்லாத சந்தர்ப்பத்திலும் கூகுள் மேப் பயன்படுத்துவது எப்படி?
ஆகவே இன்றைய பதிவில் எமது ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் மூலம் குறித்த ஒரு இணையத்தளத்தை இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.
குறிப்பு
இந்த முறை மூலம் நீங்கள் குறித்த தளத்தை பயன்படுத்தும் போது, அந்த தளத்தில் இருக்கும் பதிவுகளில் தரப்பட்டிருக்கும் டவுன்லோட் லிங்க் அல்லது வேறு ஏதேனும் பதிவுக்கான லிங்க் காணப்பட்டால், அவை வேலை செய்ய மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்தபோதிலும் இந்த பதிவை எழுதுவதற்கு காரணம், இன்டர்நெட் மெதுவாக உள்ள இணைப்புக்களை பயன்படுத்துவோருக்கு இந்த உபாயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இன்டர்நெட் இல்லாமல் குறித்த வெப்சைட்-ஐ பயன்படுத்துவது எப்படி?
முதலாவதாக கீலே தறப்பட்டிருக்கும் இன்டர்நெட் இல்லாமல் வெப்சைட்-களை பயன்படுத்த உதவும் ஆன்றாயிடு செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து அதில் + என காட்டப்பட்டிருக்கும் பட்டனை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து அதிலே உங்களுக்கு தேவையான வெப்சைட் உடைய லின்க்கை டைப் செய்து கீழே பச்சை நிறத்தில் இருக்கும் பட்டனை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான்..! இப்போது நீங்கள் வழங்கிய வெப்சைட் ஆப்லைன் பார்வைக்காக உங்களது போனில் டவுன்லோட் ஆக ஆரம்பிக்கும்.
ஆகவே மிக இலகுவாக ஆப்லைன் பார்வைக்காக உங்களுக்கு பிடித்த வெப்சைட்-களை டவுன்லோட் செய்ய உதவும் ஆன்ராயிடு ஆப்லைன் உலாவியை இங்கே கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.
குறித்த தளத்தில் உள்ள லிங்க்-களை கிளிக் செய்து வேறு தளங்கள்/ டவுன்லோட்-களை செய்து கொள்ள முடியாத போதிலும் பல சந்தர்ப்பங்களில் இந்த எமக்கு பிடித்த தளங்களை இன்டர்நெட் இல்லாமலேயே பாத்துக்கொள்ள இந்த செயலி மிகவும் உதவியாக உள்ளது.



