அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
வாட்ஸ்அப்இ-ல் வரும் போட்டோ வீடியோகள் போன் கேலரி-யில் தோன்றாமல் தடுப்பது எப்படி?
நம் அனைவருக்குமே தெரிந்தது போல, வாட்ஸ்அப்-இல் எமக்கு வரும் போட்டோகள் எமக்கு தெரியாமலேயே போன் கேலரி-யில் சேமிக்கப்பட்டு விடும். இவ்வாறு வாட்ஸ்அப் போட்டோகள் கேலரி-யில் சேமிக்கப்படுவதால் எமக்கு பல்வேறு பிரச்சினைகள் தோன்றும் சந்தர்ப்பங்கள் உண்டு. அதாவது எமது போன் மெமரி-யில் இடம் தேவையில்லாமல் வீணடிக்கப்படுவது, வாட்ஸ்அப் குழுக்களில் வரும் தேவையில்லாத போட்டோகள் எமது போனில் சேமிக்கப்படுவது என்று பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும்.
ஆகவே உங்களுக்கு வாட்ஸ்அப்-இல் வரும் போட்டோகள் போன் கேலரி-யில் சேமிக்கப்பட வேண்டும், ஆனால் தேவையான போட்டோகள் மட்டும் தான் சேமிக்கப்பட வேண்டும் என்ற தேவை உள்ளதா? அப்படிஎன்றால் இந்த பதிவு உங்களுக்கானது..!
அதாவது உங்களுக்கு வாட்ஸ்அப்-இல் வரும் போட்டோகளில் தேவையான போட்டோகளை மட்டும் போன் கேலரியில் வைத்து விட்டு மற்றைய தேவையில்லாத அனைத்து போட்டோகளையும் ஒரே கிளிக்-இல் அழித்து விட முடியும்.
ஆகவே இனி வாட்ஸ்அப்-இல் இருந்து வந்து கேலரி-யில் சேமிக்கப்பட்டு இருக்கும் போட்டோகளில் தேவையானது எது தேவையில்லாது எது என்று தனியாக தேடிக்கொண்டு இருக்க தேவையில்லை.
வாட்ஸ்அப்-இல் வரும் தேவையில்லாத போட்டோ களை போன் கேலரி-யில் இருந்து நீக்குவது எப்படி?
முதலாவதாக தேவையில்லாத வாட்ஸ்அப் போட்டோ-களை இனம் காணக்கூடிய செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து போன் கேலரி-யில் இருக்கும் போட்டோகளை ஸ்கேன் செய்ய அனுமதி அளியுங்கள்.
இப்போது உங்களது வாட்ஸ்அப்-இற்கு வந்த அனைத்து போட்டோ, வீடியோ களும் ஸ்கேன் செய்யப்பட்டு அவற்றிலே தேவையில்லாத பைல்-கள் மட்டும் பட்டியலிடப்பட்டு காட்டப்படும்.
பட்டியலிடப்பட்டு காட்டப்பட்டிருப்பதில் உங்களது வாட்ஸ்அப்-இற்கு வந்த கவிதை போட்டோகள், பொழுதுபோக்கு வீடியோகள் மற்றும் தேவையில்லாத ஸ்க்ரீன் ஷாட்-கள் என்று பெரும்பாலான தேவையில்லாத பைல்-கள் காணப்படும். இப்போது இவை அனைத்தையும் ஒரே கிளிக்-இல் அழித்து விட முடியும்.
ஆகவே மிக இலகுவாக வாட்ஸ்அப்-இல் வரும் தேவையில்லாத போட்டோகளை இனம்கண்டு அழிக்க உதவும் இந்த செயலியை இங்கே கிளிக் செய்து கூகுள் ப்லே ஸ்டோரில் இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.
ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் தமது பெரும்பாலான நேரத்தை வாட்ஸ்அப்-இல் தான் செலவிடுகின்றனர். ஆகவே வாட்ஸ்அப் மூலம் வந்து குவியும் தேவையில்லாத பைல்-களை ஒரே கிளிக்-இல் அழிக்க உதவும் இந்த ஸ்மார்ட் செயலி எமது போனுக்கு கட்டாயம் தேவையான ஒன்றாகும்.


