இன்றைய பதிவில் பெண் டிரைவ்-களுடன் சம்மந்தப்பட்ட ஒரு விடயத்தை பார்ப்போம். சாதாரணமாக பெண் டிரைவ் என்றால் குறிப்பிட்ட பைல்-களை சேமித்து வைக்கவும் அதே போல் பைல்-களை ஒரு கணனியில் இருந்து இன்னொரு கணனிக்கு பிரதி எடுக்கவுமே பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால் இவை தவிர இன்னும் பல பயனுள்ள வேலைகளை பெண் டிரைவ் ஒன்றை பயன்படுத்தி செய்து கொள்ள முடியும். எமது தளத்தில் கூட ஏற்கனவே பெண் டிரைவ் ஒன்றை கணனியின் ரேம் ஆக உபயோகித்து கணனியின் வேகத்தை அதிகரித்து கொள்வது எப்படி என்று பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
உங்கள் பென்டிரைவ்-ஐ ரேம் ஆக பாவித்து, கம்ப்யூட்டரின் வேகத்தை அதிகரிப்பது எப்படி?
ஆகவே இன்றைய பதிவில் பெண் டிரைவ் ஒன்றை பயன்படுத்தி உங்களது கணணியை எப்படி லாக் செய்வது என்று பார்ப்போம். சாதாரணமாக கணணியை லாக் செய்ய கடவுச்சொல் ஒன்றையே நாம் உபயோகிப்போம். அப்படியில்லாமல் சற்று வித்தியாசமாக பெண் டிரைவ் ஒன்றை பயன்படுத்தி கணணியை எப்படி லாக் செய்வது என்று பார்ப்போம்.
இந்த வேலையை மிக இலகுவாக செய்து முடிக்க உதவுகிறது கீழ்வரும் PREDATOR எனப்படும் விண்டோஸ் கணனிகளுக்கான சிறப்பு மென்பொருள்.
இந்த மென்பொருளை தரவிறக்கி உங்களது கணனியில் நிறுவுங்கள்.
அடுத்து உங்களது பெண் டிரைவ்-ஐ கணனியில் இணைத்து கொள்ளுங்கள்.
அடுத்து இந்த மென்பொருளை கணனியில் ஆரம்பித்து, உங்களுக்கு தேவையான கடவுச்சொல் ஒன்றை வழங்கி, குறித்த பெண் டிரைவ்-ஐ தெரிவு செய்யுங்கள்.
அவ்வளவு தான்.. இந்த மென்பொருளை உங்களது கணனியில் ஆரம்பித்து விடுங்கள். இப்போது உங்களது கணணி பெண் டிரைவ் உடன் குறித்த மென்பொருள் மூலம் பாதுகாக்கப்பட்டு விட்டது. இப்போது நீங்கள் உங்களது பெண் டிரைவ்-ஐ கணனியில் இருந்து நீக்கினால், கணணி தானாக லாக் ஆகி விடும்.
மறுபடியும் கணணியை அன்லாக் செய்ய வேண்டும் என்றால் குறித்த பெண் டிரைவ்-ஐ கணனியில் இணைத்து நீங்கள் ஏற்கனவே வழங்கிய கடவுச்சொல்லை வழங்குங்கள்.
இந்த அருமையான மென்பொருளை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.
கணணியை பெண் டிரைவ் மூலம் லாக் செய்யும் மென்பொருள்.
குறிப்பு
மேலே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் இந்த மென்பொருளின் 10 நாட்களுக்கான ட்ரைல் பதிப்பையே தரவிறக்கி கொள்ள முடியும்.
கவலை வேண்டாம்...எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்ட ட்ரைல் பதிப்புக்களை வாழ்நாள் முழுவதும் எப்படி இலவசமாக உபயோகிப்பது என்ற பதிவை கீழ் வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து கொள்ள முடியும்.
ட்ரைல் மென்பொருட்களை வாழ்நாள் முழுவதும் இலவசமாக உபயோகிப்பது எப்படி?
எமது பயனுள்ளது என்று நினைத்தால், உங்களது நண்பர்களுடனும் சமூக வலைத்தளங்களின் ஊடக பகிர்ந்து கொள்ளுங்கள்.


