போனில் இருக்கும் அப்ஸ் அல்லது வேறு யாராவது உங்களது போன் கேமராவை ஹேக் செய்ய முடியாமல் தடுப்பது எப்படி?

இன்று எமது பாவனைக்காக அறிமுகமாகும் ஸ்மார்ட் போன் கள் பல்வேறு பயனுள்ள விடயங்களை எமக்கு தருகின்ற போதிலும் ஒரு சில ஆபத்தான விளைவுகளையும் ஏட்படுத்துகின்றன. எமது கைகளில் தவழும் ஸ்மார்ட் போன் கள் மூலம் எமது பெரும்பாலான வேலைகளை மிக இலகுவாக செய்து கொள்ள முடியுமாக உள்ளது. ஸ்மார்ட் போன் ஒன்றை எவ்வாறெல்லாம் பயன்படுத்த முடியும் என்று எமது தளத்தில் பல்வேறு பதிவுகள் ஏற்கனவே எழுதப்பட்டு உள்ளன.

ஆகவே ஒவ்வொரு தேவைக்கும் என்று அறிமுகமாகும் புது விதமான செயலிகள் மூலம் எமது தேவைகளை ஸ்மார்ட் ஆக செய்து கொள்ள கூடியதாய் உள்ளது.


ஆனால் எமது தேவையை இலகுபடுத்துவதட்கு என்று அறிமுகமாகும் ஒரு சில ஸ்மார்ட் போன் செயலிகள் எமக்கு ஆபத்தை ஏட்படுத்துவதாகவே அமைந்துள்ளது. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்ட பதிவான ஒருவருடைய போன் கேமரா வை அவருக்கே தெரியாமல் திறந்து அங்கே நடப்பவற்றை பார்ப்பதும் கேட்பதும் எப்படி என்ற பதிவை கூறலாம். இந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

ஒருவருடைய போன் கேமராவை அவருக்கே தெரியாமல் திறந்து அங்கே நடப்பதை பார்ப்பது எப்படி?

 இவ்வாறு எமக்கே தெரியாமல் எமது போன் கேமராவை ஒரு ஸ்மார்ட் போன் செயலிகள் வேவு பார்க்கின்றன. அதே போல் ஒரு சில செயலிகளை நாம் எமது போனில் நிறுவும் போதே குறித்த செயலியின் உடன்படிக்கை அறிக்கையில் குறித்த செயலி எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எங்களது போன் கேமரா வை பயன்படுத்துவதட்கு உரிமை உண்டு என தெரிவிக்கப்பட்டு இருக்கும். இதை பெரும்பாலும் நாம் அவதானிப்பதில்லை.

ஆகவே இன்றைய பதிவில் எமது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் எமக்கே தெரியாமல் எமது போன் கேமரா வை பயன்படுத்தி கொண்டு இருக்கும் செயலிகளை இனம் கண்டு எமது அந்தரங்க விடயங்கள் திருடப்படுவதை தடுப்பது எப்படி என்று பார்ப்போம்.

எமது போன் கேமராவை ஹேக் செய்ய முடியாமல் தடுப்பது எப்படி?

முதலாவதாக கீலே தறபட்டிருக்கும் கேமரா ப்ளாக் செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து ப்ளாக் என்பதை கிளிக் செய்யுங்கள்.


அடுத்து தொன்றும் திரையில் ஆக்டிவ் என்பதை கிளிக் செய்யுங்கள்.


அவ்வளவு தான்..! இப்போது உங்களது கேமராவை உங்களுக்கு தெரியாமல் யாரும் ஹேக் செய்து விட முடியாது. அதே போல் உங்களது போனில் இருக்கும் செயலிகளில் எந்த எந்த செயலிகள்  உங்களுக்கே தெரியாமல் உங்களது போன் கேமராவை வேவு பார்த்து கொண்டிருக்கிறது என்பதை கூட செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று பார்க்க முடியும்.


ஆகவே மிக இலகுவாக எமது ஆன்ராயிடு போன் கேமராவை யாரும் ஹேக் செய்ய முடியாதபடி பாதுகாக்க உதவும் இந்த செயலியை இங்கே கிளிக் செய்து கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம். ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பிலே அதிகளவான விளம்பரங்கள் காணப்படுகின்றன. அதனால் இந்த செயலியின் விளம்பரம் நீக்கப்பட்ட பதிப்பை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது போனுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் 'பதிவு 66' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.