தனிப்பட்ட போட்டோ வீடியோ, செயலிகள் என்று அனைத்தும் லாக் செய்யக்கூடிய ஆன்ராயிடு அப்ஸ்

ஸ்மார்ட் போன் தான் எமது இரகசிய லாக்கர் என்று கூறும் அளவிட்கு இன்று எம் மத்தியில் ஸ்மார்ட் போன் கள் பிரபல்யமடைந்து காணப்படுகின்றன. எம்முடைய ஸ்மார்ட் போனில்  போட்டோகள் முதல் வங்கி கணக்கு கடவுச்சொற்கள் வரை எமக்கு தேவையான அனைத்து முக்கியமான விடயங்களையும் சேமித்து வைத்து இருப்போம்.

ஒரு சில நாட்களுக்கு முன்னர் எமது தளத்தில் ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் இருந்தபடியே எம்முடைய அனைத்து ஆன்லைன் கணக்குகளினதும் கடவுச்சொற்களை மிகப்பாதுகாப்பான முறையில் கையாள உதவும் ஒரு சூப்பரானா லாக்கர் செயலி பற்றி பதிவொன்று எழுதி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அனைத்து ஆன்லைன் கடவுச்சொற்களையும் ஒரே செயலியில் பாதுகாப்பாக வைப்பது எப்படி?


ஆகவே இன்றைய பதிவிலும் எமது ஸ்மார்ட் போனில் நாம் சேமித்து வைத்து இருக்கும் தனிப்பட்ட போட்டோகள், வீடியோ அல்லது முக்கியமான செயலிகள் என்று எமது ஸ்மார்ட் போனில் காணப்படும் அந்தரங்க விடயங்களை மறைக்க கூடிய ஒரு சூப்பரான செயலியை பற்றி பார்ப்போம்.

அதற்கு முன்னர், எமது தளத்தில் எழுதப்பட்ட ஆன்ராயிடு மற்றும் ஐபோனில் எந்த விதமான செயலிகளையும் பயன்படுத்தாமல் போட்டோ வீடியோ என்று அனைத்து தனிப்பட்ட விடயங்களையும் எந்த விதமான செயலிகளையும் பயன்படுத்தாமல் மறைப்பது எப்படி என்ற பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லிங்க்கை கிளிக் செய்து வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு மற்றும் ஐபோனில் இருக்கும் போட்டோகளை எந்தவிதமான செயலிகளையும் பயன்படுத்தாமல் மறைப்பது எப்படி?

ஆகவே இன்று எமது ஆன்ராயிடு போனில் இருக்கும் தனிப்பட்ட போட்டோ, வீடியோ, செயலிகள் என்று அனைத்தையும் லாக் செய்யக்கூடிய ஒரு செயலி பற்றி பார்ப்போம்.

போட்டோ, வீடியோ, செயலிகளை லாக் செய்து எப்படி?

முதலாவதாக கீலே தறபட்டிருக்கும் ஆன்ராயிடு லாக்கர் செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை ஆரம்பித்து உங்களுக்கு தேவையான மாதிரி பின் அல்லது பேட்டர்ன் லாக் ஒன்றை தெரிவு செய்து கொள்ளுங்கள்.


இப்போது உங்களுக்கு தனிப்பட்ட போட்டோ வீடியோகளை லாக் செய்வதட்கான வசதி கிடைக்கும்.


அதே போல் உங்களது போனில் இருக்கும் செயலிகளை லாக் செய்து கொள்ளவும் முடியும்.


ஆகவே மிக இலகுவாக உங்களது ஆன்ராயிடு போனில் இருக்கும் அந்தரங்கங்களை பாதுகாக்க உதவும் இந்த லாக்கர் செயலியை இங்கே கிளிக் செய்து கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும். ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பில் அதிகளவான விளம்பரங்கள் காணப்படுகின்றன. அதனால் இந்த செயலியின் விளம்பரம் நீக்கப்பட்ட பதிப்பை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி இலவசமாக பெற முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் 'பதிவு 65' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.