இன்று எம்மில் பெரும்பாலனோர் பயன்படுத்தும் வாட்ஸ்அப், வைபர், டெலிக்ரம் போன்ற மெசஞ்சர் சேவைகள் தமது சேவையினூடாக பரிமாறப்பட்ட குறித்த மெசேஜ், எந்த நேரத்தில் அனுப்பப்பட்டது, எந்த நேரத்தில் படிக்கப்பட்டது என்பவை பற்றிய தகவல்களை எமக்கு துல்லியமாக காட்டுகின்றன.
மிகவும் பயனுள்ள ஒரு வசதியாக காணப்படுகின்ற போதிலும், சில வேலை குறித்த ஒருவர் எமக்கு அனுப்பிய செய்தி படிக்கப்பட்டுவிட்டதை அவர் தெரிந்து கொள்ள கூடாது என்ற தேவை ஏற்படலாம்.
வாட்ஸ்அப் மெசேஜ்-களை ஆன்லைன் செல்லாமல் வாசிப்பது எப்படி?
இதை கருத்தில் கொண்டு எமது தளத்தில் ஏற்கனவே வாட்ஸ்அப் மூலம் ஆன்லைன் செல்லாமல் மெசேஜ்-களை வாசிப்பது எப்படி என்ற உபாயத்தை எழுதி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் மேலே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
இதே போல் இன்றைய பதிவில் பேஸ்புக் மெசேஜ் படிக்கப்பட்டதாக வரும் சீன் ஐகான்-ஐ மறைப்பது எப்படி என்று பார்ப்போம்.
அதாவது உங்களது பேஸ்புக் நண்பர் ஒருவர் உங்களுடைய பேஸ்புக் கணக்கிற்கு அனுப்பும் குறித்த மெசேஜ்-ஐ நீங்கள் படித்த பின்னர், மெசேஜ் படிக்கப்பட்டுவிட்டதாக குறித்த நண்பருக்கு அனுப்படும் 'மெசேஜ் சீன்' வசதியை உங்களது கணக்கில் இருந்து ப்லொக் செய்வது எப்படி என்று விளக்கமாக பார்ப்போம். இதை கூகுள் க்ரோம் உலாவியில் இருந்து பேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக் மெசேஜ் சீன்-ஐ மறைப்பது எப்படி?
முதலாவதாக கீலே தறப்பட்டிருக்கும் எக்ஸ்டன்சன்-ஐ உங்களது பேஸ்புக் கணக்கிற்கு பெற்றுக்கொல்லுன்கள்.அடுத்து உங்களது பேஸ்புக் கணக்கின் செட்டிங்க்ஸ் பகுதிக்கு சென்றால், அங்கே இந்த எக்ஸ்டன்சன் உங்களது கணக்கில் நிறுவப்பட்டிருப்பதை காணலாம்.
அதை கிளிக் செய்தால் கீழே காட்டப்பட்டிருப்பது போல் திரை ஒன்று தோன்றும். அதிலே நான் சிவப்பு நிறத்தில் குறித்து காட்டியிருப்பதில் இருக்கும் டிக்-ஐ செயட்படுத்துங்கள்.
அவ்வளவு தான்..! இப்போது உங்களது பேஸ்புக் கணக்கில் மெசேஜ் சீன் நிறுத்தப்பட்டு விட்டது.
ஆகவே பேஸ்புக் மெசேஜ் சீன்-ஐ மறைக்கும் எக்ஸ்டன்சன்-ஐ இங்கே கிளிக் செய்து கூகுள் க்ரோம்-இற்கு தரவிறக்கி கொள்ள முடியும்.
இப்போது உங்களது நண்பர் ஒருவர் உங்களுக்கு பேஸ்புக் மூலம் அனுப்பும் மெசேஜ்-ஐ நீங்கள் படித்தாலும், குறித்த நண்பருக்கு அவருடைய மெசேஜ் படிக்கப்பட்டதாக தெரிய வர மாட்டாது. ஏனெனில் நீங்கள் உங்களது பேஸ்புக் கணக்கில் இருந்து காட்டப்படும் "மெசேஜ் சீன்" வசதியை நிறுத்தி விட்டீர்கள்.


